திரைப்படங்களில் காதல், காமெடி காட்சிகள் எந்த அளவுக்கு ரசிக்கப்படுகிறதோ அதே அளவுக்கு படத்தின் வில்லன் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் அதிகமாக எதிர்பார்க்கப்படும். ஆனால் இந்த 6 படங்கள் எந்த ஒரு சண்டை காட்சி இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. வில்லன் என்ற கேரக்டரே அவசியம் இல்லாமல் ,உணர்வுபூர்வமான காட்சிகளை வைத்து இந்த படங்கள் ஜெயித்திருக்கின்றன.நண்பன்,3 இடியட்ஸ் என்னும் இந்தி படத்தின் தழுவலாக தமிழில் சங்கர் இயக்கிய திரைப்படம் தான் நண்பன். இந்த படத்தில் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடித்து இருந்தும் எந்த ஒரு மாஸ் காட்சிகளும், சண்டை காட்சிகளும் கிடையாது. கல்வி முறை மற்றும் நண்பர்கள் என மையப்படுத்தி வந்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்: படத்தின் ஒளிப்பதிவாளர் வாழ்க்கையில் நடந்த உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். தலையில் அடிபட்டு குறிப்பிட்ட காலத்தில் நடந்தது அத்தனையும் மறந்து விடும் நண்பனின் திருமணத்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்த நண்பர்கள் படும் பாடுதான் இந்த படம். இதில் பக்கத்தில் நிற்பது தன் காதலி என்பதை கூட மறந்து அவருடைய மேக்கப் பார்த்து “பா…. யாருடா இந்த பொண்ணு” என்று விஜய் சேதுபதி கேட்கும் வசனம் இன்று வரை பாப்புலராக இருக்கிறது.தெய்வத்திருமகள்: நடிகர் சீயான் விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் தெய்வத்திருமகள். சாமி, அருள் போன்ற அதிரடி ஆக்சன் கதைகளில் நடித்துக் கொண்டிருந்த விக்ரம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு முழுக்க முழுக்க சென்டிமென்ட்டை மட்டுமே நம்பி நடித்த திரைப்படம் இது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அபியும் நானும்: மகளை மட்டுமே மொத்த உலகமாக பார்க்கும் அப்பாவின் மனநிலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் அபியும் நானும். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷா அவர்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் வில்லனான பிரகாஷ்ராஜ் இருந்தும் இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் என்று எதுவுமே கிடையாது.மொழி: ஜோதிகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பிரித்விராஜின் சிறந்த நடிப்பில் வெளியான திரைப்படம் மொழி. மொழி என்பது வெறும் வார்த்தைகளால் மட்டுமே பேசுவது இல்லை என்பதை உணர்வுபூர்வமாக எடுத்து சொன்ன திரைப்படம் இது. எப்போதும் தன்னுடைய முரட்டுத்தனமான நடிப்பில் மிரட்டி கொண்டு இருந்த பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முதன்முதலாக காமெடி காட்சிகளிலும் கலக்கி இருந்தார்.அழகிய தீயே: சினிமாவில் சாதிக்க துடிக்கும் ஒரு இளைஞனை சுற்றி நடக்கும் அழகான காதல் பின்னல் தான் அழகிய தீயே திரைப்படத்தின் கதை. இந்த படத்தை ராதா மோகன் இயக்கியிருந்தார். பிரசன்னா, நவ்யா நாயர், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். சண்டைக் காட்சிகளை இல்லாத இந்த படமும் ரசிகர்களிடையே நேர்மறை விமர்சனத்தை பெற்றது
ஜெய்ஸி ஜோஸ்.2013ம் ஆண்டு வெளியான'திரி டாட்ஸ்' படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமான ஜெய்ஸி ஜோஸ், தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து மலையாள சினிமாவின் முக்கியமான நடிகராக உயர்ந்தார். லூசிபர், காபா, நாயட்டு, ஆபரேஷன் ஜாவா உள்ளிட்ட70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற'2018', கொரோனா பேப்பர்ஸ்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். லால், நெடுமுடி வேணு, மனோஜ் கே.ஜெயன், திலகன், சுரேஷ் கோபி, கலாபவன் மணி, ராஜன் பி.தேவ் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணசித்தர வேடங்களிலும் நடித்தனர். வருகிறார். தற்போது சுந்தர்.சி நடிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில் நாளை(ஜூன்23) வெளியாக உள்ள'தலைநகரம்2' படம்...மூலம் தமிழ் சினிமாவில் ஜெய்ஸி ஜோஸ்.அறிமுகமாகிறார். சென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள படம். இதில்அவர் சுந்தர்.சிக்கு வில்லனாக நடித்துள்ளார். அதிலும் 3 கெட்அப்களில் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்துசூர்யாவின்2டி நிறுவனம் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும்'ரெபல்' படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாடகி சின்மயி இரட்டை குழந்தைகள் மகன்களின், புகைப்படத்தை முதன்முதலில் வெளியிட்டார்.நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார் பாடகி சின்மயி இருவருக்கும் கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். தனது மகன்களுக்கு த்ரிப்தா. ஷர்வாஸ் என பெயர் வைத்துள்ள சின்மயி, மகன்களின் புகைப்படத்தை நீண்ட நாட்கள் சோஷியல் மீடியாவில் வெளியிடாமல் இருந்தார். சமீபத்தில் சின்மயியின் குழந்தைகளை பார்க்க போட்டோக்களை வெளியிடும் படி ரசிகர்கள் கேட்க, முதன்முதலாக தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை சின்மயி தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். க்யூட் குழந்தைகளான த்ரிப்தா ஷர்வாஸுக்கு பலரும் தங்களது அன்பினை பகிர்ந்து வருகின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் . .லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ த்ரிஷா, -அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின் மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே “நா ரெடி” என்ற பாடல் வெளியாவதாக அறிவித்துள்ளனர் இதன் முன்னோட்டமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டனர் அந்த நான்கு வரி பாடலிலேயே விஜய்யின் அரசியல் ஆசை பற்றிய வெளிப்பாடு தெரிகிறது இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இன்னும் இரு தினங்களுக்கு லியோ சத்தம் தான் அதிகம் ஒலிக்கும் இதை விஜய்யின் பிறந்தநாளுக்கு டபுள் ட்ரீட் என ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவக்கி உள்ளனர் .லோகேஷின் வழக்கமான அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது .
லோகேஷ் கனகராஜ் இயக்கும் "லியோ"படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் அவருடன் த்ரிஷா, பிரியாஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உட்பட பலர் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டுஅக்டோபர்19ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கிறார். இந்த நிலையில் விஜய்யின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்திற்கான பிசினஸ் விறுவிறுப்பாக நடக்கிறது. மேலும் உலகம் முழுக்க அதிகளவில் வெளியிடவும. திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
மலையாளத்தில் பிக்பாஸ் சீசன்-5 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஐந்தாவது சீசனையும் மோகன்லாலே...தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போட்டியாளர்களுக்கிடையே அவர்களது காதல் கதை பற்றி சொல்லுமாறு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின் போது போட்டியாளர் அனியன் மிதுன் என்பவர், தான் ஒரு ஆர்மி கமாண்டோ பெண் ஒருவரை காதலித்ததாக கூறினார். அந்த பெண்ணிடம் தன் காதலை சொன்னதற்காக காத்திருந்த தருணத்தில் தான் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு.உயிரிழந்தார் என்றும், காதல்கைகூடாமல் போனாலும் கூட, , தனது காதலி நாட்டுக்காக உயிரிழந்தது பெருமை என்றும் கூறினார். ஆனால் சனிக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்ற மோகன்லால் அனியன் மிதுன் கூறிய தகவல் பொய் என்றும், அவர் கூறியது போன்று ஒரு பெண்ணே ஆர்மி கமாண்டோவாக இல்லைஎன்றும் கூறினார். ஆனாலும் தான் கூறியதில் அனியன் மிதுன் விடாப்பிடியாக நின்றார். இதனைத் தொடர்ந்து கோபமான மோகன்லால், நான் கிட்டத்தட்ட15 வருடங்களாக கௌரவ லெப்டினன்ட் கலோனலாக இருக்கிறேன். எனக்கு.எல்லா மட்டத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். நான் விசாரித்துவிட்டு தான் கூறுகிறேன். இது போன்று பொய் கதைகளை கூறுவதை ,இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்தார். அதன் பிறகு தான் சைலண்ட் ஆனார் ..
ஜுன் 1, தனது 53வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் மாதவன் பாலிவுட்டில் சீரியல்களில் நடித்து வந்தார்.மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படம் நடிகர் மாதவனுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அப்படத்தின் மூலம் தமிழக மக்களால் சாக்லெட் பாயாக கொண்டாடப்பட்ட மாதவன் கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஜேஜே, ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்து வெற்றிகளை கண்டார்.25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடிகராக வலம் வரும் மாதவன் சொத்து மதிப்பு ரூ.105 கோடி இருக்கும் என கூறப்படுகிறதுமும்பையில் ஆடம்பர பங்களா, சென்னையில் ரூ.18 கோடி மதிப்பில் ஒரு வீடு இருக்கிறது.ஒரு படத்துக்கு ரூ.6 முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் பெறும் மாதவன் விளம்பரங்கள் மூலமாகவே ரூ. 1 கோடி வரை வருவாய் பெறுகிறாராம்.
இந்த வருட ஆரம்பத்தில் விஜய் நடிப்பில் படு மாஸாக வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, ஆனால் படத்தின் கதை மக்களை குஷிப்படுத்தவில்லை என்றே தான் கூற வேண்டும்.குடும்பத்தை மையப்படுத்தி எடுத்திருந்தாலும் அவ்வளவாக ரீச் ஆகவில்லை, தெலுங்கில் ஏதாவது சாதாரண வரவேற்பு பெற்றது.இப்போது விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து2வது முறையாக படம் நடிக்கிறார், லியோ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது சென்னையை சுற்றி நடந்து வருகிறது. விஜய் நடிப்பதை தாண்டி நிறைய தொழில்கள் செய்து வருகிறார், சென்னையில் இவருடைய தாயார் ஷோபா, மகன் சஞ்சய், மனைவி சங்கீதா ஆகியோரின் பெயர்களில் பல திருமண மண்டபங்களை நடிகர் விஜய் நிர்வகித்து வருகிறார்.சென்னையில் உள்ளத் திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் மாத வாடகை8 லட்சத்திற்கு15 வருட ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு மாத வாடகை12 லட்சத்திற்கு ஒப்பந்தத்தின்அடிப்படையில் விட்டுள்ளதாக தெரிகிறது.
மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமான சாய் பல்லவி கேரள நடிகை எல்லாம் கிடையாது.தமிழ்நாட்டின் கோத்தகிரியின் பிறந்த பக்கா தமிழ் பொண்ணான சாய் பல்லவி உங்களில் யாரு அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் எல்லாம் கலந்து கொண்டு கலக்கி இருக்கிறார்.கஸ்தூரி மான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த சாய் பல்லவி பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவிக்கு 31 வயசு ஆகுது: 1992ம் ஆண்டு மே 9ம் தேதி பிறந்த சாய் பல்லவி தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார். எத்தனை கோடிகள் சொத்து இருந்தாலும், எப்போதுமே மிகவும் எளிமையாக இருப்பதையே விரும்புபவர் சாய் பல்லவி. அவரது எளிமையே ரசிகர்களுக்கு அவரை பார்த்த முதல் நொடியிலேயே பிடிக்க வைத்து விடுகிறது. கவர்ச்சிகரமான ஆடைகள் எல்லாம் அணிந்து கொண்டு விழா மேடைகளுக்கு வர மாட்டார் சிம்பிளா ஒரு சுடிதார் அல்லது ஒரு சேலை போதும் அத்துடன் தனது புன்னகையை கலந்து சாய் பல்லவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.நடிகைக்கு முதலில் நடிப்பு மட்டும் தான் முக்கியம். நடிப்பு இருந்தாலே டாப் நடிகையாக வலம் வரலாம் என நிரூபித்து வெகு சில நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர் என்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மருத்துவம் படித்து விட்டு நடிகைகளாக மாறியவர் பட்டியலிலும் சாய் பல்லவி இடம்பிடித்திருக்கிறார். ஹோம்லியாக நடித்து வந்த சாய் பல்லவி ரவுடி பேபியில் போட்ட கவர்ச்சி நடனம் ரசிகர்களை மெர்சலாக்கியது என்றே சொல்லலாம். ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய் பல்லவி அந்த சூலத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போட அப்படியே அம்மனே இறங்கி வந்து ஆடியது போல இருந்ததாக ரசிகர்கள் கொண்டாடினர். கார்கி படத்தில் தப்பு செஞ்சது அப்பாவாவே இருந்தாலும், அவருக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என்பதை கடந்த ஆண்டு மீண்டும் நிரூபித்தார்.அடுத்ததாக கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 21 படத்தில் நல்லதொரு கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். சாய் பல்லவி வீடு: பிறந்த ஊரான கோத்தகிரியில் ஒரு வீடு நடிகை சாய் பல்லவிக்கு உள்ளது. ஆனால், தற்போது குடும்பத்துடன் கோவையில் ஒரு சூப்பரான அழகிய வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் சாய் பல்லவி.
கேரளாவில் கிங்காக வாழ்ந்து வரும் மோகன்லால் தன்னுடைய,63 வயதிலும் இளம் நடிகர்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார்இவர்களுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமல்ல ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களும் உள்ளனர்.தன்னுடைய20 வயதில் சினிமா பயணத்தை துவங்கிய மோகன் லால் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதிலும் தமிழில் உலக நாயகனுடன் உன்னைப்போல் ஒருவன், தளபதியுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் நடித்த படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்து கோலிவுட்டிலும் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கிய ஜெயிலர் படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இன்று அவருடைய63 வது பிறந்த நாளை முன்னிட்டு சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் இவரை பற்றிய பேச்சு தான். அதிலும் மம்முட்டியை மிஞ்சும் அளவுக்கு இவர் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். மோகன்லால் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து பாரோஸ் என்ற படத்தை பிரம்மாண்டமாக இயக்கிக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் மோகன் லாலின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது. இவர் இன்றும் சம்பளமாக ஒரு படத்திற்கு15 கோடி மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறார். இவரைப் போலவே இவரது மகனும் மகன் பிரணவ்வும் தற்போது சினிமாவிற்கு கதாநாயகனாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அப்படி இருந்தும் இவர் சினிமாவில் இத்தனை வருடங்களாக பல கோடிக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.இவருக்கு30 கோடி மதிப்புள்ள கார்கள் உள்ளது. கிட்டத்தட்ட தன்னுடைய43 ஆண்டு சினிமா வாழ்க்கையில் அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் சொத்துக்களாகத்தான் வாங்கி வைத்துள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி, விளம்பரம் என இவருக்கு ஆண்டிற்கு 50 கோடி வரை சம்பளம் வந்து கொண்டிருக்கிறது.மொத்தமாக மோகன்லாலுக்கு ஒட்டுமொத்தமாக 450 கோடி சொத்து இருக்கிறது.