25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆசிய யூத் விளையாட்டில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 9 பதக்கம் வென்று, பட்டிய லில் 5 வது இடத்தில் உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய யூத் விளையாட்டில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 9 பதக்கம் வென்று, பட்டிய லில் 5 வது இடத்தில் உள்ளது.

ஆசிய யூத் விளையாட்டு பஹ்ரைனின் மனாமா நகரில் ,40 நாடுகளின் 8000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான கபடி பைனலில் நேற்று இந்தியா, ஈரான் மோதின.

முதல் பாதியில் இந்தியா 33-12 , இரண்டாவது பாதியிலும்இந்தியா, 75-21 என வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது. யூத் ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இது. 

இந்திய ஆண்கள் அணி, பங்கேற்ற 5 போட்டியிலும் கபடியில் வென்று பைனலுக்கு முன்னேறியது. இதில் 35-32 என ஈரானை வென்று, தங்கம் கைப்பற்றியது.

இந்தியா வின் ரஞ்சனா 24 நிமிடம், 25.88 வினாடி நேரத்தில் வந்து, பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ரியா நான்காவது இடம் பிடித்தார். 

'டேக் வாண்டோ' ஆண்களுக்கான தனிநபர் பூம்சே பிரிவில் ,இந்தியாவின் தேபாஷிஸ் தாஸ், அரையிறுதியில் 8.5100-8..5400 என சீனாவின் ஜிஜுவானிடம் தோற்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இந் தியாவின் யாஷ்வினி,  ஷிவான்ஷு ஜோடி கலப்புஇரட்டையர் அரையிறுதியில், (8.1200-8.5600),  தாய்லாந்தின் இன்ஜங், நிடிக்கான் ஜோடியிடம் தோற்க, இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது. 

இதுவரை இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 9 பதக்கம் வென்று, பட்டிய லில் 5 வது இடத்தில் உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News