25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமீபத்திய நிகழ்வுகள்

Apr 06, 2024

இராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதியில் மணல் கொள்ளை

தேர்தல் கால பணிகளில் போலீசார், வருவாய் துறையினர், சம்மந்தப்பட்ட அலுவல்களை விட்டு ,முக்கிய தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவர். இதைச் சாதகமாக கொண்டு கண்மாய்களில் மணல் திருட்டு தடையின்றி நடைபெறுகிறது. கொள்ளையர்களை அதிகாரிகள் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை,   இதனால் மண்வளம் கேள்விக்குறியாகிறது என விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.

Mar 28, 2024

வெப்பக்காற்றினால் வற்றும் கண்மாய்கள்

இராஜபாளையம் சுற்று வட்டாரத்தில இந்த ஆண்டு தொடக்கத்தில் பருவ மழை வழக்கத்திற்கும் அதிகமாக பெய்ததால் பெரும்பாலான கண்மாயில் நீர் நிறைந்து காணப்பட்டது. இதனால் தரிசாக இருந்த கண்மாய் ஒட்டிய நிலங்களிலும் நெல் சாகுபடிபரப்பு அதிகரித்தது.இந்நிலையில் தன்ணீர் அதிகம் தேவைப்படும் நெல் நடவுப்பணிகள் நடந்து 10 முதல் 40 நாட்களை கடந்த நிலையில் வெப்பம் அதிகரித்து அனல் காற்றின் தாக்கமும், கூடியுள்ளது.இதனால் இராஜபாளையம் கடம்பன்குளம், கருங்குளம், சேத்தூர் மன்னர்முடி, அயன்கொல்லங்கொண்டான் பெரிய கண்மாய், தேவதானம், பெரியகுளம் வாண்டையார் குளம், உள்ளிட்ட பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. வழக்கமான பங்குனி மாத மழை இதுவரை பெய்யாததால் வெயிலின் தாக்கத்தால் மடை வழியே நீர் பாய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

Mar 21, 2024

அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவில் கொடியேற்ற வைபவம்

ராஜபாளையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திரெளபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் திருவிழா நடைபெற்று 13ஆம் தேதி பூக்குழி திருவிழா  நடைபெற உள்ளது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தி ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த கோவிலில் அருள்மிகு திரெளபதி அம்மன், ஸ்ரீ தர்மர், ஸ்ரீ பீமன், ஸ்ரீ அர்ஜுனன், ஸ்ரீ நகுலன் ஸ்ரீ சகாதேவன், பகவான் ஸ்ரீ கண்ணன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.2024 ஆம் வருடம் பங்குனி மாதம் நடைபெற உள்ள திருவிழாக்கள் வைபவங்கள் விபரம்.நாள் கால் வைபவம்2024ம் வருடம் 20.03.2024 பங்குனி மாதம் 7ம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நாள்கால் பூஜை செய்து வேலைகள் ஆரம்பிக்கும் வைபவம்.கொடியேற்றம் வைபவம்2024ம் வருடம் 03.04.2024 பங்குனி மாதம் 21 ம் தேதி புதன்கிழமை காலை 09.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் அம்மன் கொடியேற்றம் நடத்தும் வைபவம்.அக்னிபிரவேச, பூக்குழி வைபவம்2024ம் வருடம் 13.04.2024 பங்குனி மாதம் 31 ம் தேதி சனிக்கிழமை காலை 7.05 மணிக்கு மேல் 09.00 மணிக்குள் அக்னி பூஜைகள் ஆரம்பம்.அன்று மாலை 4.00 மணிக்கு மேல் 5.25 மணிக்குள் அம்மன் வீதி உலா வந்து பூக்குழி வைபவம்.2024ம் வருடம் 14.04.2024 சித்திரை மாதம் 01 ம் தேதி ஞாயிறுக்கிழமை மாலை 3.00 மணிக்கு மேல் 04.25 மணிக்குள் அம்மன் வீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு வைபவம்.மேலே கண்ட அனைத்து வைபவங்களிலும் அனைத்து திருவிழாக்களிலும் அனைவரும் கலந்து கொண்டு திருவிழா நன்கு நடைபெற ஒத்துழைப்பு கொடுத்து அம்மன் திருவருள் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தலைவர்,அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோவில் இராஜபாளையம்

Mar 19, 2024

ஜெயந்த் மலைவாழ் பழங்குடியினர் விடுதி ஆண்டு விழா

ஜெயந்த் மலைவாழ் பழங்குடியிணர் விடுதி ஆண்டு விழா இராஜபாளையம் ராம்கோ குரூப் பி.ஏ.சி. ஆர் சேதுராமம்மாள் டிரஸ்ட் சார்பில் நடந்தது. சிறந்த மாணவர்களுக்கு திருமதி நிர்மலா அவர்கள் விருது வழங்கினார் பி.ஏ.சி. ஆர். சேதுராமம்மாள் டிரஸ்டி திருமதி. சாரதா தீபா தலைமை வகித்தார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், பி.ஏ.சி.ஆர் கல்வி நிறுவன தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா, சுதர்சனம் மில் இயக்குனர் ராம்குமார் ராஜா, ராம்கோ டிரஸ்டிகள் செயலாளர்  குருசாமி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இயக்குனர் தேவராஜ் பங்கேற்று ராம்நகர், அத்திகோவில், வள்ளியம்மாள் நகர் ,செண்பகத்தோப்பு ,உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மலைவாழ் குடும்பங்களுக்கு ஆடைகள் வழங்கினர். விடுதி மேலாளர் முருகேசன் ஆண்டறிக்கை வாசித்தார். விடுதி காப்பாளர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Mar 11, 2024

கோதண்டராமர் கோயில் பிரம்மோற்ஸவ விழா

கோதண்டராமர் கோயில் பிரம்மோற்ஸவ விழா இராஜபாளையத்தில் கொடியேற்றத்துடன் நேற்று, மார்ச் 10 முதல் 10 நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் கொடியேற்றத்தை முன்னிட்டு ,அதிகாலை முதல் சுவாமிக்கு அபிஷேகம், பாராயணத்தை தொடர்ந்து, கொடி மரத்திற்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளை  தொடர்ந்து கொடியேற்றப்பட்டு, மகா தீபாரதனை காட்டப்பட்டது. மார்ச் 16-ல் திருக்கல்யாணம், 18-ல் தேர்த்திருவிழா நடைபெறும் விழாக்குழுவினர் கோயில் தர்மகர்த்தா சீனிவாச ராஜா தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர். 

Mar 11, 2024

சேக்கிழார் மன்ற அறக்கட்டளைசார்பில் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உதவி.

.இராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளை சார்பில் உலக நன்மை வேண்டியும், அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் உள்  நோயாளிகள் விரைவில் நலம் பெறவும் ,சிவபுராணம் உள்ளிட்ட பதிவுகள், பாராயணம் செய்யப்பட்டன. சுவாமிக்கு தூப தீப ஆராதனைகள் செய்து அறக்கட்டளை பொறுப்பாளர்கள் அரசுமருத்துவமனைக்கு சென்று உள் நோயாளிகளுக்கு பிரசாதம், வேட்டி, சேலை, பழங்கள் வழங்கினர். ஏற்பாடுகளை மன்ற தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார் .கவுரவ தலைவர் முத்துகிருஷ்ணன் ,செயலர் கணேசன், பொருளாளர் முத்தையா தலைமையில் உறுப்பினர்கள் செய்தனர்.

Feb 29, 2024

பிரதமர் மோடி தமிழகம் வருகை

மதுரை வீரபாஞ்சானில் சிறு, குறு நடுத்தர தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டில் நேற்று மாலை பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி இரவு 7.32 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி, இணை கமிஷனர் கிருஷ்ணன் வரவேற்றார்.பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. பொற்றாமரை குளத்தை பிரதமர் பார்வையிட்டார். அம்மன் சுவாமி சன்னதியில் வழிபட்டார். சிறப்பு பூஜை நடந்தது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின், என் மண் என் மக்கள் நடைபயணத்தின்நிறைவு விழா நேற்று திருப்பூரில் நடந்தது. ஹெலிபேடில் இருந்து திறந்த வாகனத்தில் வந்த மோடியை இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.நாட்டின் அரசியல் மாற்றத்தில் புதிய மையமாக தமிழகம் உருவாகிறது. லோக்சபா தேர்தலில் புதிய சரித்திரம் படைப்போம் என பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

Feb 27, 2024

ரூ.12 கோடியில் இராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பணிகளை பிரதமர் மோடி கானொளி மூலம் தொடங்கி வைத்தார்.

இராஜபாளையம் ரயில் நிலையம் அம்ரித் பாரத் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திறந்த வெளி கூரை, லிப்ட், பேரங்காடி பகுதி, புட், கோர்ட், குழந்தைகள் விளையாடும் பூங்கா, தனித்தனியாக நுழைவு, வெளியேறும் வாயில், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், காத்திருப்பு கூடம் போன்ற வசதிகளுக்கான பணிகள் நடைபெற உள்ளது. இவற்றை துவங்கியும், புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தையும் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்து விட்டார். துவக்க நிகழ்ச்சியை பிரதமர் மோடி கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். எம்.பி. தனுஷ் குமார், எம்.எல்.ஏ தங்கபாண்டியன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Feb 26, 2024

திருமங்கலம் to இராஜபாளையம் நான்கு வழிச்சாலை

திருமங்கலத்தில் இருந்து இராஜபாளையம் வரையுள்ள 71.6 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் திருமங்கலத்தில் இருந்து கிருஷ்ணன்கோவில் வரை ரோட்டில் இருபுறமும் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு இந்த வழித்தடமே உருமாறி காணப்படுகிறது. கிருஷ்ணன் கோவிலில் இருந்து வலையப்பட்டி, பாட்டக்குளம், மீனாட்சிபுரம் அச்சங்குளம், கடம்பன்குளம், தைலாகுளம், அத்திகுளம், செங்குளம் தெய்வேந்திரி, அயனாச்சியார்கோவில், பிள்ளையார்குளம், எஸ்.ராமலிங்காபுரம் வழியாக முதுகுடி வரை புதிய ரோடு அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.2025 மார்ச் மாதத்திற்கள், பணிகள் முடிவடைந்த, ஏப்ரல் மாதம் முதல் நான்கு வழிச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என நான்கு வழிச்சாலை திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Feb 23, 2024

ஹரிஷ் இன் புதிய தங்கும் விடுதி திறப்பு விழா

  ராஜபாளையம் மில்ஸ் ரோட்டில் ஹரிஷ் இன் புதிய தங்கும் விடுதி திறப்பு விழா ,நகராட்சி தலைவர் பவித்ரா திறந்து வைக்க ,சென்னை அடையார் ஆனந்த பவன் சேர்மன் வெங்கடேஸ்வரராஜா ,சீனிவாச ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.நகர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விடுதி உரிமையாளர் அழகு பாண்டியன் வரவேற்க ,டாக்டர் ஹரிஷ் நன்றி கூறினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News