25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு >> செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர் >> Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) >> ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு. >> உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானமான பதநீர், நுங்கு கடைகளில் குவியும் பொதுமக்கள். >> புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக் குழி திருவிழா கொடியேற்றம். >> ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் >> ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு >> ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி. >>


ஸ்டண்ட் காட்சிகள், வில்லன் இல்லாமல் ஹிட் அடித்த 6 படங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்டண்ட் காட்சிகள், வில்லன் இல்லாமல் ஹிட் அடித்த 6 படங்கள்.

திரைப்படங்களில் காதல், காமெடி காட்சிகள் எந்த அளவுக்கு ரசிக்கப்படுகிறதோ அதே அளவுக்கு படத்தின் வில்லன் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் அதிகமாக எதிர்பார்க்கப்படும். ஆனால் இந்த 6 படங்கள் எந்த ஒரு சண்டை காட்சி இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது.  வில்லன் என்ற கேரக்டரே அவசியம் இல்லாமல் ,உணர்வுபூர்வமான காட்சிகளை வைத்து இந்த படங்கள் ஜெயித்திருக்கின்றன.

நண்பன்,3 இடியட்ஸ் என்னும் இந்தி படத்தின் தழுவலாக தமிழில் சங்கர் இயக்கிய திரைப்படம் தான் நண்பன். இந்த படத்தில் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடித்து இருந்தும் எந்த ஒரு மாஸ் காட்சிகளும், சண்டை காட்சிகளும் கிடையாது. கல்வி முறை மற்றும் நண்பர்கள் என மையப்படுத்தி வந்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்: படத்தின் ஒளிப்பதிவாளர் வாழ்க்கையில் நடந்த உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். தலையில் அடிபட்டு குறிப்பிட்ட காலத்தில் நடந்தது அத்தனையும் மறந்து விடும் நண்பனின் திருமணத்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்த நண்பர்கள் படும் பாடுதான் இந்த படம். இதில் பக்கத்தில் நிற்பது தன் காதலி என்பதை கூட மறந்து அவருடைய மேக்கப் பார்த்து “பா…. யாருடா இந்த பொண்ணு” என்று விஜய் சேதுபதி கேட்கும் வசனம் இன்று வரை பாப்புலராக இருக்கிறது.

தெய்வத்திருமகள்: நடிகர் சீயான் விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் தெய்வத்திருமகள். சாமி, அருள் போன்ற அதிரடி ஆக்சன் கதைகளில் நடித்துக் கொண்டிருந்த விக்ரம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு முழுக்க முழுக்க சென்டிமென்ட்டை மட்டுமே நம்பி நடித்த திரைப்படம் இது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அபியும் நானும்: மகளை மட்டுமே மொத்த உலகமாக பார்க்கும் அப்பாவின் மனநிலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் அபியும் நானும். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷா அவர்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் வில்லனான பிரகாஷ்ராஜ் இருந்தும் இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் என்று எதுவுமே கிடையாது.

மொழி: ஜோதிகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பிரித்விராஜின் சிறந்த நடிப்பில் வெளியான திரைப்படம் மொழி. மொழி என்பது வெறும் வார்த்தைகளால் மட்டுமே பேசுவது இல்லை என்பதை உணர்வுபூர்வமாக எடுத்து சொன்ன திரைப்படம் இது. எப்போதும் தன்னுடைய முரட்டுத்தனமான நடிப்பில் மிரட்டி கொண்டு இருந்த பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முதன்முதலாக காமெடி காட்சிகளிலும் கலக்கி இருந்தார்.

அழகிய தீயே: சினிமாவில் சாதிக்க துடிக்கும் ஒரு இளைஞனை சுற்றி நடக்கும் அழகான காதல் பின்னல் தான் அழகிய தீயே திரைப்படத்தின் கதை. இந்த படத்தை ராதா மோகன் இயக்கியிருந்தார். பிரசன்னா, நவ்யா நாயர், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். சண்டைக் காட்சிகளை இல்லாத இந்த படமும் ரசிகர்களிடையே நேர்மறை விமர்சனத்தை பெற்றது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News