25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அருப்புக்கோட்டை - மேற்கு புறவழிச்சாலையினை  அமைச்சர்  அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருப்புக்கோட்டை - மேற்கு புறவழிச்சாலையினை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் பெரியபுளியம்பட்டியில் (30.01.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022-2023 கீழ் ரூ.154.99 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அருப்புக்கோட்டை - மேற்கு புறவழிச்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில்  அருப்புக்கோட்டை - மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் ரூ.154.99 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.அருப்புக்கோட்டை நகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகள் பள்ளிக்கு போவதாக இருந்தாலும், வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மிகுந்த சிரமமாக இருக்கிறது என்பது அருப்புக்கோட்டை பகுதி மக்களினுடைய பல ஆண்டு கால கோரிக்கையாக இருந்தது.எனவே, அருப்புக்கோட்டை புறவழிசாலைப்; பணியை முடிப்போம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு, அந்த வாக்குறுதியின் படி இன்றைக்கு நம்முடைய அருப்புக்கோட்டை மேற்கு பகுதியில் இந்த சுற்றுவழிச் சாலை பணிகளை முடித்து ஒரு பகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை திட்டங்கள், திருநெல்வேலி கோட்டத்தின் மூலம் அருப்புக்கோட்டை நகருக்கு மேற்கு புறவழிச்சாலை அமைத்து மேம்பாடு செய்யும் மற்றும் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டப்பணிக்கு ரூ.119.50 கோடி மற்றும் நிலஎடுப்பு பணிக்கு ரூ.35.40 கோடி என மொத்தம் ரூ.154.99 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த பணியின் மொத்த நீளமான 9.905 கி.மீ. இதில் இரயில்வே மேம்பாலப் பணிகள் தவிர்த்து அனைத்து பணிகளும் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகளும் ஓரிரு மாதங்களில் முடிவடையும்.விருதுநகர் - அருப்புகோட்டை செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரவுண்டானாவில் இருந்து தேசியநெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரவுண்டாண வரை உள்ள 5.1 கி.மீ நீளமுள்ள பகுதியானது போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த சாலை 10 மீ அகலமும் இரு பக்கமும் கடின புருவங்களுடன் கூடிய இருவழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகரில் இருந்து திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனூர், இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் செல்வதற்கு மாநில நெடுஞ்சாலை 42 (திருவில்லிபுத்தூர் -சிவகாசி - விருதுநகர்- அருப்புக்கோட்டை -திருச்சுழி நரிக்குடி பார்த்திபனூர் சாலை) வழியாக நெருக்கடி மிகுந்த அருப்புக்கோட்டை நகரை கடந்து செல்ல வேண்டியுள்ளது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையால் அருப்புக்கோட்டை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. விருதுநகரில் இருந்து வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் அருப்புக்கோட்டை நகருக்குள் செல்லாமல் மதுரை, தூத்துக்குடி மற்றும் இராமேஸ்வரம் போன்ற நகரங்களுக்கு எளிதாக செல்லும் படி அமைக்கப்பட்டுள்ளது.

இது நம்முடைய அருப்புக்கோட்டை பகுதியினுடைய  போக்குவரத்தில் ஒரு முக்கியமான ஒன்றாகும். இந்த சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து, நிதிகளை ஒதுக்கி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களுக்கும் இந்த தொகுதியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை பொறியாளர்கள், உதவிபொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *