25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஹரியானாவின் சீமா தேசிய தடகள வட்டு எறிதலில்  முதலிடம் பிடித்தார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஹரியானாவின் சீமா தேசிய தடகள வட்டு எறிதலில்  முதலிடம் பிடித்தார் .

 தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான  வட்டு எறிதல் பைனலில், ஹரியானாவின் சீமா, 55.26 மீ., எறிந்து தங்கத்தை வென்றார். ரயில்வேயின் நிதி  (53.71 மீ.,), ஹரியானாவின் சன்யா யாதவ் (52.05 மீ.,) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். 

 ரயில்வே அணியின் கவுதம், சர்வீசஸ் அணியின் ராம்பீர், மத்திய பிரதேசத்தின்தேவ் மீனா தலா 5.10 மீ., தாண்டி, ஆண்களுக்கான 'போல் வால்ட்' பைனலில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.

ரயில்வே அணியின் பைரபி ராய் (13.10 மீ.,) தங்கம் வென்றார். மகாராஷ்டிராவின் பூர்வா சவந்த் (13.05 மீ.,), மத்திய பிரதேசத்தின் நிமிஷா (12.96 மீ.,) பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' பைனலில்வெள்ளி, வெண்கலம் வென்றனர். 

ஹிமாச்சல பிரதேசத்தின் சீமா, இலக்கை 16 நிமி டம், 01.27 வினாடியில் கடந்து பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில் தங்கத்தை கைப்பற்றினார்.

அனைத்து இந்திய போலீஸ் அணியின் பிரின்ஸ் குமார் 14 நிமிடம், 06.57 வினாடியில் ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில்  கடந்துமுதலிடம் பிடித்தார். சர்வீசஸ் அணியின் தன்வார் (14:14.88), ரயில்வேயின்அபிஷேக்(14:19.16) வெள்ளி, வெண்கலம் வென்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News