25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


வெள்ளித்திரை

Feb 21, 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்ட எஸ்.கே.21’ முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்’எஸ் கே21’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீர் உள்பட பல பகுதிகளில் நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வரும்17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்ப அதிர்ச்சியாக இன்றே இது குறித்து அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இது குறித்து வெளியான வீடியோவில்  இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்று மாலை ஒரு செம்ம விருந்து காத்திருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் ரிலீஸ் ஆக உள்ளது .

Feb 21, 2024

நடிகர் ராம் சரண் மகள் கிளின் காராவை பார்த்துக் கொள்பவருக்கு  மாதம் ரூ. 5 லட்சம் சம்பளம்

தெலுங்கு திரையுலகில் மெகா குடும்பம் சிரஞ்சீவியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துவிட்டார் ராம் சரண் .ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா நடிகராக வலம் வரும் இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் 2012ம் ஆண்டு உபாசனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணம் ஆகி 11 ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்தவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது, குழந்தைக்கு கிளின் காரா என பெயரிட்டுள்ளனர்.ராம் சரண் மற்றும் உபாசனா அவரவர் தொழிலில் பிஸியாக இருப்பதால் சாவித்ரி என்ற பெண்ணை குழநதையை பராமரிக்க நியமித்துள்ளனர்பாலிவுட் நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் குழந்தையைபராமரித்த இவர் தற்போது ராம் சரண் குழந்தையை பார்த்து வருகிறார்.அதற்காக இவருக்கு மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் வழங்கி வருகிறார்களாம். 

Feb 21, 2024

ஜெயம் ரவி நடிப்பில் சைரன் திரைப்படம்

வித்தியாசமானகதைக்களம் கொண்டபடங்களை தேர்ந்தெடுத்துநடிக்கும் ஜெயம்ரவி. இவர்நடிப்பில் கடந்த 16ஆம் தேதிவெளிவந்த திரைப்படம்சைரன். இப்படத்தைஅறிமுக இயக்குனரானஆண்டனி பாக்யராஜ்இயக்கியிருந்தார்.இப்படத்தில் ஜெயம்ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் சைரன்திரைப்படம் உலகளவில்இரண்டு நாட்களில்ரூ. 6 கோடிக்கும்மேல் வசூல்செய்துள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த இறைவன் படம் படுதோல்வியடைந்த நிலையில், சைரன் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படமும் அவருக்கு சரியான வெற்றியை தேடி தரவில்லை என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Feb 21, 2024

'பரோட்டா' சூரிடூ “சூரி என்று வளர்ந்து நிற்கிறார்

'வெண்ணிலா கபடிக் குழு' படத்தில்'பரோட்டா' காட்சியில் பிரபலமானதால்'பரோட்டா' சூரி என்று அழைக்கப்பட்டு பிரபலமானார் சூரி. தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து'விடுதலை' படத்தின் மூலம் கதாநாயகனாகவும் உயர்ந்தார்.'பரோட்டா' சூரி இப்போது'பட விழாக்களின்' சூரி என்று வளர்ந்து நிற்கிறார்.கடந்த மாதக் கடைசியில் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெற்ற 53வது சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடித்த'விடுதலை, ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. அதற்காக அப்படக் குழுவினருடன் அந்தத் திரைப்பட விழாவில் சூரி கலந்து கொண்டார்.அடுத்து ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும்74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சூரிந டித்துள்ள'கொட்டுக்காளி' படம் திரையிடப்பட்டுள்ளது. பிப்ரவரி15முதல்25வரை இத்திரைப்பட விழா நடைபெறுகிறது. பிப்ரவரி16ம் தேதி இப்படம் அங்கு திரையிடப்பட்டது. அடுத்து பிப்ரவரி18,19,20,25 ஆகிய நாட்களிலும் திரையிடப்பட உள்ளது. அதற்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்பனையாகிவிட்டன.இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து சூரி,“உலக அரங்கில் கொட்டுக்காளி!! பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் படத்தை பார்த்து கொண்டாடியது பெரும் மகிழச்சி! நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர் தம்பி வினோத்ராஜுக்கும், தம்பி சிவகார்த்திகேயனுக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Feb 14, 2024

4 சூப்பர் ஸ்டார்களுடன் இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பம்

இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பமாக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்கள்தான்.  அல்லு-கொனிடேலா குடும்பம்தான் நாட்டின் பணக்கார சினிமா குடும்பம் இந்தியாவில் வர்த்தகம் முதல் அரசியல் வரை அனைத்து துறைகளிலும் குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது.அந்தவகையில், சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நடிகர்கள் முதல் தயாரிப்பாளர்களை வரை தங்களது வாரிசுகளை சினிமா துறையில் களம் இறக்கி சினிமா குடும்பங்களாக மாறி விடுகின்றனர்.இந்தியா முழுவதுமாக ஒவ்வொரு மொழி திரைப்படத்துறையிலும் சினிமா குடும்பங்கள் உள்ளன. இந்த சினிமா குடும்பங்களில் மிகவும் பணக்கார திரைப்பட குடும்பம் தெலுங்கு சினிமாவை சேர்ந்ததுஇந்த குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு, கபூர்கள் மற்றும் அக்கினேனிகளை காட்டிலும் அதிகமாகும். இந்த தெலுங்கு சினிமா குடும்பத்தில் 4 சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர்.தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்கள்தான்.  அல்லு-கொனிடேலா குடும்பம்தான் நாட்டின் பணக்கார சினிமா குடும்பம்.தெலுங்கு சினிமா துறையில் மெகா குடும்பம் என்ற அழைக்கப்படும் அல்லு- கொனிடேலா குடும்பத்தின் ஆதிக்கம் அதிகம். இந்த மெகா குடும்பம் இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட குடும்பங்களில் ஒன்றாகும்.தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவரான அல்லு ராமலிங்கய்யாவால்1950ல் மெகா குடும்பம் உருவானது.அவருடைய பிள்ளைகள் மூலம் தெலுங்கு சினிமாவில் இந்த குடும்பம் வலுவாக தடம்பதித்தது. அல்லு ராமலிங்கய்யாவின4 பிள்ளைகளில், அரவிந்த் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக ஆனார். மகள் சுரேகா தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சிவீயை மணந்தார்.அல்லு ராமலிங்கய்யாவின் குடும்ப உறுப்பினர்களின் திருமணம் அவர்களது வாரிசுகள் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு பல நட்சத்திரங்கள் .உதாரணமாக ராம் சரண், அல்லு அர்ஜூன், நாகேந்திர பாபு, வருண் தேஜ் சாய் தரம் தேஜ் மற்றும் பல நடிகர்கள் தெலுங்கு சினிமாவுக்கு கிடைத்தனர்.இந்த கூட்டு குடும்பத்தின் மொத்த கணக்கில் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அரவிந்த் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோரின் பங்களிப்பு பெரியது. மெகா குடும்பத்தின் புகழ்பெற்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பை மொத்தமாக பார்த்தால் சொத்து மதிப்பு ரூ.6,000 கோடியாக உள்ளது.தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்கள்தான். அல்லுகொனிடேலா குடும்பம்தான் நாட்டின் பணக்கார சினிமா குடும்பம்., கீதா ஆர்ட்ஸ், அஞ்சனா புரொடக்ஷன்ஸ், பவன் கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ், கொனிடேலா புரொக்டக்ஷன்ஸ் கம்பெனி உள்பட5 திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அல்லு ஸ்டுடியோ ஆகியன உள்ளன. மேலும் இந்த குடும்பத்தில் 4 சூப்பர் ஸ்டார்களும் உள்ளனர்.

Feb 14, 2024

சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் 2வது மகள்ப்ரீத்தா மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்

சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் 2வது மகள்ப்ரீத்தா மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். ப்ரீத்தா பிசினஸில் படு பிசியாக இருந்து வருகிறார்.இவர்1998ம் ஆண்டு சந்திப்போமா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.தெலுங்கு, மலையாள படங்களில் அவர் நடித்தாலும், தமிழில் படையப்பா படத்தில் ரஜினியின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து சுயம்வரம், அல்லி அர்ஜுனா, புன்னகை தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.தொடர்ந்து2002ம் ஆண்டு இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு3 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை நிறுத்திய ப்ரீத்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் ப்ரீத்தா பிசினஸில் படு பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி என்னும் இடத்தில் ப்ரீத்தா பேலஸ் என்ற மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் ஒரே நேரத்தில் 300 முதல் 500 பேர் பங்கேற்க முடியும். இந்த கல்யாண மண்டபம் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே மெட்ராஸ் காபி ஹவுஸ் என்ற சிற்றுண்டி உணவகத்தையும் ப்ரீத்தா தொடங்கினார். இந்த உணவகத்தில் வேலை செய்யும் அனைவரும் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. ஈசிஆர் நெடுஞ்சாலையில் இருப்பதால் இந்த உணவகம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே பிசினஸ் பிக்அப் ஆகிவிட்டது.இவை தவிர எடிட்டிங், டப்பிங் ஸ்டுடியோ ஒன்றையும் ப்ரீத்தா நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு சென்னை சாலிகிராமத்தில் குட்லக் என்ற பெயரில் இந்த ஸ்டுடியோ இயங்கி வருகிறதுஇந்த ஸ்டூடியோவை நடிகர் சூர்யா திறந்து வைத்தார். இப்படி கல்யாண மண்டபம், உணவகம், டப்பிங் ஸ்டுடியோ என ப்ரீத்தா மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். 

Feb 07, 2024

சூர்யா – ஜோதிகா ஜோடிக்கு பெருமை சேர்த்த மகள் தியா

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் சூர்யா-. ஜோதிகாஜோடிக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர்.இவர்கள் இருவருடைய படிப்பிற்காக தான் சூர்யா, ஜோதிகா மும்பையில் சில காலம் தங்கி இருக்கிறார்கள். அது முடிந்தவுடன் தமிழ்நாட்டிற்கு வந்துவிடுவோம் என ஜோதிகா கூறியிருந்தார்., சூர்யா, ஜோதிகா மகள் தியா மற்றும் தேவ் பள்ளியில் Sports Day நடந்துள்ளது. அப்போது தியா தனது அணியுடன் இணைந்துSportsDay கோப்பையை வென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஜோதிகா பதிவு செய்துள்ளார்.தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து தியா மற்றும் தேவ் இருவரையும் குறிப்பிட்டு 'உங்கள் இருவரால் எங்களுக்கு பெருமை' என கூறியுள்ளார் ஜோதிகா...

Feb 07, 2024

2024ம் ஆண்டில் உருவாகும் சூர்யா -சிவா இயக்கத்தில் கங்குவா

சினிமாவில் பிரம்மாண்டங்களை நம்பி படம் எடுப்பவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். ஷங்கர், ராஜமௌலி என இந்தப் பட்டியலின் நீளம் அதிகம். ராஜமௌலி துவங்கிவைத்த ட்ரெண்ட், தற்போது ஏராளமான இயக்குநர்கள் பிரம்மாண்டத்தின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். பாகுபலி படத்தை துவங்கி தற்போது அதிகமான வரலாற்று படங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழிலேயே அடுத்தடுத்த வரலாற்று கதைக்களங்களில் படங்கள் அறிவிக்கப்பட்டு டைரக்ட் செய்யப்பட்டு வருகின்றன. சூர்யா -சிவா இயக்கத்தில் தற்போது கங்குவா படத்தின் சூட்டிங் ஆல்மோஸ்ட் நிறைவடைந்துள்ளது.இந்தப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பொருட்செலவுடனும் இயக்கி முடிக்கப்பட்டுள்ளது. கமர்ஷியல் இயக்குநராக ரசிகர்களை கவர்ந்த சிவா, இந்தப் படத்தில் தன்னுடைய பிரம்மாண்ட வித்தையை களமிறக்கியுள்ளார். சர்வதேச அளவில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களின் மவுசு காணப்படுகிறது. நம்மால் இயங்க முடியாத மாய உலகை இந்தப் படங்களின் மூலம் ரசிகர்கள் எக்ஸ்பீரியன்ஸ் செய்துக் கொள்வதே இந்தப் படங்களின் வெற்றி. அந்த வகையில் இந்திய அளவிலும் இதுபோன்ற பல பேன்டசி படங்களை பார்க்க முடிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலங்களிலேயே தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இதுபோன்ற படங்கள் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் வரலாற்று பின்புலத்தில் தற்போது அதிகளவில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.ராஜமௌலியின் பாகுபலி படங்கள்: ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் அதன் தொடர்ச்சியாக வெளியான பாகுபலி 2 ஆகிய படங்கள் அந்த காலத்தில் மக்கள் இப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் என்ற பிம்பத்தை ரசிகர்களுக்கு கொடுத்தன. படத்தின் நடிகர்கள், நடிகைகளின் தேர்வும் இந்தப் படங்களின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, ராணா என இந்தப் படத்தின் நடிகர்கள் அந்த கேரக்டர்களாகவே மக்களால் பார்க்கப்பட்டனர். சர்வதேச அளவில் இந்தப் படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்தது இந்தப் படங்களின் மேக்கிங்கிற்கு கிடைத்த வெற்றி.அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள்: இந்தப் படங்கள் கொடுத்த வெற்றி மற்றும் வரவேற்பு காரணமாக தொடர்ந்து அடுத்தடுத்த வரலாற்றுப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழில் சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா படம் இயக்கி முடிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தை இயக்குநர் சிவா இயக்கி முடித்துள்ளார். கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ள இந்தப் படம் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் படம் உருவாகவுள்ளது. படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Jan 31, 2024

நெப்போலியன் மனைவி சுதாவின் 51வது பிறந்த நாளை எளிமையாக வீட்டில் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்

நடிகர் நெப்போலியன் சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.அங்கு தன்னுடைய மனைவி சுதாவின் 51வது பிறந்த நாளை எளிமையாக வீட்டில் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்.அதோடு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் குறித்த அந்த பதிவில் சில வார்த்தைகளை நெப்போலியன் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகராக இருந்திருக்கிறார். இவருடைய நடிப்பு மட்டுமல்லாமல் இவர் பாடிய ஒரு சில பாடல்களும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் அந்த "எட்டு பட்டி ராசாவை" இப்போதும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள். ஒல்லியான தேகத்தோடு பெரிய முறுக்கு மீசை வைத்து மிரட்டும் பார்வையால் இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போனவர்கள் ஏராளம். சின்னத்தாயி, ஊர் மரியாதை, எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, தென்காசி பட்டணம், விருமாண்டி என பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.அந்த காலகட்டத்தில் சரத்குமார், ரஜினிகாந்த்,கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்துக் கொண்டவர் தான். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கிய நெப்போலியன் திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் தான். அந்த நேரத்தில் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக அரசியலை விட்டு விலகிய நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். அங்கு சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர் விவசாயத்தையும் செய்து வருகிறார். அதுபோல நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மீது தீராத காதலோடு இருக்கும் நெப்போலியன் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவியின் 51 வது பிறந்தநாள் பங்க்ஷனை கொண்டாடி அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் நண்பர்களே டிசம்பர் 24 , 2023. எனது மனைவியின் 53வது பிறந்தநாள்.மூத்த சகோதரர் மற்றும்  மைத்துனருடன், எங்கள் குடும்ப நண்பர் வழக்கறிஞர் ஆசிரியரின் இல்லத்தில் கொண்டாடினோம் என்று தகவல் தெரிவித்து இருந்த நிலையில் ,இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதோடு நெப்போலியன் எப்போதும் குடும்பத்தோடு இப்படி பல ஆண்டுகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது பலருடைய ஆசீர்வாதமாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக கட்டிய மருத்துவமனையில் பல பேர் சிகிச்சை பெற்று நலம் பெற்று வரும் நிலையில் அவர்களும் நெப்போலியனின் மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Jan 31, 2024

இயக்குனர் பிரபு சாலமன் கும்கி 2

இயக்குனர் பிரபு சாலமன்எடுத்தமைனா, கும்கி படங்களில் இயற்கை சம்பந்தமான கதையும், காடு மற்றும் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கும்.இயக்குனர் பிரபு சாலமன் எடுக்கும் படங்களை நம்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் போய் பார்க்கலாம்.  அந்த வகையில் மைனா, கும்கி சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது .பிரபு சாலமன் இயக்கிய காடன் மற்றும் செம்பி போன்ற படங்க  எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை  . 18 வருஷத்துக்கு பின்தற்போது கும்கி இரண்டாம் பாகத்தின் கதையை வைத்து எடுத்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக மற்றொரு படத்திற்கும் கதையை தயார் செய்து விட்டார்.ஆனால் அந்த படத்திற்கு தற்போது முதல் முறையாக யானைக்கு பதிலாக சிங்கத்தை வைத்து எடுக்கப் போகிறாராம். எப்படி கும்கி படத்தில் யானை இருந்ததோ, அதே மாதிரி சிங்கத்தை வைக்கலாம் என்ற யோசனை. ஆனால் அதற்கு சிங்கம் சரிப்பட்டு வருமா? என்பது தான் ஒரு கேள்வி.ரோஜா கம்பைன்ஸ்நிறுவனம்பிரபு சாலமன் மீது இருக்கும் நம்பிக்கையால் ஓகே சொல்லி இருக்கிறார்.இந்த படத்திற்கான ஹீரோ மற்றும் ஹீரோயின்களை தேர்ந்தெடுத்து வருகிறார். இதற்கிடையில் கும்கி படத்தின் பார்ட்2 படபிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பை இந்த ஆண்டுக்குள் முடித்துவிட்டு டிசம்பர் மாதம் வெளியிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக பிரபு சாலமனின் அடுத்த படைப்பு ஆரம்பமாக போகிறது..

1 2 ... 47 48 49 50 51 52 53 ... 59 60

AD's



More News