ஆசிய யூத் விளை யாட்டுபஹ்ரைனின் மனாமா நகரில்40 நாடுகளின் , 8000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் ,இந்திய வீரர் ஷவுரியா அவினாஷ், 13.73 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இந்தியாவின் ஓஷின், ,பெண்களுக்கான வட்டு எறிதலில், அதிகபட்சம் 43.38 மீ., துாரம் எறிந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.இந்தியாவின் மண்டல் பலாஷ் ஆண்களுக்கான 5000 மீ., நடைப் பந்தயத்தில் (24 நிமிடம், 48.93 வினாடி) வெண்கலம் வென்றார்.இந்தியாவின் ஜாஸ் மின் கவுர், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி யில் 14.86 மீ., துாரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். பெய்த் வான் ஜாய் (14.53) 6வது இடம் பிடித்தார். இந்தியாவின் வீர் பஹது, ஆண்களுக்கானமிக்ஸ்டு ஆர்ட்ஸ்' மரிட்சியல் போட்டியில், தாய்லாந்தின் டெச்சா சோட்டை வீழ்த்தி, வெண்கலம் கைப்பற்றினார். இப் பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது.இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என 12 பதக்கம் வென்று, பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
ஸ்மிருதி மந்தனா, பிரதிகா உலககோப்பை லீக் போட்டியில் சதம் எடுத்து, இந்திய அணி 340 ரன் குவித்தனர்.. பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் இந்தியா, இலங் கையில், நடக்கிறது. நேற்று, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட் டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சோபி டெவின் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.இந்திய அணி 48 ஓவரில் 329/2 ரன் எடுத் திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப் பட்டது.மழை நின்ற பின், 49 ஓவர் போட்டியாக நடந்தது. இந்திய அணி 49 ஓவரில் 340/3 ரன் எடுத்தது.
உலக மல் யுத்தம் சாம்பியன்ஷிப் தொடர்செர்பியாவில் 23 வயதுக்கு உட்பட் டோர்ஆண்களுக்கான கிரிகோ ரோமன்' 55 கிலோ பிரிவில் போட்டி நடந்தது.வெண்கலப் பதக்கத்துக் கான போட்டியில் இந் தியாவின் விஸ்வஜித், கஜகஸ்தானின்சிலை சந்தித்தார். இதில் 5-4 என வெற்றி பெற்ற விஸ்வஜித், வெண்கலம் வென்றாரர்.உலக மல்யுத்தத்தில் ,வென்ற இரண்டாவது வெண்கலம் இது. பிரீஸ்டைல்' பெண்களுக்கான ' போட்டி நடக்கின்றன. 55 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் நிஷு, முன்னாள் உலக சாம்பியன் ஜப்பானின் மோ கியூகாவை, 6-2 என வீழ்த்தினார். ரஷ்யாவின் கிராவை 10- 1 என வீழ்த்திய நிஷூ அரையிறுதிக்குள் நுழைந்தார்.
ஆசிய யூத் விளையாட்டு பஹ்ரைனின் மனாமா நகரில் ,40 நாடுகளின் 8000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான கபடி பைனலில் நேற்று இந்தியா, ஈரான் மோதின.முதல் பாதியில் இந்தியா 33-12 , இரண்டாவது பாதியிலும்இந்தியா, 75-21 என வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது. யூத் ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இது. இந்திய ஆண்கள் அணி, பங்கேற்ற 5 போட்டியிலும் கபடியில் வென்று பைனலுக்கு முன்னேறியது. இதில் 35-32 என ஈரானை வென்று, தங்கம் கைப்பற்றியது.இந்தியா வின் ரஞ்சனா 24 நிமிடம், 25.88 வினாடி நேரத்தில் வந்து, பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ரியா நான்காவது இடம் பிடித்தார். 'டேக் வாண்டோ' ஆண்களுக்கான தனிநபர் பூம்சே பிரிவில் ,இந்தியாவின் தேபாஷிஸ் தாஸ், அரையிறுதியில் 8.5100-8..5400 என சீனாவின் ஜிஜுவானிடம் தோற்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.இந் தியாவின் யாஷ்வினி, ஷிவான்ஷு ஜோடி கலப்புஇரட்டையர் அரையிறுதியில், (8.1200-8.5600), தாய்லாந்தின் இன்ஜங், நிடிக்கான் ஜோடியிடம் தோற்க, இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது. இதுவரை இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 9 பதக்கம் வென்று, பட்டிய லில் 5 வது இடத்தில் உள்ளது.
ஆசிய ஜூனியர் (15, 17 வயது) பாட் மின்டன் சாம்பியன்ஷிப்தொடர் சீனாவின் செங்டு நகரில், பெண்கள் ஒற்றையர் பிரிவு (17 வயது) 2வது சுற்றில்இந்தியாவின் லக்சயா, சீனதைபேயின் குவான்யிலின் மோதினர். இதில் லக்சயா 21-17, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தியாவின் திக்ஷா மற்றொரு 2வது போட்டியில் 17- 21, 21-16, 21-11 சீனாவின் யாருலுவோவை வீழ்த்தினார்.இந்தியாவின் ஜாக் ஷேர் சிங் 21-14, 21-17 என சீனாவின் பெங் யூ ஜாங்கை, ஆண்கள் ஒற்றையர் பிரிவு (17 வயது) 2வது வீழ்த்தினார். மற்ற 2வது சுற்று போட்டிகளில் இந்தியாவின் நிஷ்சல் சந்த், ஹர்திக் திவ்யான்ஷ் தோல்வி யடைந்தனர்.
ஆசிய யூத் விளையாட்டு பஹ்ரைனின் மனாமா நகரில் ,பெண்களுக்கான கபடியில்இந்திய அணி, முதல் மூன்று போட்டியில் வங்க தேசம், இலங்கை, தாய்லாந்தை வீழ்த்தியது. நான்காவது போட்டியில் இந்திய பெண்கள் அணி, ஈரானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 59-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று பட்டியலில்முதலிடம்பிடித்துபைனலுக்குமுன்னேறியது..இன்று, இரண்டாவுது இடம் பெற்ற ஈரானை எதிர் கொள்கிறது. இந்திய அணி தனது நான்காவது போட்டியில் ஆண்களுக்கான கபடியில் ,ஈரானை எதிர் கொண்டது. இந்தியா, 46–29 என்ற புள்ளிக் கணக்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. தொடர்ந்து நான்கு வெற்றி பெற்ற இந்திய அணி, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்று தனது ஐந்தாவது போட்டியில் தாய்லாந்தை சந்திக்க உள்ளது.இந்திய அணி இதுவரை ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது
தெற்காசிய தடகள சீனியர் சாம்பியன் ஷிப் போட்டி, இந்தியாவின் ராஞ்சியில் அக். 24-26ல் நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட் பட 7 நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்திய அணியினர் நேற்று ராஞ்சி வந்தடைந்தனர்.சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் பிரான்சில் ,ஆண்கள் இரட்டையர் முதல்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, ஸ்பெயினின் மார் டோஸ், வேஹா ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம், 45 நிமிடம் நடந்த போட்டியில் இந்திய ஜோடி 6-7, 6-1,10-7 என வென்று காலிறுதிக்குள் நுழைந்தது. ஆசிய கால்பந்து பெண்களுக்கான (17 வயதுக்கு உட்பட்ட) ,10வது சீசன், 2026ல் சீனாவில் ( ஏப்ரல் 30- மே 17) நடக்க உள்ளது. இதற்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி, பிரதான தொடருக்கு முன்னேறியது. இதையடுத்து அகில இந்திய கால்பந்து கூட்ட மைப்பு, ரூ.22,00,000 பரிசு தருவதாக அறிவித்துள்ளது. பஹ்ரைனில் ஆசிய யூத் குத்துச் சண்டை விளையாட்டு, அக். 23ல் துவங்குகிறது.
பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்)கொழும்புவில் நேற்று நடந்த லீக் போட்டியில் தென்ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி ' பீல்டிங் தேர்வு செய்தது.தென் ஆப்ரிக்க அணி 2 ஓவரில் 6/1 ரன் எடுத்திருந்த போது மழை காரணமாக போட்டி நிறுத்தப் பட்டது. மீண்டும் ஆட்டம் துவங்கியதும், தலா 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென் ஆப்ரிக்க அணி 40 ஓவரில் 312/9 ரன் குவித்தது. பாகிஸ்தான் சார்பில் சாடியா, நஷ்ரா தலா 3 விக்கெட் சாய்த்தனர். பாகிஸ்தான் அணி 4 ஓவரில் 22/1 ரன் எடுத்திருந்தது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், ஆஸ்திரேலியாவில், 2026, மார்ச் 1–26ல் (12 அணிகள்) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் இந்திய பெண்கள் அணி, முதன் முறையாக இத்தொடருக்கு தகுதி பெற்றது. தனது முதல் போட்டியில்இந்திய அணி வியட்நாம் (2026, மார்ச் 4) அணியை சந்திக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் உலகத் தரவரிசையில் 63வது இடத்திலுள்ள இந்திய அணி, சொந்த மண்ணில் ஈரான் ('நம்பர் - 73), நேபாள (89) அணிகளுடன்இணைந்து முத்தரப்பு ‘நட்பு தொடரில் பங்கேற்கிறது. மேஹாலயாவின் ஷில்லாங்கில் முதல் போட்டியில். இந்தியா, ஈரான் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க வில்லை. இரண்டாவது பாதியில், போட்டியின் 64வது நிமிடம் ஈரான் வீராங்கனை சாராதிதார் ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 74 வது நிமிடம் மீண்டும் சாரா, இரண்டாவது கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 0-2 என தோல்வியடைந்தது.
பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு. எப்.,) சார்பில், தரவரிசை பட்டியல் வெளியானது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சமீபத்தில் எவ்வித தொடரிலும் கோப்பை வெல்ல வில்லை.உலக சாம்பியன்ஷிப்பில் 2025 இல் வெண்கலம் வென்றது. இரு தொடரில் பைனல், 6 தொடரில் அரையிறுதி வரை சென்றது.இதனால் 80,050 புள்ளியுடன், மூன்று இடம் முன்னேறி, மூன்றாவது இடத்தில் உள்ளது. தவிர, கடந்த 2024 செப்டம்பர்மாதத்துக்குப் பின், முதன் முறையாக 'டாப்-5' இடத்துக்குள் நுழைந்தது.முதல் இரு இடத்தில் தென் கொரியாவின் கிம் வான் (1,14,805), சியோ சியுங் (92,450), மலேசியாவின் ஆரோன் சியா, சோ ஊய் ஜோடி உள்ளது. ஆண்கள் ஒற்றையரில் தர வரிசையில் 5 இடம் முந்தி, 16 வது இடம் பிடித்துள்ளார். கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா, தனிஷா ஜோடி 15வது இடத்துக்குமுன்னேறியது. (ஒற்றையர்), சிந்து திரீஷா, காயத்ரி ஜோடி (பெண்கள் இரட்டையர்) 13வது இடத்தில் தொடர்கின்றனர்.