ஆகஸ்ட் மாதம் நிறையபடங்கள் வெளியாகும் என்பதன் முன்னோட்டமாக வரும் ஆக., 2 ல் "போட், ஜமா, மழை பிடிக்காத மனிதன், நண்பன் ஒருவன் வந்த பிறகு, பேச்சி, வாஸ்கோடகாமா 'ஆகிய 6 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் யோகி பாபுவின் போட், புதியவர் பாரி இளவழகனின் ஜமா மற்றும் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத பிடிக்காத மனிதன் ஆகிய படங்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளன.
மகேஷ்பாபு 1000 குழந்தைகளுக்கு உயிர் வழங்கிய டாப் ஹீரோ வருசத்துக்கு 30 கோடி நன்கொடை.மகேஷ்பாபு தனது ஆண்டு வருமானத்தில் 30 சதவிதம் ந ன்கொடையாக வழங்கி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் ஆண்டுக்கு 25-30 கோடி ரூபாய் பணத்தை தொண்டு செயல்களுக்கு பயன்படுத்துகின்றார். இன்று வரை இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அத்தியாவசிய இருதய அறுவை சிகிச்சையை வழங்கியுள்ளார்.இதுகெல்லாம் ஒரு நல்ல மனசுவேணும்.
நடிகை ஸ்ரீதேவி பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் பாலிவுட்டில் போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் சென்னையில் அவருக்கென்று ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.ஸ்ரீதேவி மறைந்த பிறகு, அவர் வாழ்ந்த அந்த வீட்டை மீண்டும் புணரமைத்தார் போனி கபூர். முன்பை விட பிரம்மாண்டமாய் மாற்ற பட்ட இந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்து ஏர்பிஎன்பி என்ற தளத்தில் வெளியிட்டுள்ளார் அவரது மகளான ஜான்வி .அம்மாவை போலவே ஜான்வி படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டு, தற்போது பாலிவுட்டில் இருந்து தெலுங்கிற்கு நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஸ்ரீதேவி இங்கிருந்து பாலிவுட் வரை சென்று கலக்கினார். அவரது மகளான ஜான்வி பாலிவுட்டில் இருந்து தென்னிந்தியாவில் கலக்குவார் என்று எதிர்பார்க்க படுகிறது.இந்த வீட்டை மீண்டும் பெரிய செலவில் புதுப்பித்துள்ளார்கள். வீட்டில் கலை பொருட்கள், ஓவியங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் போனி கபூர். இவர் ஒரு தயாரிப்பாளர் என்பதால் இவரின் சென்னை அலுவலகத்தையும் இங்கேயே வைத்துள்ளார்கள்.இந்த வீட்டில் தங்க வருபவர்களுக்கு தென்னிந்திய உண்வுகள் பரிமாறப்படும். மேலும் ஆந்திர பிரியாணி முதல் தோசை வரை மெனுக்கள் வைத்துள்ளார்கள். மேலும் காலையில் அழகான கடற்கரை காட்சியுடன் யோகா பயிற்சியும் வழங்கப்படும் என ஜான்வி அந்த தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்த வீட்டில், அழகான நீச்சல் குளம் மற்றும் சோபாக்கள் என அனைத்தும் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார்கள்.மேலும்வீட்டின்முன்புறம்பெரியதாமரையில்செயற்கையானநீர்வீழ்ச்சிஅமைத்துவருபவர்களைகவரும்வகையில்செய்துள்ளார்கள்.பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த இந்த வீடு இப்போது முழுவதும் தயாராகி உள்ளது. இந்த வீட்டில் தங்க குறிப்பிட்ட அளவில் மட்டுமேஅனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பிரம்மாண்ட வீடு சென்னை இ சி ஆரில் உள்ள அக்கரை என்ற இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் அஜித்குமாரின்விடாமுயற்சி சூட்டிங் தொடர்ந்துதள்ளி போய் வருகிறது.இந்தப் படத்தின் சூட்டிங்மே மாதம் முதல் வாரத்தில் துவங்கஉள்ளதாக கூறப்பட்ட சூழலில்ஷூட்டிங் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னுடையஅடுத்த படமான குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கைமுன்னதாகவே அதாவது மே மாதம்10ம்தேதியே துவங்க அஜித் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில்ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்துவங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போதுமுழுவீச்சில் நடந்து வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங்முன்னதாக ஜூன் மாதத்தில்துவங்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் விடாமுயற்சிசூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போவதால் இந்த படத்தைமுன்னதாகவே துவங்கலாம் என்று அஜித் திட்டமிட்டுஅதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. ஆதிக் ரவிச்சந்திரன்இயக்கத்தில் உருவாக உள்ளதுகுட் பேட் அக்லி.இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாஇணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஆனால் அவர் அஜித்துக்குஜோடியாக இல்லாமல் படத்தில்இணைய உள்ள மற்றொருஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கஉள்ளதாக கூறப்பட்டுள்ளது.குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்குஜோடியாக மீனா அல்லதுசிம்ரன் இணையலாம் என்றும்அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும்கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்த படத்தின் சூட்டின்துவங்குவதற்கு முன்னதாகவே இந்த படத்தின் வெளிநாட்டுஉரிமையை படத்தை தயாரித்துவரும்மைத்ரி மூவி மேக்கர்ஸ்நிறுவனம், 22 கோடி ரூபாய்க்குபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்குவிற்றுள்ளதாக தற்போது தகவல்கள்வெளியாகி உள்ளன. அஜித்திற்குசர்வதேச அளவில் மிகப்பெரியமார்க்கெட் காணப்படும் சூழலில்அவரது படத்தின் வெளிநாட்டுஉரிமை விற்றுள்ளது பெரிய விஷயம் இல்லை என்று கோலிவுட்தரப்பில் கூறப்பட்டுள்ளது.தயாரிப்பு தரப்பின் வேலைகளில்தலையிடாமல் அஜித் நடந்துக்கொண்டு வருவது தயாரிப்புதரப்பில் அவருக்கு மிகப்பெரியநன்மதிப்பை பெற்றுத் தந்து வருகிறது. அஜித்தின்துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில்வெளியான சூழலில் அவரது அடுத்தப்பட ரிலீசுக்காகரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் தான் அமரன். இப்படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் சிவா. மேலும் சாய் பல்லவி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸுடன் முதல் முறையாக இணைந்துள்ள சிவகார்த்திகேயன்திரைப்படம் எஸ்.கே23. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னடத்தில் வெளிவந்த ஏழுகடல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ருக்மிணி தான் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இந்த நிலையில், இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து டான் எனும் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் சிபி சக்ரவத்தி.இப்படத்திற்குபின் இவர் ரஜினியைவைத்து இயக்க போகிறார்என கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இப்படியிருக்க மீண்டும் சிவகார்த்திகேயனைவைத்து இயக்கப்போகிறாராம் சிபி. அதற்கானவேலைகள் தற்போது நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் மட்டுமல்லாமஸ் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தான். ஃபோர்ப்ஸின் அறிக்கையின்படி, பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு ரூ.40 கோடி வரை சம்பளம்அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பான சிட்டாடல் வெப் சீரிஸுக்கு ரூ40 கோடி சம்பளம் பெற்றதாககூறப்படுகிறதுஇந்தியாவில்,அவர் ஒரு படத்திற்கு ரூ.14.20 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.ஆலியா பட், கரீனா கபூர், அனுஷ்கா ஷர்மா மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் என அனைவரும் 10 முதல் 20 கோடி வரை சம்பளம்.
தமிழ் திரையுலகில் சமீப காலமாக ரூ.100 கோடி700 கோடி வரை படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால் முன்பெல்லாம் கோடிகளில் வசூல் செய்யும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.அந்த வகையில்,2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ.50 கோடி வசூல் பார்த்த நடிகர் ,தரணி இயக்கத்தில்2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒக்கடு திரைப்படத்தை கில்லி என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தனர்.விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது.திரைக்கதை, வசனம், பாடல், ஆக்ஷன் காட்சிகள் என ஒட்டுமொத்த படத்தையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிற தான் தொலைக்காட்சியில் வெளியானது. அந்த அளவிற்கு இந்த படம் திரையரங்குகளில் நீண்ட நாள் ஓடியது.8 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.50 கோடி வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது. அப்போதைய காலகட்டத்தில் ரூ.50 கோடி வசூல் என்பது தமிழ் சினிமாவில் பிரம்மிக்க வைக்கும் வசூலாக இருந்தது.கில்லி படத்தில் நடித்ததன் மூலம், முதன் முதலில் தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூல் பார்த்த முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றார் நடிகர் விஜய்.20 வருடங்கள் கழித்து தற்போது கில்லி படம் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும்320 திரையரங்குகளில் கில்லி திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷின் மகன்யாத்ரா12ஆம்வகுப்பு பொதுதேர்வு எழுதிஇருந்தார். இந்தமுடிவுகள் திங்கள்கிழமையான நேற்று வெளியானது. இதில்யாத்ரா நல்லமதிப்பெண்கள் எடுத்துள்ளதாகஇணையத்தில் தகவல்ஒன்று வைரலாகிவருகிறது. எனினும்இது குறித்தஅதிகாரப்பூர்வ தகவல்கள்இன்னும் வெளியாகவில்லை.: தன்னைவிட இரண்டு வயது குறைந்தவரான தனுஷை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். மகன்களுக்காக இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தநிலையில், அண்மையில் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடி உள்ளனர். அப்படி அப்பா, அம்மாவின் விவகாரத்து ஒருபுறம் சென்று கொண்டு இருக்க, தனுஷின் மூத்த மகன் யாத்ரா பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது., அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தென் திரைப்படங்கள் மட்டுமல்ல, அதன் நட்சத்திரங்களும் அந்தஸ்தில் வளர்ந்துள்ளன. இதேபோல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நட்சத்திரங்களும் இந்தி திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்துள்ளனர். பான் இந்தியா படங்களின் வளர்ச்சியே இந்திய சினிமா வரலாற்றில் வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் கமல்ஹாசன் இன்று தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர். அறிக்கைகளின்படி, கமல்ஹாசனின் நிகர மதிப்பு சுமார்$70 மில்லியன்(ரூ450 கோடி) ஆகும். தற்போது ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் கமல்ஹாசனும் இடம்பெற்றுள்ளார்.பாக்ஸ் ஆபிஸ் பொறுத்தவரை ரஜினிகாந்துக்கும், தளபதி விஜய்க்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு நடிகர்களும், தமிழ் பணக்கார நடிகர்கள் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளனர். ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு சுமார்450 கோடி என்றும், விஜய்யின் சொத்து மதிப்பு 410 கோடி என்றும் கூறப்படுகிறது.100 கோடிக்கு மேல் நிகர மதிப்புள்ள மற்ற சூப்பர் பணக்கார தமிழ் நட்சத்திரங்களில் அஜித் குமார் (ரூ 350 கோடி), சூர்யா (ரூ 300 கோடி), கார்த்தி (ரூ 110 கோடி), தனுஷ் (ரூ 160 கோடி), மற்றும் மாதவன் (ரூ 115 கோடி) ஆகியோர் இந்த பட்டியலில் அடங்குவார்கள்.இவர்களை விட கமல்ஹாசன் மேலே இருக்கக் காரணம், விக்ரம்(மட்டும்400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது) போன்ற சொந்த வெற்றிப் படங்களைத் தயாரித்த அவரது படத் தயாரிப்பு நிறுவனத்தின் வெற்றிதான். இது ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்றவர்களை முறியடிக்க உதவியது என்றே சொல்லலாம்.பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சன் நடித்துள்ள நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமான கல்கி 2898 AD இல் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இந்தியன்2, மணிரத்னத்தின் தக் லைஃப் ஆகிய படங்கள் விரைவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவர உள்ளது.
.பல வருடங்களாக சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில், சமீப காலத்தில் நடிகைகளும் நடிகர்களுக்கு இணையாக சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். தற்போது திரிஷா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் ஒரு படத்திற்கு ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றனர். இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் ஒரு நடிகை வெறும் 3 நிமிட பாடல் காட்சியில் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் ஊர்வசி ரவ்துலா.பாலிவுட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வருகிறார் ஊர்வசி ரவ்துலா. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறி பரபரப்பை கிளப்பிய இவர், பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட், டோலிவுட் போன்ற தென்னிந்திய திரையுலகிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம்‘தி லெஜண்ட்’. படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஊர்வசி..தி லெஜண்ட் படத்தில் ஹீரோயினாக நடிக்க படக்குழு முதலில் அணுகியது நடிகை நயன்தாராவை தான். ஆனால் அவரோ எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டதால், அவருக்கு இணையான சம்பளத்தை கொடுத்து ஊர்வசி ரவ்துலாவை அப்படத்தில் நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. லெஜண்ட் படத்திற்கு பின்னர் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 109-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி., அவர் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய விவகாரம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ராம் பொத்தினேனி நடிப்பில் வெளிவந்த ஸ்கந்தா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ,வெறும்3 நிமிட பாடலுக்காகஆடி ரூ.3 கோடி சம்பளமாகவாங்கி இருக்கிறார் .நயன்தாரா, திரிஷா கூட இந்த அளவுக்கு சம்பளம் வாங்காத நிலையில், ஊர்வசி ரவ்துலா இந்த அளவுக்கு அதிக சம்பளம் வாங்கி உள்ளது தென்னிந்திய திரையுலகில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது