விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தி கோட்'. வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசையமைத்துள்ளார். ஆக., 17ல் டிரைலர் வெளியானது. 24 மணிநேரத்தில் 33 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு வெளிவந்த தமிழ் டிரைலர்களில் விஜய்யின் 'லியோ' 32.7 மில்லியன் பார்வைகளை பெற்றது.நடிகர் விஜய் - ன் "தி கோட்" டிரெய்லர் வெளியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு பேசுகையில் நடிகர் அஜித் அவர்கள் படத்தின் டிரெயிலரை பார்த்து விட்டு சூப்பரா இருக்குடா.! உனக்கும் விஜய்க்கும் நல்லா செட் ஆகியிருக்கு டா. விஜய்க்கும் படக்குழுவினருக்கும் என்னோட வாழ்த்துக்களை சொல்லிடு என்று மெசேஜ் அனுப்பியதாக கூறியுள்ளார். இந்தப்படத்தில் இனி சத்தியமாகக் குடிக்கக் கூடாது என்ற மங்காத்தா அஜித் டயலாக்கை விஜய் பேசியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
தங்கத்தை தேடி எடுக்கவெள்ளையர்களுக்கு உதவும் தங்கலானாகசியான் விக்ரம் படம் முழுவதும் தனது ஒட்டுமொத்த நடிப்பையும்வெளிக்காட்டி விட்டார். இந்த படத்தை சியான்விக்ரமின் நடிப்புக்காக மட்டுமேரசிகர்கள் தாராளமாக தியேட்டர்களுக்குசென்று பார்க்கலாம்.கோலார் பகுதியில் தங்கத்தைதேடி பல அரசர்கள்அலைந்த நிலையில், ஆங்கிலேயர்களும்தங்கத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.வட ஆற்காடு பகுதியில்வேப்பூர் கிராமத்தில் உள்ள மக்கள் தான் தங்கத்தை எடுக்கசரியான ஆட்கள் என ஆங்கிலேய துரையானகிளெமண்ட்(டேனியல் கால்டாகிரோன்)தங்கலான்(சியான் விக்ரம்)இருக்கும் கிராமத்துக்கு வருகிறான். தங்கலான்தனது மனைவி கங்கம்மா(பார்வதி) மற்றும் தனது குழந்தைகள், மக்கள் என விவசாயம் செய்துவாழ்ந்து வருகிறார்.ஆனால், அந்த பகுதியில்உள்ள ஜமீன்(முத்துகுமார்)மக்களிடம் இருந்து நிலத்தைஅபகரித்து அவர்களை அந்த நிலத்திலேயே அடிமைகளாகவேலை வாங்கி வருகிறார்.இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைபெற வேண்டுமென்றால் வெள்ளைக்காரனுக்கு தங்கம் தேடுவதில்உதவி செய்ய வேண்டும்என பசுபதி, ஹரி உள்ளிட்ட சிலருடன்தங்கலான் ஆனை மலைக்குசெல்கிறார். தங்கத்தை பற்றியும் அதை காக்கும் நாகர் இன தலைவி ஆரத்தி பற்றியும்தனது குழந்தைகளுக்கு விக்ரம் கதை சொல்லும் வழியாகதங்கலானின் பாட்டன் காடயன்ஆரத்தியை வீழ்த்தி சோழ மன்னனுக்கு எப்படிதங்கத்தை எடுத்துக் கொடுத்தான்என்கிற கதையை காட்டுகின்றனர். தங்கத்தை எடுத்துக் கொடுத்தால்வெள்ளைக்காரன் நம்மை மேன்மைப்படுத்துவான், நம் அடிமை விலங்குஅகன்று போகும் என தனது மக்களுடன்போராடும் தங்கலானுக்கு தங்கம்கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின்கதை. அப்போகலிப்டா,அவதார் படங்களை போல தமிழில் ஒரு பெரும் முயற்சியாகஇந்த தங்கலான் பேசப்படும். ஆஸ்கர்விருது கிடைக்கக் கூடிய நடிப்பை சியான்விக்ரம் கொடுத்திருக்கிறார். படத்திற்கு தேவையானகூஸ்பம்ப்ஸ் இசையை ஜி.வி. பிரகாஷ்கொடுத்திருக்கிறார்.நடிகர்கள்: சியான்விக்ரம், பார்வதி, மாளவிகாமோகனன், பசுபதிஇசை: ஜி.வி. பிரகாஷ் குமார்இயக்கம்: பா. ரஞ்சித்'தங்கலான்'. வெளியான முதல்நாளில் உலகளவில் ரூ.26.44 கோடி வசூலித்தது. இது குறித்து விக்ரம் 'புரிந்து கொள்ள முடியாத இந்த அன்புக்கு நன்றி. இதைவிட சிறப்பாக வேறு எதையும் கேட்க முடியாது. கோடி நன்றிகள்" எனத் தெரிவித்தார்.
காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறிய சூரி. கொட்டுக் காளி, ஏழு கடல் ஏழு மலை, விடுதலை 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. அடுத்து வெப் தொடரில் களமிறங்குகிறார். சூரி நடிக்கும் இந்த தொடருக்கு அவரே கதை எழுதி உள்ளதாக தெரிகிறது. விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார். மதுரையில் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
மகாராஜா படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடி யோஸ் நிறுவனத்திற்கே அடுத்த படத்தையும் இயக்குகிறார் நித்திலன். மகாராணி என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடி வசூலித்தது. பலரும் இந்த படத்தை பாராட்டினர்.
தமன் இசையில் விஷால், மிருணாளினி நடித்த 'எனிமி' படப் பாடலான 'டம் டம்' 600 மில்லியன் சாதனையைப் கடந்துள்ளது.தமிழ் சினிமா பாடல்களில் 1500 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது மாரி 2 பட பாடலான'ரவுடி பேபி'. யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ், தீ பாடினர். இதற்கு அடுத்து அனிருத் இசையில் விஜய்யின் பீஸ்ட் படப் பாடலான 'அரபிக் குத்து' 621 மில்லியன் பார்வைகளுடன் இரண் டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவதாக 'டம் டம்' 600 மில்லியன் சாதனையைப் கடந்துள்ளது.
இப்போதைக்கு அரசியலுக்கு வரும் ஆசை இல்லை,நடிப்பு மட்டும் தான். எதிர் காலத்தில் அரசியல் ஆசை வரலாம், வராமலும் போகலாம்" என்றார்.சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரகு தாத்தா' படம் ஆக., 15ல் ரிலீஸாகிறது. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ் ''எனக்கு பிடித்த ஊர் மதுரை. மல்லிப்பூ, மீனாட்சி அம்மன் கோயில் என பிடித்தமான நிறைய விஷயங்கள் உள்ளன. இந்த படத்தில் பெண்ணியத்திற்காக போராடும் பெண்ணாக நடித்துள்ளேன். கலாசாரம் என்ற பெயரில் பெண் கள் மீது திணிக்கப்படும் விஷயங்களை காட்டி உள்ளோம். ஹிந்தி திணிப்பு பற் றியும் ஆங்காங்கே பேசியிருக்கிறோம். ஆனால் எதுவுமே சீரியஸாக இருக் காது. முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி உள்ளோம்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் போலீஸாக நடிக்கும் அவரின்25வது படமான'ஸ்பிரிட்' விரைவில் துவங்க உள்ளது. இதன் பட்ஜெட்மட்டும் ரூ.300 கோடி.. இதில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க உள்ளார். இன்னொரு நாயகியாக திரிஷாவும் நடிக்க போகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே பிரபாஸ் உடன் வர்ஷம், புஜ்ஜி காடு, பவுர்ணமி ஆகிய படங்களில் திரிஷா இணைந்து நடித்துள்ளார்.
2016ல் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் அவர் நடித்த படம் மிருதன். ஜாம்பிஸ்களை மையமாக வைத்து வெளியான இந்த படம் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம்8 ஆண்டுகளுக்கு பின் உருவாக உள்ளது. இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. இதுதவிர ஜெயம் ரவியின் தனி ஒருவன்2 படமும் ஆரம்பமாக உள்ளது. ஜெயம் ரவி நடித்துள்ள'பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை' ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.
ஹிந்தியில் வரவேற்பை பெற்ற 'அந்தாதூன்' படம் தமிழில் அந்தகன்' என்ற பெயரில் ரீமேக்ஆகி உள்ளது. பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ளார். ஆக., 15ல் படம் ரிலீஸ் என அறிவித்தனர். அந்தசமயம் விக்ரமின் 'தங்கலான்', கீர்த்தி சுரேஷின் 'ரகு தாத்தா' மற்றும் அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' ஆகிய படங்களின் வெளியீடும் அறிவிக்கப்பட் டுள்ளது. இதனால் நான்கு படங் களுக்கும் கணிசமான தியேட்டர் கிடைக்குமா என்ற சூழல் இருந்தது. இதனால் அந்தகன் ரிலீஸை ஆக., 9க்கு மாற்றிவிட்டனர்.
ராமாயணம் கதையை படமாக இயக்க திரையுலகை சார்ந்த பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டு 'ஆதி புருஷ்' படம் பிரபாஸ், கிருத்தி சனோன் நடிப்பில் வெளியானது.. கடந்த வருடம் ஓம் ராவத் இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியான 'ஆதி புருஷ்' படம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. வசூலிலும் படு தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து தற்போது ராமாயணம் கதை தற்போது பாலிவுட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் இணைந்து நடித்து வரும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது நிதேஷ் திவாரி இயக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது. இந்தப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். அத்துடன் ராவணனாக யாஷும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்து வருகின்றனர். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் போக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன், நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கசிந்ததுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., 'அனிமல்' படத்தில் சரிக்கு சமமாக பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்களை சம்பாரித்த ரன்பீர் கபூர் தற்போது இராமராக அவதாரம் எடுத்துள்ளார். அனிமலை தொடர்ந்து இப்படமும் அவருக்கு மிகப்பெரிய ஹிட்டை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.