பாரா 'கிளைம்பிங்' உலக கோப்பை தொடர் பிரான்சின் லாவல் நகரில் மொத்தம் 18 நாடுகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் மணிகண்டன் குமார் பங்கேற்றார். சமீபத்தில் தென் கொரியாவில் நடந்த உலக சாம்பியன் ஷிப்பில் வெள்ளி வென்றிருந்தார். இம்முறை ‘ஆர். பி.2' பிரிவில் களமிறங்கினார் .மணிகண்டன் 44+ புள்ளி எடுத்து, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். உலககோப்பை தொடரில் மணிகண்டன் வென்ற முதல் தங்கம் இது. ஜெர்மனியின் பிலிப் குரோஜக் (44), ஆஸ்திரியாவின் டெனியல் வியனெர் (40) அடுத்த இரு இடம் பிடித்தனர்.ஐந்து தங்கம், 2 வெண்கலம் வென்ற பிரான்ஸ் அணி, ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது.பெங்களூருவை சேர்ந்த மணிகண்டன், 5 வயதில், வலது காலில் ஏற்பட்ட 'போலியோ' பாதிப்பில் இருந்து மீண்டார். 16 வய தில் வேகமாகசுவற்றில்ஏறும், சாகசபோட்டிகளில்('கிளைம்பிங்') பங்கேற்றார்.முதன்முறையாகஉலககோப்பைதொடரில் சாதித்துள்ள இவர் ,உலக சாம்பியன்ஷிப்பில் ஆறு பதக்கம் வென்றுள்ளார்.
ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் டிராபி தொடர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில், லீக் சுற்றில் லெபனான் (14-10), ஆப்கானிஸ் தானை (26-5) வீழ்த்திய இந்தியாமுதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த காலிறுதியில் ஈரானை (21-7) வென்றஇந்தியா, அரையிறுதியில் 17-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவை வென்றது. பைனலில் இந்தியா ,கஜகஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 0-27 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.இதன்மூலம் இந்தியாஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் சீரிஸ் தொடர்களில் விளையாட தகுதி பெற்றது .
ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் பஹ்ரைனின் மனாமாநகரில், ஆண்களுக்கான 60 கிலோ பளுதுாக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் மகாராஜன் ஆறுமுகபாண்டியன் 1 16, பங்கேற்றார்.'ஸ்னாட்ச்' பிரிவில் 114, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 142 என, ஒட்டுமொத்தமாக 256 கிலோ பளுதுாக்கிய இவர், 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.இவர், 'ஸ்னாட்ச்' பிரிவில் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.எட் வினா ஜான்சன், தன்னு, ஷவுர்யா, பூமிகா அடங்கிய இந்திய அணி, பெண்களுக்கானமெட்லே' தொடர் ஓட்டத்தின் பைனலில், இலக்கை 2 நிமிடம், 09.65 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது. இந்திய அணி ஆண்களுக்கான 'மெட்லே' தொடர் ஓட்டத்தில் (ஒருநிமிடம், 59.96 வினாடி) 5வது இடம் பிடித்தது.இதுவரை 3 தங்கம், 10 வெள்ளி, 11 வெண்கலம், என மொத்தம் 24 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து ,ஒலிம்பிக் (ஒரு வெள்ளி, ஒரு வெண் கலம்), உலக சாம்பியன் ஷிப் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப், இந்திய ஓபன், சீன மாஸ்டர்ஸ் தொடர்களில் காலிறுதி வரை சென்ற இவர், ஒரு சாம்பியன் பட்டம் கூட வெல்லவில்லை. கடைசியாக, கடந்த டிசம்பரில் நடந்த சையது மோடி சர்வதேச தொடரில் கோப்பை வென்றிருந்தார்.காலில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிந்து, இந்த ஆண்டு நடக்கவுள்ள மீத முள்ள பி.டபிள்யு.எப்., டூர் தொடர்களில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். சிந்து கூறுகையில், "காயம் முழுமையாக குணமடையாததால், நடப்பு சீசனில் இருந்துபாதியில் விலக நேரிட்டது. எனது பயிற்சியாளர்கள், மருத்துவ குழுவினருடன்ஆலோசித்து இம்முடிவை எடுத்துள்ளேன்.காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு தேவையான பயிற்சியை ஏற்கனவே துவக்கிவிட் டேன். முழு உடற்தகுதியுடன் புதிய சீசனில் கள மிறங்குவேன்," என்றார்.
ஆசிய யூத் விளையாட்டு பஹ்ரைனின் மனாமா நகரில் ,40 நாடுகளின் 8000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான பளுதுாக்குதல் 44 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரி தீஸ்மிதா போய் 16, பங்கேற்றார். பிரி தீஸ்மா 'ஸ்னாட்ச்' பிரிவில் 66 கிலோ துாக்கி, 2வது இடம் பிடித்துவெள்ளி வென்றார். யூத் பிரிவில் தனது தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன்காமன்வெல்த் சாம் பியன்ஷிப் போட்டியில் 63 கிலோ தூக்கி இருந்தார்.ஒடிசா வீராங்கனை பிரிதீஸ்மிதா, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் அதிகபட்சமாக 92 கிலோ தூக்கி, தங்க பதக்கத்தை வென்று உலக சாதனை படைத்தார்.ஏற்கனவே கடந்த ஆண்டு யூத் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான 40 கிலோ பிரிவில் உலக சாதனை (76 கிலோ) படைத்தி ருந்தார். ஒட்டுமொத்தமாக 158 கிலோ துாக்கிய இவர், முதலிடத்தை கைப்பற்றினார்.இந்தியாவின் பூமிகா பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில், இலக்கை 24.43 வினாடியில் கடந்து, 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண் கலம் என, 20 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. முதலி டத்தில் சீனா (28 தங்கம், 19 வெள்ளி, 8 வெண்கலம்) தொடர்கிறது.
ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பி யன்ஷிப் சீனாவின் செங்டு நகரில், (15, 17 வயது) பெண்கள் ஒற்றையர் பிரிவு (17 வயது) பைனலில் இந்தியாவின் லக்சயா, திக்ஷா மோதினர்.மொத்தம் 27 நிமிடம் நீடித்த போட்டியில் திக் ஷா 21-16, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பத்தை வென்றார். லக்சயா வெள்ளி வென்றார். இப்பிரிவில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் திக் ஷா.இந்தியாவின் ஷைனா, பெண்கள் ஒற்றையர் பிரிவு (15 வயது) பைனலில், ஜப்பானின் சிஹாரு டோமிடா மோதினர். இதில் ஷைனா 21-14, 22-20 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கம் கைப்பற்றினார்.இப்பிரிவில் ஷைனா தங்கம் வென்ற, 4வது இந்திய வீராங்கனையானார் .இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண் கலம் என, 5 பதக்கம் கிடைத்துள்ளது.
பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் சென்னையில்,இன்று துவங்குகிறது.இந்தியா சார்பில் மாயா, ரேவதி, சஹாஜா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா என மூவருக்கு ஒற்றையர் பிரிவில் சிறப்பு அனுமதி ('வைல்டு கார்டு) வழங்கப்பட்டுள்ளது. இவர்கள்சொந்த மண்ணில் அசத்தினால், கோப்பை வென்று சாதிக்கலாம். . இந்தியாவின் வைஷ்ணவி-மாயா ரேவதி, லட்சுமி–தியா ஜோடிக்கு ,இரட்டையரில் 'வைல்டு கார்டு' சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.'நடப்புசாம்பியன், செக்குடியரசின் லிண்டா புருக்விர்ட்டோவா, போலந்தின் மாக்டா லினெட்டே, குரோஷியாவின் டோன்னா வெகிச், ஜெர்மனியின் டாட்ஜனாமரியா,உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
டபிள்யு.டி.டி., ஸ்டார் கன்டெண்டர் தொடர்இங்கிலாந்தின் லண்டனில். ஆண் கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சத்யன், பெல்ஜியத்தின் அட்ரியனை சந்தித்தார். சத்யன் முதல் செட்டை 11-4 , 2 வதுசெட் 11-6 , மூன்றாவது செட் , 11-8 என வெற்றி பெற்றார்.இந்தியாவின் ஹர்மீத் தேசாய், மற்றொரு போட்டியில் 3-1 என (5-11, 12-10, 11-8, 14-12) சக வீரர் மனுஷ் ஷாவை வென்றார். இந்தியாவின் தியா, யாஷஸ்வினி பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் மோதினர். இதில் தியா 3-2 (11-9, 5-11, 8-11, 11-3, 12-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தியாவின் மானவ் தக்கார், மணிகா பத்ரா நேரடியாக இரண் டாவது சுற்றில் பங்கேற்க உள்ளனர். கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் தியா, மனுஷ் ஜோடி, 2-3 என யூகியா (ஜப்பான்), யூபின் (தென் கொரியா) ஜோடியிடம் தோல்வியடைந்தது.
.ஆசிய ஜூனியர் (15, 17 வயது) பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்சீனாவின் செங்டு நகரில், நேற்று, காலிறுதி போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையரில் (17 வயது) இந்தியாவின் லக்சயா, தாய்லாந்தின் லலிதா மோதினர்.இதில் லக்சயா 11-21, 21-16, 21-19 என்ற கணக் கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் திக் ஷா மற்றொரு போட்டியில் 21-17, 21-8 என, இந்தோனே ஷியாவின் ரைசியாவை தோற்கடித்தார்.இந்தியாவின் ஷைனா பெண்கள் ஒற்றையர் பிரிவு (15 வயது) போட் டியில் 21-14, 21-16 என, ஜப்பானின் யூபிகி அஜுமாயாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். இந் தியாவின் அதிதி, பொன்னம்மா விருத்திஜோடி ,பெண்கள்இரட்டையர் பிரிவில் (17 வயது) 17-21, 14-21 என சீனா வின் லின் லின் ஜியாங், யூ ஜின் ஜியாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
23 வயதுக்கு உட்பட் டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன் ஷிப் தொடர் செர்பியாவில் ,பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடக்கின்றன. 76 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக், மெக்சிகோவின் ஜிமனெசை எதிர்கொண்டார். இதில் பிரியா 8-1 என வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.உலக சாம்பியன்ஷிப்பில் இவர் வென்ற 6 வது பதக்கம் இது. ஏற்கனவே 17 வயது (2 தங்கம்), 20 வயது (1 தங்கம், 2 வெள்ளி) பிரிவில் 5 பதக்கம் வென்று இருந்தார். இந் தியாவின் ஸ்ரீஷ்டி துருக்கியின் 68 கிலோ பிரிவு அரையிறுதியில் 6-8 என துருக்கியின் நெஸ்ரினிடம் வீழ்ந்தார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஹங் கேரியின் கரோலினாவை சந்திக்க உள்ளார். மற்றொரு அரையிறுதியில் (65 இந்தியாவின் புல்கிட், 6-9 என ரஷ்யா வின் எலிசவெட்டாவிடம் வீழ்ந்தார். 55 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நிஷூ, 4-6 என துருக்கியின் டெமிரி டம் தோல்வியடைந்தார். புல்கிட், நிஷூ என இருவரும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.