25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


வெள்ளித்திரை

Mar 27, 2024

ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஷங்கர் திருமண கொண்டாட்டம்

விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்து.கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வெள்ளித்திரைக்கு வந்தவர் ரோபோ ஷங்கர்.இவரது மகள் இந்திரஜா ஷங்கர், விஜய்யின் பிகில் படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார்.கடந்த சில மாதங்களாகவே ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா திருமண கொண்டாட்டம் நடந்து வருகிறது. பல கோடி செலவில் தனது மகளின் திருமண விழாவை பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார் ரோபோ ஷங்கர்.இந்திரஜா தனது தாய்மாமன் கார்த்திக் என்பவரை தான் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமண ரிசப்ஷன் மார்ச்23, நடந்தது. பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் நடிகர் சூரியும் மணமக்களை வாழ்த்தி பேசினார்.மணமக்களுக்கு அறிவுரைகள் கூறிய சூரி, மேடைக்கு வந்ததுமே கவரில் பணக்கட்டுடன் மொய் வைத்திருக்கிறார்.அதை வாங்கிய ரோபோ சங்கர் ரொம்ப வெயிட்டா இருக்கே என ரியாக்ட் செய்தது அங்கிருந்த பிரபலங்களையும் சொந்தக்காரர்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.. 

Mar 27, 2024

கமல்ஹாசனின் இந்தியன் 3 - அப்டேட்

 உலகநாயகன்கமல்ஹாசன் நடிப்பில் 2022-ம் ஆண்டுவெளியான விக்ரம்படத்தை அடுத்து, இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் தக்லைஃப் ஆகியபடங்கள் தயாராகிவருகின்றன. நடிகர்கமல்ஹாசன் அரசியலில்ஈடுபட்டுவரும் அதேநேரத்தில் சினிமாவிலும்கவனம் செலுத்திவருகிறார். கமல்ஹாசன்இந்தியன்2 படத்தின்போஸ்ட் புரொடக்‌ஷன்பணிகள் நடந்துவருவதாகவும் இந்தியன்3 படத்தின் படப்பிடிப்புநிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்தியன்3 படத்தின் போஸ்ட்புரொடக்‌ஷன்வேலைகளைத் தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.இயக்குனர்மணிரத்னம் இயக்கத்தில்,‘தக் லைஃப்’படத்தில் நடிக்ககமல்ஹாசன் ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளார். இந்தபடம் பற்றிகமல்ஹாசன் பேசுகையில்,“மணிரத்னத்தின்‘தக்லைஃப்’ படப்பிடிப்புதேர்தல் பிரச்சாரம்முடிந்தவுடன் விரைவில்தொடங்கும். மேலும், கல்கி 2898 கி.பிஎன்ற படத்தில்கௌரவத் தோற்றத்தில்நடித்துள்ளதாகத் தெரிவித்தார்.இயக்குனர்ஷங்கர் இயக்கத்தில்கமல்ஹாசன் நடிப்பில்,1996ம் ஆண்டுவெளியான இந்தியன்திரைப்படம் மாபெரும்வெற்றி பெற்றது.தற்போது இந்தியன்2 படத்தில் கமல்ஹாசன்நடித்துள்ளார். இந்தபடத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியாபவானி சங்கர்,காஜல் அகர்வால்,சித்தார்த், ரகுல்ப்ரீத் சிங்,நெடுமுடி வேணு,விவேக், காளிதாஸ்ஜெயராம் உள்ளிட்டபலர் நடித்துள்ளனர்.

Mar 20, 2024

'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது

மஞ்சுமெல் பாய்ஸ்' கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது சென்னை, இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த22ம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் உலக முழுவதும் ரூ.175 கோடி வசூலை கடந்துள்ள நிலையில் மலையாள திரைப்படத்துறையில் உலக அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை மஞ்சுமெல் பாய்ஸ். படைத்திருக்கிறது .

Mar 20, 2024

கொள்ளுப் பாட்டி முதல் பேத்தி வரை நான்கு தலைமுறை. ஹீரோயின்ஸ்

குமாரி ருக்மணி முப்பதுகளின் இறுதி முதல் எழுபதுகளின் இறுதிவரை தமிழ் சினிமாவில் நடித்தவர்.குமாரி ருக்மணியின் தாய் ஜானகியும் நடிகைதான். பூர்வீகம் தஞ்சாவூர். ருக்மணியின் சின்ன வயதிலேயே அவர்கள் சென்னைக்கு குடியேறியிருந்தனர். ஹரிச்சந்திரா படத்தில்- பால்யகால லோகிதாசனாக   அறிமுகப்படுத்தினர் பிறகு சிந்தாமணி, பாலயோகினி, தேச முன்னேற்றம், ரிஷ்யசிருங்கர் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின் ஏவிஎம்மின் ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துக்கு ஜோடியாக நாயகியாக அறிமுகமானார். 1946 இல் ஒய்.வி ராவ் தயாரித்து, இயக்கி, நடித்த படத்தில் ருக்மணி அவரது ஜோடியாக நடித்தார். திருமணத்துக்குப் பிறகும் ருக்மணி தொடர்ந்து நடித்தார். எம்ஜிஆரின் தலைவன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தார். கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மணிவண்ணனின் அம்மாவாக சின்ன வேடத்தில் தோன்றியிருப்பார். ருக்மணி, ஒய்.வி.ராவின் மகள்தான் பிரபல நடிகை லட்சுமி. அம்மாவை விட  சினிமாவில் பேரும் புகழும் மகளுக்கு கிடைத்தன. சவாலான வேடங்களில் நடித்தார்.   அவரதுபாட்டி ஜானகியும் ஒரு நடிகை.அந்த வகையில் லட்சுமி அவர்கள் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை நடிகை. லட்சுமியின்'மகள் ஐஸ்வர்யாவும் நடிகை. அவர் நான்காவது தலைமுறை. அம்மா லட்சுமி, பாட்டி ருக்மணியின் அர்ப்பணிப்பு ஐஸ்வர்யாவிடம் இருந்திருந்தால் இன்னும் மேம்பட்ட நடிகையாக அறியப்பட்டிருப்பார். நான்கு தலைமுறை கலைக்குடும்பம், 

Mar 20, 2024

சிவகுமார் என்ற தனது பெயரை விஜயகுமார் என்று மாற்றிக் கொண்ட நடிகர்

கந்தன் கருணை படத்தின் மேக்கப் டெஸ்டுக்கு நடிகர் சிவகுமார் சென்றிருந்த நேரம், வேறொருவரும் வந்திருந்தார். அவர் பெயரும் சிவகுமார்.தமிழ் சினிமாவில் பெயர் குழப்பம் தொன்றுதொட்டே இருந்து வருகிறது இந்த இரண்டாவது சிவகுமாரின் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நெருக்கமானவர்.அவரை சந்திக்கச் சென்ற போது சிவகுமாரையும் அழைத்துச் சென்றுள்ளார். மேக்கப் டெஸ்ட் விஷயத்தை கலைஞரிடம் நண்பர் கூறியுள்ளார். உடனே கலைஞர் கருணாநிதி படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து, சிவகுமார் நம்ம பையன், அவனுக்கே வேடத்தை  கொடுத்துவிடுங்கள் என்றிருக்கிறார்.ஆனால், வாய்ப்பு இந்த இரண்டாவது சிவகுமாருக்கு கிடைக்கவில்லை. முதல் சிவகுமாருக்குதான் கிடைத்தது. கலைஞர் சிவகுமார் என்றுதான் சொன்னார், எந்த சிவகுமார் என்று சொல்லவில்லை. இந்த பெயர் குழப்பத்திற்குப் பிறகு இரண்டாவது சிவகுமாரும் தனது பெயரை விஜயகுமார் என்று மாற்றிக் கொண்டார். நாட்டாமை விஜயகுமார் தான் அவர்.

Mar 06, 2024

அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் தமிழ் இயக்குநர் அட்லீ

சமீப நாட்களாக பேசப்பட்டு வரும் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானிமகனின் திருமண கொண்டாட்டத்தில், இயக்குநர் அட்லீ தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்ட்டுக்கும் சூலை மாதம் திருமண நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மார்ச்1 முதல்3 வரை நடைபெறும் நிகழ்ச்சிகள் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது.குஜராத்தின் ஜாம் நகர் கோலாகலமாக உள்ளது. பல்வேறு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ளனர். இந்த நிலையில் பிரபல தமிழ் இயக்குநர் அட்லீ, தனது மனைவி ப்ரியா மற்றும் மகன் மீர் உடன் அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளார். தனது மகனின் முகத்தை முதல் முறையாக அவர் கமெரா முன் காட்டியுள்ளார். மூவரும் நிகழ்ச்சியில் தோன்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.தமிழில் வெற்றிப்படங்களை கொடுத்த அட்லீ, இந்தியில் ஷாரூக் கானை வைத்து எடுத்த''ஜவான்'' திரைப்படம்1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. 

Mar 06, 2024

ஹீரோக்களை விட  அழகாக  இருக்கும் 5 இயக்குனர்கள்..

 சினிமாவை பொருத்தவரை அழகு எந்த அளவுக்கு முக்கியமோ அதே மாதிரி திறமையும் இருந்தால் வெற்றி பெற முடியும் என்று பலரும் நிரூபித்துக் காட்டி வருகிறார்கள். இருந்தாலும் சிலரை பார்க்கும் பொழுது அழகாக  இருக்கிறாரே, ஹீரோவை விட சூப்பரா இருக்கிறாரே என்று நினைக்கத் தோன்றும். அந்த மாதிரி சில ஐந்து இயக்குனர்கள் ஹீரோக்களை தாண்டி  அழகாக இருக்கிறார்கள். .ராஜமவுலிதெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் இவர் எடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி வெற்றி பெற்று விடுகிறதுஅப்படி இவர் எடுத்து அனைத்து திரையுலகத்தையும் திரும்பி பார்க்க வைத்த படங்களான மகதீரா, நானி,பாகுபலி, ஆர்ஆர்ஆர். இப்படி பல படங்களை எடுத்த திறமையான இயக்குனர். அத்துடன் இவர் கதாநாயகனாக நடித்தாலும் ஹீரோ மாதிரி மக்கள் மனதை வென்று விடுவார்.தென்னிந்திய சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவர் இதுவரை 12 படங்களை இயக்கியுள்ளார். அதில் இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி வெளிவந்த குண்டூர் காரம் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. இந்த இயக்குனரை பார்ப்பதற்கு 52 வயது போல தெரியாது அந்த அளவிற்கு இளமை துள்ளலுடன் ஹீரோ மாதிரி ஜொலித்து வருகிறார்.மோகன்ராஜா முக்கால்வாசி ரீமேக் படங்களை எடுத்து பல ஹிட் கொடுத்தவர். அந்த வகையில் முதன் முதலில் தென்காசி பட்டணம் படத்தை தெலுங்கில் ரீமேக் பண்ணி வெற்றி பெற்றார். அதன் பிறகு ஜெயம் ரவிக்கு ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற பல படங்களை வெற்றியாக கொடுத்தார். தற்போது தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுத்து சீக்கிரம் ரிலீஸ் பண்ண வேண்டும் என்று ஜெயம் ரவி அண்ணனுடன் சண்டை போட்டு வருகிறார். மேலும் மோகன் ராஜாவை பார்ப்பதற்கும் ஒரு ஹீரோ மாதிரி தான்  இருக்கிறார்.மகிழ்திருமேனி தமிழில்" முன்தினம் பார்த்தேன்" என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். அதன் பின் தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலக தலைவன், தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை எடுத்து வருகிறார். இதற்கிடையில் நடிகராகவும் டெடி படத்தில் டாக்டர் வரதராஜன் ஆக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் ராஜன் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கும் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எப்பொழுதெல்லாம் கேப் கிடைக்கிறதோ அப்ப எல்லாம் ஆசையை நிறைவேற்றி வருகிறார்.கார்த்திக் நரேன்இயக்குனராக அறிமுகமான முதல் படமே கிரைம் த்ரில்லர் படமாக துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய அனைவரது கவனத்தையும் பெற்றார். அதன் பின் மாஃபியா மாறன் போன்ற படங்களை கொடுத்தார். இதற்கிடையில் அரவிந்த்சாமி வைத்து நரகாசுரன் படத்தை இயக்கி வருகிறார். 

Feb 28, 2024

ரஜினியுடன் நான்கு படங்களில் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்

எந்திரன் படத்தில் ரஜினியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அதற்கு முன் அவருடன் இணைந்து நடிக்க4 பட வாய்ப்புகளை நிராகரித்தார். ஐஸ்வர்யா ராய்1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். அதன் பிறகு அவரை சினிமாவிற்குள் கொண்டு வந்தவர் இயக்குநர் மணிரத்னம்.1997 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கோலிவுட்டில் நுழைந்தார்.தொடர்ந்து ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த்திற்கு ஜோடியாக நடித்தார். அதுவும் இரட்டை வேடங்களில் அற்புதமாக நடித்து இருந்தார். கண்டு கொண்டானே கண்டு கொண்டானே, குரு, ராவணன், எந்திரன் படத்திற்கு பிறகு சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட். தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்து உள்ளார். ஷங்கர் இயக்கிய இந்த மெகா படத்தில் சனா என்ற கேரக்டரில் நடித்து கவனத்தை ஈர்த்தார். ஐஸ்வர்யா ராய், சூப்பர் ஸ்டாரின் விருப்பமான நடிகைகளில் ஒருவர், எனவே அவருக்கு ஜோடியாக நடிக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்.எந்திரன் மூலம் அது நிறைவேறியது. எந்திரனுக்கு முன், ரஜினிக்கு ஜோடியாக நான்கு படங்களில் ஐஸ்வர்யா ராய்யை நடிக்குமாறு அணுகினர். பல்வேறு காரணங்களால் ஐஸ்வர்யா ராய் அந்த நான்கு படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அந்த நான்கு படங்களின் பெயர்களை கேட்டால் அதிர்ந்து போவீர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அவரை அணுகிய முதல் படம் படையப்பா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய்யை நாயகியாக நடிக்க இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முடிவு செய்து இருந்தார். ஆனால் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க மறுத்துவிட்டார். அடுத்து அவர் பாபாவின் வாய்ப்பை நிராகரித்தார். அது மனிஷா கொய்ராலாவுக்குச் சென்றது.பின்னர் பி.வாசு இயக்கிய சந்திரமுகி, ஷங்கர் இயக்கிய சிவாஜி ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார். அவர் மறுத்த இந்த நான்கு படங்களில் மூன்று பிளாக் பஸ்டர் ஹிட் என்பது  குறிப்பிடத்தக்கது.

Feb 28, 2024

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ரூ.400 கோடி பட்ஜெட் படம்

 இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை செய்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக400 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தின் மொத்த பட்ஜெட்400 கோடி என்றும் கூறப்படுகிறது.ஏஆர் முருகதாஸ் ஏற்கனவே அமீர்கான் நடிப்பில் உருவான’கஜினி’ அக்ஷய் குமார் நடிப்பில் உருவான’ஹாலிடே’ மற்றும் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவான’அகிரா’ ஆகிய பாலிவுட் திரைப்படங்களை இயக்கிய நிலையில் தற்போது மீண்டும் மாஸாக பாலிவுட் திரையுலகில் ரீ என்ட்ரி ஆக உள்ளார்..

Feb 28, 2024

ரூ 5,000 சம்பளத்தில் புக் ஆன சரோஜா தேவி;

.தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பி.சரோஜா தேவி. தங்கமலை ரகசியம், திருமணம், மனமுள்ள மருதாரம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படம் தான் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. எம்.ஜி.ஆர் படத்தில் இவர் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டவுடன் அடுத்தடுத்து அவருக்கு 30 பட வாய்ப்புகள் குவிந்துள்ளது.கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் தனது அம்மாவுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட சரோஜா தேவி, மகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்து ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடு என்று அவரது அம்மா கூறியுள்ளார்.அவரின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அடுத்து ஒரு படத்தில் நடித்த சரோஜா தேவி, மீண்டும் பெங்களூர் சென்று தனது பள்ளி படிப்பை தொடர முடிவு செய்துள்ளார். அந்த நேரத்தில், தமிழ் இயக்குனரான கே.சுப்பிரமண்யம், தான் கன்னடத்தில் இயக்க உள்ள கட்ச தேவயானி என்ற படத்தில் சரோஜா தேவி நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட, அம்மாவின் வற்புறுத்தலால் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய சரோஜா தேவி அந்த படத்தில் நடித்திருந்தார்.இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து சரோஜா தேவிக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது. அதன்பிறகு தான், தமிழில் திருமணம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து சிவாஜியின் தங்கமலை ரசகியம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான செங்கோட்டை சிங்கம் படம் தான் சரோஜா தேவி நாயகியாக நடித்த முதல் படம்.அதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் இயக்கிய கல்யாணப்பரிசு படத்தில் நடித்த சரோஜா தேவி, 1961-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் திருடாதே படத்தில் இவருடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக சரோஜா தேவிக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ5000. அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் படத்திலும் சரோஜா தேவியே நாயகியாக நடித்த நிலையில், அதன்பிறகு அடுத்தடுத்து 30 படத்திற்கு தனக்கு வாய்ப்பு வந்ததாக நடிகை சரோஜா தேவி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்..

1 2 ... 46 47 48 49 50 51 52 ... 59 60

AD's



More News