ஜெர்மனியில் 'ஹைலோ' ஓபன் சர்வ தேச பாட்மின்டன் தொடர் ஜெர்மனியில் ,பெண்கள் ஒற்றையர்காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா ('நம்பர்-34'), தைவானின் ஹிசியாங்கை ('நம்பர்-4) எதிர்கொண்டார். உன்னதி முதல் செட்டை 22-20 என கைப்பற்றினார் .அடுத்த செட்டை 21-13 என வசப்படுத்தி, முடிவில் 22-20, 21-13 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் பஹ்ரைனின் மனாமா நகரில் ,பீச் மல்யுத்தம் 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 55 கிலோ பிரிவுபைனலில் இந்தியாவின் அஞ்சலி, 2-1 என வியட்நாமின் தோம் தாவோவை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்றார்.ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சுபாஷ், 2-0 என ஈரானின் அமிராலியை வென்று, தங்கம் வென்றார்.90 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அர்ஜுன், 2-1 என ஈரானின் முகமதுமதியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார். மற்ற - இந்திய வீரர்கள் ரவிந்தர் (80 கிலோ), சுஜாய் (70 கிலோ) பைனலில் தோற்க, வெள்ளிப்பதக்கம் வென்றனர்.இந்தியாவின் சந்திரிகா (50 கிலோ), பெண்களுக்கான குத்துச்சண்டை பைனலில் 5-0 என உஸ்பெகிஸ்தானின் கும்ரின் சோவை வென்று ,தங்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் ஆஹானா (50 கிலோ), வடகொரியாவின் ஜோங் ஹயாங்கை வென்று தங்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் குஷி சந்த் 46கிலோ பிரிவில், 4-1 என ஜின் ஜியுவை (சீனா) வென்று, தங்கம் வென்றார். இதுவரை இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 17 வெண்கலம், என மொத்தம் 47 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது.
பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்இந்தியா, இலங்கைவில், நடக்கிறது.இதன் பைனலுக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது.நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று, நடந்த 2வது அரையிறுதியில் இந்தியா, ‘நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஒவரில் 338 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 48.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 341 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி 3வது முறையாக (2005, 2017, 2025) உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவின் 17 வயது கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின். பெர்ன்ட்ரீ கல்லி, ராவ்வில்லே, எடிசன் பார்க் கிளப் அணிகளுக்காக விளையாடினார்.'T-20' போட்டிக்கு தயாராகும் வகையில், மெல்போர்னின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள பெர்ன்ட்ரீ கல்லி மைதானத்தில் சக வீரர்களுடன் இணைந்து, கடந்த அக். 28ல் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது 'த்ரோடவுன்' முறையில் சக வீரர் ஒருவர் வீசிய பந்தை எதிர்கொண்டார் பென். தலையில் 'ஹெல்மெட்' அணிந்திருந்த போதும், பந்து கழுத்து, தலைப்பகுதியில் பலமாக தாக்கியது. உடனடியாக மயங்கி சரிந்த இவரை, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 'வென்டி லேட்டர்' பொருத்தப்பட்டு சிகிச்சை தரப்பட்டது. இரண்டு நாள் சிகிச்சை பலன் தராத நிலையில், பென் மரணம் அடைந்தார். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து, பென்னுக்கு வலைப் பயிற்சியில் பந்து வீசிய சக வீரரை, அதிகம் பாதித்து இருக்கும்.
பஹ்ரைனின் மனாமா நகரில், ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் பஹ்ரைனின் மனாமா நகரில் ,பெண்களுக்கான 61 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில் யாஷிதா 17, பங்கேற்றார். அரையிறுதியில் கிர்கிஸ்தானின் அகிலய்யை, 6-0 என வென்றார்.பைனலில் யாஷிதா, கஜகஸ்தானின் ஜைதரை சந்தித்தார். முதல் பீரிய டில் (3 நிமிடம்), யாஷிதா 0-1 என பின் தங்கினார். இரண்டாவது " பீரியடில் யாஷிதா 5-4 என ,முடிவில் ஸ்கோர் 5-5 என ஆனது. கடைசி புள்ளி எடுத்த அடிப்படையில் யாஷிதா வெற்றி பெற்றார். இந்தியாவுக்கு யூத் ஆசிய மல் யுத்தத்தில் முதல் தங்கம் வென்று தந்தார்.இதுவரை இந்தியா 4 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம், என மொத்தம் 26 பதக்கம் வென்று, பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.
பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ்தொடர் சென்னையில், ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின்ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, மாயா ரேவதி மோதினர். ஒரு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் ,ராஷ்மிகா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் சஹாஜா, இந்தோனேஷியாவின் பிரிஸ்கா மோதினர். 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சஹாஜா 2வது சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 1-6, 2-6 என குரோஷியாவின் டோனா வெகிக்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியோனோவா, கிம் பர்லி பிர்ரெல், ஸ்டிரோம் ஹன்டர், சீனதைபேயின் ஜோனா கார்லாண்ட், பிரான்சின் டயான் பாரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி. சி.,) ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட் டியலை , துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, 781 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து முதன் முறையாக 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சதம் (121*) விளாசினார் .இதன்மூலம் ஐ.சி. சி., தரவரிசை பட்டியலில் அதிக வயதில் (38 ஆண்டு, 182 நாள்) 'நம் பர்-1' இடம் பிடித்த வீரரானார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் பெங்களூருவில் நடந்த போட்டியில் தமிழகம், நாகலாந்து அணிகள் மோதின. தமிழக அணி முதல் இன்னிங்ல் 512/3 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாள் முடிவில் நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 365/5 ரன் எடுத்திருந்தது. நிஸ்கல் (161), லெம்டூர் (115) அவுட்டாகாமல் இருந்தனர்.நேற்று நடந்தநான்காவது, கடைசி நாள் ஆட்டத்தில்ஆறாவது விக்கெட்டுக்கு 230 ரன் சேர்த்த போது, அம்ப்ரிஸ் பந்தில் நிஸ்சால் (175) அவுட்டாக, ரஹ்மான் (13) நிலைக்கவில்லை. கடைசியில் லெம்டுர் (146) அவுட்டாக, நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 446 ரன்னில் ஆல் அவுட்டானது. இரு அணிகளும் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடாத நிலையில் போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படை யில் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. நாகலாந்துக்கு 1 புள்ளி கிடைத்தது.
கிளட்ச் செஸ் தொடர் ,கிராண்ட் செஸ் டூர் தொடரின் 10 ஆண்டு கொண்டாட்டத்தை அடுத்து, நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் நவீன மயமாக்கப்பட்ட செயின்ட் லுாசியா செஸ் கிளப்பில் மூன்று நாள் இத்தொடர் நடக்கிறது.உலகின் முன்னணி வீரர்கள் உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் பேபியானோ காரு வானா, ஹிகாரு நகமுரா என நான்கு பேர் மட்டும் பங்கேற்கின்றனர். முதல் நாளில் மூன்று சுற்று போட்டி நடந்தன. ஒவ் வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா இரு முறை மோதினர்.முதலில் குகேஷ்- கார்ல்சன் மோதிய போட்டியில்தோற்ற குகேஷ், அடுத்த போட்டியை 'டிரா' செய்தார். பின் குகேஷ், நகமுராவை சந்தித்தார். முதல் போட்டியில் குகேஷ், 46 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 2வது போட்டி டிரா ஆனது. அடுத்து குகேஷ்-பேபி யானோவை சந்தித்தார். இதன் இரு போட்டியி லும் குகேஷ் வெற்றி பெற்றார். முதல் நாள் முடிவில் குகேஷ், 4.0 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் முதன் முறையாக 828 புள்ளி பெற்று, இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, முதலிடத்தில் நீடிக்கிறார்.உலககோப்பை தொடரில் 29 வயதான இவர், நியூசிலாந்துக்கு எதிராக 109, வங்கதேசத்திற்கு எதிராக 34 ரன் எடுத்ததை அடுத்து, இந்த முன்னேற்றம்கிடைத்தது.இரண்டாவது இடத்தில் சுமார் 100 புள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்டுனெர் (731) உள்ளார். இவர் 6 இடம் முன்னேறினார். 2 இடம் முந்திய தென் ஆப்ரிக்க அணி கேப்டன் லாரா (716) 3வது இடம் பிடித்தார். நாட் சிவர் பிரன்ட் (711), ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (709) 4, 5வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் (603), 8 இடம் முன்னேறிய ஜெமிமா (596) 18, 19வதாக உள்ளனர். பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (655), இரண்டு இடம் பின்தங்கி, 5வது இடம் பெற்றார். இங்கிலாந்தின் சோபி எக் லெஸ்டோன் (747) முதலிடத்தில் நீடிக்கிறார்.