25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


மோகன்லால் நடத்தி வரும்   மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 5 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மோகன்லால் நடத்தி வரும்  மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 5 

மலையாளத்தில் பிக்பாஸ் சீசன்-5 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஐந்தாவது சீசனையும் மோகன்லாலே...தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போட்டியாளர்களுக்கிடையே  அவர்களது காதல் கதை பற்றி சொல்லுமாறு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின் போது போட்டியாளர் அனியன் மிதுன் என்பவர், தான் ஒரு ஆர்மி கமாண்டோ பெண் ஒருவரை காதலித்ததாக கூறினார். அந்த பெண்ணிடம் தன் காதலை சொன்னதற்காக காத்திருந்த தருணத்தில் தான் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு.உயிரிழந்தார் என்றும், காதல்கைகூடாமல் போனாலும் கூட, , தனது காதலி நாட்டுக்காக உயிரிழந்தது பெருமை என்றும் கூறினார். 
ஆனால் சனிக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்ற மோகன்லால் அனியன் மிதுன் கூறிய தகவல் பொய் என்றும், அவர் கூறியது போன்று ஒரு பெண்ணே ஆர்மி கமாண்டோவாக இல்லைஎன்றும் கூறினார். ஆனாலும் தான் கூறியதில் அனியன் மிதுன் விடாப்பிடியாக நின்றார். இதனைத் தொடர்ந்து கோபமான மோகன்லால், நான் கிட்டத்தட்ட15 வருடங்களாக கௌரவ லெப்டினன்ட் கலோனலாக இருக்கிறேன். எனக்கு.எல்லா மட்டத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். நான் விசாரித்துவிட்டு தான் கூறுகிறேன். இது போன்று பொய் கதைகளை கூறுவதை ,இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்தார். அதன் பிறகு தான் சைலண்ட் ஆனார் ..    

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *