25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மோகன்லாலின் ஒட்டு மொத்த சொத்து விவரம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மோகன்லாலின் ஒட்டு மொத்த சொத்து விவரம்

கேரளாவில் கிங்காக வாழ்ந்து வரும் மோகன்லால் தன்னுடைய,63 வயதிலும் இளம் நடிகர்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார்இவர்களுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமல்ல ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களும் உள்ளனர்.தன்னுடைய20 வயதில் சினிமா பயணத்தை துவங்கிய மோகன் லால் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதிலும் தமிழில் உலக நாயகனுடன் உன்னைப்போல் ஒருவன், தளபதியுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் நடித்த படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்து கோலிவுட்டிலும் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கிய ஜெயிலர் படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இன்று அவருடைய63 வது பிறந்த நாளை முன்னிட்டு சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் இவரை பற்றிய பேச்சு தான். அதிலும் மம்முட்டியை மிஞ்சும் அளவுக்கு இவர் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். மோகன்லால் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து பாரோஸ் என்ற படத்தை பிரம்மாண்டமாக இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மோகன் லாலின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது. இவர் இன்றும் சம்பளமாக ஒரு படத்திற்கு15 கோடி மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறார். இவரைப் போலவே இவரது மகனும் மகன் பிரணவ்வும் தற்போது சினிமாவிற்கு கதாநாயகனாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அப்படி இருந்தும் இவர் சினிமாவில் இத்தனை வருடங்களாக பல கோடிக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.இவருக்கு30 கோடி மதிப்புள்ள கார்கள் உள்ளது. கிட்டத்தட்ட தன்னுடைய43 ஆண்டு சினிமா வாழ்க்கையில் அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் சொத்துக்களாகத்தான் வாங்கி வைத்துள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி, விளம்பரம் என இவருக்கு ஆண்டிற்கு 50 கோடி வரை சம்பளம் வந்து கொண்டிருக்கிறது.மொத்தமாக மோகன்லாலுக்கு ஒட்டுமொத்தமாக 450 கோடி சொத்து இருக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News