25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


80 வயதிலும் 20 வயதுபோல் இருக்க இஞ்சி பால் (Ginger Milk )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

80 வயதிலும் 20 வயதுபோல் இருக்க இஞ்சி பால் (Ginger Milk )

இஞ்சி பால் -தேவையான பொருட்கள்

பால் – ஒரு டம்ளர் (காய்ச்சியது அல்லது காய்ச்சாதது எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)

சோம்பு – ஒரு ஸ்பூன்

பனங்கற்கண்டு – ஒரு ஸ்பூன்

இஞ்சி – ஒரு துண்டு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் காய்ச்சிய பால் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலர் பால் பிடிக்காது என்று கூறுவார்கள். ஆனால் நாம் அன்றாட வாழ்வில் பால் சேர்த்துக்கொள்வதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான கால்சியத்தை இந்த பால் வழங்குகிறது. பசும்பால் கிடைத்தால் நல்லது. பால் பிடிக்காவிட்டால் பால் சம்மந்தப்பட்ட உணவை தினமும் சேர்த்துக்கொள்வது நல்லது.

இதைக் குடிப்பதால் கை-கால் வலி, முதுகு வலி, ரத்தபற்றாக்குறை, உடல்பலவீனம், உடல சோர்வு, உடல் பருமன் எதுவுமின்றி 80 வயதிலும் 20 வயதுபோல் ஆரோக்கியத்துடன்சுறுசுறுப்புடனும் வாழலாம். அஜீரண கோளாறு, வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், கால்சியம்குறைபாடு ஆகியவற்றையும் சரிசெய்யும்

பாலை அடுப்பில் வைத்து அதில் சோம்பையும் சேர்க்க வேண்டும்.சோம்பு வெறும் வாசனை பொருள் மட்டுமல்ல, அது வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், அஜீரணகோளாறு ஆகிய பிரச்னைகளையும் தீர்க்கிறது.குளிர்காலத்தில்ஏற்படும் சளித்தொல்லை மற்றும் சுவாசகோளாறுகள் ஏற்படும் அல்லது ஆஸ்துமா நோயாளிகள் அதிகம் அவதிப்படுவார்கள். அவர்கள் அதிகம் சோம்பு எடுத்துக்கொள்வது நல்லது. அவர்களுக்கு அந்த பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.

குழந்தைபெற்றதாய்மார்கள் அதிகளவில்சோம்பு எடுத்துக்கொள்ளும்போது, அவர்களுக்கு தாய்ப்பால்சுரக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்குஇது அருமருந்தாகவும்உள்ளது.சோம்பில் அதிகளவில் வைட்டமின் சிசத்து நிறைந்துள்ளது. அது உடலில் உள்ள ரத்தச்சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரிக்கிறது.உடலில் உள்ள நீர்கோர்க்கும் குறிப்பாக திசுக்களில் நீர் கோர்க்கும்போது அவர்களுக்கு உடலில் சோர்வு மற்றும் வலி, அசதி ஆகியவை ஏற்படும். அவர்கள் சோம்பு எடுத்துக்கொள்ளும்போது அவை நீங்கும்.

கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி அதை சுத்தம் செய்ய உதவுகிறது. நமது நரம்புகளுக்கு வலு சேர்க்க உதவுகிறது. ஏனெனில் இதில் நிறைய கால்சியம் மற்றும் மெக்னீசிய சத்துக்கள் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் இது வழங்குகிறது.பின்னர்சுத்தம் செய்தஇஞ்சி ஒருதுண்டு சேர்க்கவேண்டும். அஜீரணகோளறை சரிசெய்யும். உடலில் இருக்கக்கூடியநச்சுக்களை வெளியேற்றும். ரத்தத்தை சுத்திகரிக்கும். வாயுத்தொல்லையை சரிசெய்யும். இஞ்சியை எப்போதும் தோல் நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.இதைநன்றாக 5 நிமிடம்கொதிக்கவிட்டு, வடிகட்டிஎடுத்துக்கொள்ள வேண்டும். அதன் சாறுபாலில் இறங்கவேண்டும்.இதில் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு எனஎதுவேண்டுமானாலும் சேர்த்து பருகலாம். 

பால்ஆறியபின் சேர்க்கவேண்டும். இல்லாவிட்டால்பால் திரிந்துவிடும்.இந்தப்பாலை இரவில் அருந்தும்போது, இஞ்சிக்கு பதில் சுக்குப்பொடி சேர்த்து பருகவேண்டும். காய்ந்த இஞ்சிதான் சுக்குப்பொடி. காலையில் பருகும்போது இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம்.இதைவாரத்து இரண்டுமுறை எடுத்துக்கொண்டாலேபோதும் உங்கள்உடலுக்கு தேவையானஅனைத்து ஊட்டச்சத்துக்களும்கிடைக்கும்.உடலில் வாயுத்தொல்லை இருக்காது. நரம்பு மண்டலம் வலுப்பெறும். வயிறு உப்புசம் இருக்காது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும். வயிறை நன்றாக சுத்தம் செய்யும். உடலை ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் வைத்துக்கொள்ள உதவும். எலும்புகளுக்கு நல்ல உறுதியைக்கொடுக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News