25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Nov 05, 2025

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) சார்பில்,டாப்-10' தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஜெமிமா .

சர்வதேச கிரிக்கெட்  கவுன்சில் (ஐ. சி. சி) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் லாரா (814 புள்ளி), 2 இடம் முன்னேறி, முதலிடம் பிடித்தார்.17 புள்ளியை இழந்த இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (811) 2வது இடம் பெற்றார். 9 இடம் முன்னேறிய இந்தியாவின் ஜெமிமா (658), ,டாப்-10' பட்டியலில் இடம் (10 வது) பிடித்தார்.இந்தியாவின் தீப்தி (657), பவுலர் தரவரி சையில் 5வது இடத்தில் நீடிக்கிறார்.ஐ.சி.சி., சார்பில் பெண்கள் உலக கோப்பை கனவு அணி வெளியிடப்பட்டது. இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்த ஹர்மன்பிரீத் கவுருக்கு இடமில்லை.இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்தி சர்மா என மூவர் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் லாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Nov 04, 2025

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் உற்சாகத்தில் இந்திய அணி .

நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை பைனலில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி ,(50 ஓவர்) இந்திய அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.கடைசிதருணத்தில் தீப்தி சர்மா ஓவரில் தென் ஆப்ரிக்கா வின் டி கிளர்க் அடித்தபந்தை ஹர்மன்பிரீத் கவுர் 'கேட்ச்' பிடித்தது, இந்தியாவின் கோப்பை கனவை நனவாக்கியது. உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகள், 'எங்கள் மூவர்ணக் கொடி உயரே பறக்கும், நாம் ஒன்றாக எழு வோம், ஒன்றாக செயல்படுவோம், ஒன்றாக வெல்வோம், வீ ஆர் டீம் இந்தியா,' என,வெற்றி கீதம் பாடினர். 

Nov 04, 2025

இந்தியாவின் ஷைபாலி வர்மா உலக கோப்பை (50 ஓவர் ) பைனலில் ஆட்ட நாயகி விருது வென்ற இளம் வீராங்கனை.

உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இந்திய பெண்கள் அணிக்கு, இந்திய பி.சி.சி.ஐ கிரிக்கெட் போர்டு சார்பில் ரூ. 51 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  உலக கோப்பை (50 ஓவர் ) பைனலில் ஆட்ட நாயகி விருது வென்ற இளம் வீராங்கனையானார் (21 ஆண்டு, 278 நாள்) இந்தியாவின் ஷைபாலி வர்மா.உலக கோப்பை (ஒருநாள் போட்டி ) வென்ற இந்திய கேப்டன்கள் கபில்தேவ் (1983). தோனி (2011). பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (2025).

Nov 04, 2025

டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜானிக் சின்னர் 'நம்பர்-1' .

டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர், 11500 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து மீண்டும் 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார்.பிரான்சில் நடந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரின் ஒற்றையர் பைனலில் அசத்திய சின்னர் 6-4, 7-6 என கனடாவின் பெலிக்ஸ் அகுர்- அலியாஸ்சிமியை வீழ்த்தினார்.நடப்பு சீசனில் 5வது பட்டம் வென்ற இவர், ஒட்டுமொத்தமாக 23வதுகோப்பை வென்றார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (11250 புள்ளி) 2வது இடத்துக்கும் ,நோவக் செர்பியாவின் ஜோகோவிச் (4580) 5வது இடத்தில் நீடிக்கிறார்.

Nov 03, 2025

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் ஜானிஸ் டிஜென்சாம்பியன் பட்டம் வென்றார்.

பெண்களுக்கான 'டபிள்யு. டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் சென்னையில், ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய ஜானிஸ் டிஜென், ஜென், 2வது செட்டை 6-3 என  வென்றார்.ஜானிஸ் டிஜென் இரண்டு மணி நேரம் நீடித்த பைனலில் ,6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, டபிள்யு.டி.ஏ., டூர் ஒற்றையரில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றினார்.

Nov 03, 2025

செஸ் உலக கோப்பை 11வது சீசனில்  இந்தியாவின் பிரனேஷ், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

செஸ் உலக கோப்பை 11வது சீசன் கோவாவில் , இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன், திவ்யா உள்ளிட்ட 206 பேர் பங்கேற்கின்றனர்.முதல் சுற்றில் இந்தியாவின் பிரனேஷ்,கஜகஸ்தானின் சட்பெக் அக் மெடினோவா மோதினர். முதல் போட்டியில் பிரனேஷ் வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் பிரனேஷ், 44வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். முடிவில் பிரனேஷ் 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, அஜர்பெய்ஜானின் அகமது அகமத்ஜடா மற்றொருபோட்டியில் மோதினர். இரண்டு போட்டியிலும் 2.0-0.0 என வென்ற சூர்ய சேகர் 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Nov 03, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடரில் அவனி லெஹரா தங்கம் வென்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடர் துபாயில், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள் ஸ்டேன் டிங் எஸ்.எச். 1' பிரிவில் இந்தியாவின் அவனி லெஹரா பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 626.3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் அவனி, 249.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை  வென்றார்.கலப்பு 50 மீ., 'பிஸ்டல் எஸ்.எச். 1' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின்சந்தீப் குமார் (543.6 புள்ளி), ஆகாஷ் (539.11) முதலிரண்டு இடங்களைபிடித்தனர்.அடுத்து நடந்த பைனலில் ஆகாஷ், 223.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சந்தீப் (220.5) வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

Nov 03, 2025

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி13 வது சீசனில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை  வென்றது.

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப் பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. முதல் முறையாக நடந்த இந்த சாதனையைஇந்திய ரசிகர்கள் கொண்டாடினர். 13-வது சீசன் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், மும்பை புறநகரான நவி மும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று  நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதினர் .  திட்ட மிட்டநேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. மழையால் 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரை இறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர்.இந்திய அணி 50 ஓவர்களில் ,7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள்,  வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக உலக கோப்பையை வென்றது.

Nov 01, 2025

இந்திய பெண்கள் அணிஉலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது.

பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்இந்தியா, இலங்கையில், நவி மும்பையில் நடந்த 2வது அரையிறுதியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127*), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89) கைகொடுக்க, இந்திய அணி (341/5, 48.3 ஓவர்) 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை (338/10, 49.5 ஓவர்) வென்றது.பெண்கள் ஒருநாள் போட்டி அரங்கில் இந்திய அணி,  அதிக ரன்னை 'சேஸ்' செய்து வரலாறு படைத்து,3வது முறையாக (2005, 2017, 2025) பைனலுக்கு முன்னேறியது. நாளை, நவி மும்பையில் நடக்கவுள்ள பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இதில் ஜெமிமா 'மேஜிக்' பேட்டிங் தொடர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய பெண்கள் அணிக்கு, சச்சின், கும்ளே, யுவராஜ், கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Nov 01, 2025

புரோ கபடி லீக்12வது சீசன் தொடரில், சாம்பியன் ஆன, டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலை வாஸ், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன. நேற்று, டில்லியில் நடந்த பைனலில் புனே, டில்லி அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டில்லி அணியினர், புனே அணியை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் டில்லி அணி 20-14 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் ஓரளவு எழுச்சி கண்ட புனே அணிக்கு 14 புள்ளி மட்டும் கிடைத்தது. ஆட்டநேர முடிவில் டில்லி  அணி 31-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2021-22, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.புரோ கபடி சாம்பியன் டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது. புனே அணிக்கு ரூ.1.8 கோடி கிடைத்தது.

1 2 ... 55 56 57 58 59 60 61 ... 136 137

AD's