25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


வெள்ளித்திரை

May 08, 2024

40 வயதிலும் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் திரிஷா

தமிழில்மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம் ஆகியமொழி திரைப்படங்களிலும்நடிக்கிறார். மேலும்பாலிவுட்பக்கமும் கவனம்செலுத்த துவங்கியுள்ளார். திரிஷா40 வயதாகியும்20 ஆண்டுகளாகதிரையுலகில் பயணித்துமார்க்கெட்டில் உச்சத்தில்இருக்கும் திரிஷாவிஜய்யின் Goat திரைப்படத்திலும்ஒரே ஒருபாடலுக்கு நடனமாடியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.பிஸியானநடிகையாக மாறியுள்ள திரிஷா, தற்போது ஒரு படத்தில்நடிக்க ரூ.12 கோடி வரைசம்பளம் வாங்கிவருவதாக தகவல்வெளியாகியுள்ளது. தென்னிந்தியஅளவில் அதிகம்சம்பளம் வாங்கிநடிகை திரிஷாதான் எனகூறுகின்றனர்., சம்பளவிஷயத்தில் நடிகைஐஸ்வர்யா ராய்யைதிரிஷா மிஞ்சிவிட்டார்என தகவல்கூறப்படுகிறது. ஐஸ்வர்யாராய் ஒருபடத்தில் நடிக்கரூ. 10 கோடிமுதல் ரூ. 12 கோடி வரைசம்பளம் வாங்கிவருகிறாராம்.ரூ. 776 கோடி சொத்துமதிப்பு வைத்திருக்கும்ஐஸ்வர்யா ராய், இந்தியாவின் பணக்காரநடிகை எனஅழைக்கப்படுகிறார். ஆனால்,சம்பள விஷயத்தில்அவருக்கு இணையாகதற்போது திரிஷாவந்துவிட்டார் எனதிரை வட்டாரத்தில்பேசப்பட்டு வருகிறது.நடிகை திரிஷா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தனர் 

May 01, 2024

 ஹரி - விஷால்  கூட்டணியில் “ரத்னம் “திரைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம் ரத்னம். கமர்ஷியல் கிங் என தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார்.இதுவரை ஹரி- விஷால் கூட்டணியில் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்கள் வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே வரவேற்பை ரத்னம் படம் பெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.இந்த நிலையில், ரத்னம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் வெளிவந்த முதல் நாளில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளது . 

May 01, 2024

கில்லி ரீ ரிலீஸ் சாதனை படைத்தது

விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. 20 வருடத்திற்கு பிறகு கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ள போதும், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு சற்றும் குறையாததால், படத்தை தியேட்டரில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். இப்படம் ரீ ரிலீஸ் ஆன அனைத்து தியேட்டரிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இருபது ஆண்டுகளுக்கு முன் தியேட்டரில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து திரையில் சக்கை போடு போட்ட திரைப்படங்களை மீண்டும் கையில் எடுத்து ரீ ரிலிஸ் செய்ய தொடங்கியுள்ளது தமிழ் சினிமா. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ச்சியாக பழைய படங்கள் ரீ ரிலிஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆளவந்தான், முத்து, வாரணம் ஆயிரம், 3, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது விஜய், த்ரிஷா கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ளதுஇருபது  ஆண்டுகள் கழித்தும் இப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் பலரும் குடும்பமாக சென்று படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இப்படி இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதால் வசூல் ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளிலே 4 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்து ரீ ரிலீஸ் செய்த படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்து இருக்கிறது கில்லி.இப்படம் உலகளவில் ரூ. 24 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்றும், படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும், இப்படத்தின் வசூல் குறையாததால், கில்லி திரைப்படம், 50 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கில்லி திரைப்படத்தை இயக்கிய தரணி மற்றும் அப்படத்தின் இசையமைப்பாளரான வித்யாசாகர் கில்லி படம் ஓடும் திரையரங்கிற்கு சென்று படத்தை கண்டு மகிழ்ந்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

May 01, 2024

நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கோடி ருபாய் நன்கொடை கொடுத்த நெப்போலியன்

நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டும் பணிகள் பணம் இல்லாத காரணத்தால் நின்று இருந்தது. அதனை தொடர்ந்து விஜய் ஒரு கோடி ரூபாயும், கமல் ஒரு கோடி ரூபாயும் அளித்து இருந்தனர்.இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன்50 லட்சம் ருபாய் வழங்கினார். தற்போது கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கோடி ருபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அதற்காக நடிகர் சங்கம் அவருக்கு நன்றி கூறி இருக்கிறது.நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி பல நூறு ஏக்கரில் விவசாயமும் அங்கு செய்து வருகிறார். 

May 01, 2024

தமிழ் சினிமாவில் முதல் 100 கோடி RS வாங்கிய நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திரிஷா மற்றும் நயன்தாரா வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் ஹீரோக்களுக்கு சமமாக சம்பளம் வாங்கி வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.சுமார்20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக நடித்து வரும் திரிஷா மற்றும் நயன்தாரா, பெண்களுக்கு முக்கியத்துவம் கதைகளை பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.திரிஷாவும் நயன்தாராவும் என்னதான் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும், தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ.100 கோடி வசூலித்தபடத்தில் நடித்தவர்கள் இவர்கள் இருவருமே இல்லை. தமிழ் சினிமாவில் முதன் முதலாக ரூ.100 கோடி வசூலித்த படத்தில் நடித்தது நடிகை ஸ்ரேயா தான்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படம் தான் அது.இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடித்திருப்பார்.சுமார் ரூ80 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரூபாய்160 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. 

Apr 24, 2024

விஜயகுமாரின்மகள் அனிதாவிஜயகுமார் தனதுமகளின் திருமணத்தைபிரம்மாண்டமாக நடத்திமுடித்துள்ளார்

நடிகர் விஜயகுமாரின் குடும்பம் மிகவும் பிரபலமானது.. அவருடைய இரண்டு மனைவிகளுக்கும் தலா மூன்று குழந்தைகள். கவிதா, அனிதா, அருண் விஜய் ஆகியோர் மூத்த மனைவி முத்துக்கண்ணுக்கு பிறந்தவர்கள். இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீதா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர்.அனிதாவைத் தவிர விஜயகுமாரின் வாரிசுகள் அனைவரும் படங்களில் நடித்துள்ளனர். அனிதாவுக்கு சினிமாவில் ஆர்வம் இல்லாததால் மருத்துவம் படித்துவிட்டு டாக்டராக பணியாற்றி வருகிறார். அனிதா விஜயகுமாருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் மகள் வுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.அனிதா விஜயகுமார் தனது மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளார். தியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. நடிகை நயன்தாரா திருமணம் நடைபெற்ற மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தியாவின் திருமணமும் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.திருமணம் முடிந்து விட்டாலும் திருமண கொண்டாட்டங்கள் இன்னும் ஓயவில்லை. அனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது மகளின் திருமணத்திற்காக உழைத்த உறவினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ராஜ விருந்து அளித்தார்.இந்தநிலையில் இயக்குனர்ஷங்கரின் மூத்தமகள் திருமணம்இன்று நடைபெற்றது.அதில் தந்தைவிஜயகுமார், மகள்கள்அனிதா விஜயகுமார், பிரீதா, ஸ்ரீதேவிமற்றும் பலர்கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள்சமூக வலைத்தளங்களில்வைரலாகி வருகிறது...

Apr 24, 2024

ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில்அடுத்த படமான “குட் பேட் அக்லி” படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். படம்2025ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.பிரபலநடிகர் அஜித்- திரிஷா நடிக்கும் புதிய படம் விடாமுயற்சி. இதனைஇயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில்வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இப்படத்தைலைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இதன் படப்பிடிப்புகள் கடந்தஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது.தொடர்ந்து3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள்சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. சில வாரங்களுக்கு முன்வெளியாகிய அஜித் கார் ஓட்டும் ஸ்டண்ட் காட்சி சமூக வலைத்தளங்களில் மிகவும்வைரலாகியது. இந்நிலையில்ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தைமைத்ரிமூவி மேக்கர்ஸ்தயாரிக்கின்றனர். படம்2025ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. படத்தில்அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியது.மகேஷ்பாபு நடித்த குண்டூர் காரம் படத்தின் கதாநாயகியான ஸ்ரீலீலா'குட் பேட் அக்லி' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. இந்ததகவல் ரசிகர்களிடையே மிகப்பெரியஉற்சாகத்தை உண்டாக்கியுள்ளது.

Apr 24, 2024

பாலிவுட்டில் தோல்விகளுடன் வாழ்க்கையைத் தொடங்கிய இந்தியாவின் பணக்கார நடிகை ஐஸ்வர்யா ராய்

மாதுரி தீட்சித், கரீனா கபூர் கான்ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர், தோல்விகளுடன் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய பல நடிகைகள், பின்னர் தங்கள் சக்திவாய்ந்த நடிப்பால் பொழுதுபோக்குத் துறையை ஆண்டார்கள்..உலக அழகி போட்டியில் வென்ற பிறகு, ஐஸ்வர்யா ராய் நடிகையாக மாற முடிவு செய்வதற்கு முன்பு மாடலிங் செய்து கொண்டிருந்தார். நடிகை மணிரத்னத்தின் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானார். இது விமர்சன ரீதியாக வெற்றியைப் பெற்றது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. பின்னர் அவர் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து அவுர் பியார் ஹோ கயாவில் பாபி தியோலுடன் நடித்தார்.இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியடைந்தது. அவரது அடுத்த ரிலீஸ் ஆ அப் லாட் சலேனும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இருப்பினும், அவர் சஞ்சய் லீலா பன்சாலியின் ஹம் தில் தே சுகே சனம் படத்தில் நடித்தார். இது அவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.பின்னர் மொஹப்பதீன், தால், தேவதாஸ், தூம்2 போன்ற பல வெற்றிகள் மற்றும் பிளாக்பஸ்டர்களில் நடித்தார். மேலும் அவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன்I மற்றும்II பாகங்களில் நடித்து முன்னணி நடிகை என்று நிரூபித்தார். இருப்பினும், பல படங்களில் இருந்து நடிகை நீக்கப்பட்ட ஒரு கட்டமும் இருந்தது.ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஷாருக்கானுடன் நடித்தார். தகவல்களின்படி, ஐஸ்வர்யா ராய்800 கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார். மேலும் அவர் இந்திய பணக்கார நடிகை ஆவார். , நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை. .ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

Apr 10, 2024

நடன புயல் பிரபுதேவா

காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் நடித்தார். இந்தியாவின் சிறந்த நடன அமைப்பாளர் பிரபுதேவாவின் கோரியோ கிராஃபியயில் அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்துவார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்தார் 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரபுதேவா இருந்தார். காதல் கொண்டேன் படத்துக்கு ஹீரோவாக நடிக்க முதலில் செல்வராகவன் பிரபுதேவாவைத்தான் அணுகினார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனா; இருப்பதிலேயே ரொம்பவும் கடினமான கோரியகிராஃபர் என்றால் அது பிரபுதேவாதான் என கூறினார்பிரபுதேவா இந்தியாவில் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி பல படங்களில் ஹீரோவாக நடித்து அப்ளாஸை அள்ளிய அவர் வெற்றிகரமான இயக்குநர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். அவர் தமிழில் இயக்கிய போக்கிரி திரைப்படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. தற்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்துவருகிறார் பிரபுதேவா. ஒரு நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர்..நடிகர், நடன அமைப்பாளராக கலக்கிவந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. அதனையடுத்து தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். பிரபுதேவாவை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்தன. தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு கிட்டத்தட்ட 100லிருந்து 150 கோடி ரூபாய்வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் சொகுசு வீடுகளும் இருக்கின்றன. இதற்கிடையே, பிரபுதேவா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி மனோஜ் என்.எஸ்.இயக்க பிரபுதேவாவுடன் யோகிபாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோரும் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர் .

Apr 10, 2024

கார் மீது அதிகம் ஆர்வம் உடைய  “ புஷ்பா “ நாயகன் அல்லு அர்ஜுன் .

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் சிறுவயதிலேயே சினிமாவில் நடித்து வரும் இவருக்கு கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஹிட் கொடுக்கும் வகையில் படங்கள் அமைந்து வருகிறது.அல்லு அர்ஜுன் கேரியரில் மைல் கல் ஆக அமைந்த படம் தான் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் மிரள விட்டிருந்தார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் ஒரு படத்திற்கு சுமார்100கோடி வரைசம்பளம் பெற்று வருகிறார். விளம்பரங்களில் நடிக்க நான்கு கோடி வரை அல்லு அர்ஜுனுக்கு கிடைக்கிறது.ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனுக்கு சொகுசு பங்களா  மதிப்பு  100 கோடி ஆகும் இருக்கிறது. அல்லு அர்ஜுன் 80 கோடி மதிப்பில் சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ளார். 450 கோடி மதிப்பில் அல்லு அர்ஜுனுக்கு சொத்து உள்ளது.மேலும் கார் மீது அதிகம் ஆர்வம் உடைய அல்லு அர்ஜுன் ஐந்து வகையான கார்களை வைத்திருக்கிறார்.7 கோடி மதிப்பிலான ஃபால்கான் என்ற வேனிட்டி வேன் வைத்துள்ளார். மேலும் 6.5 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ், 1.78 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் கார்களும் இருக்கிறது.மெர்சிடிஸ், ஜாகுவார் 99 லட்சம் மற்றும் ஹம்மர் 75 லட்சம் போன்ற கார்களும் அல்லு அர்ஜுன் கைவசம் இருக்கிறது. தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்த வசூல் மன்னனாக புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் வலம் வர இருக்கிறார்.

1 2 ... 45 46 47 48 49 50 51 ... 59 60

AD's



More News