25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Sep 20, 2025

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 9-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார் அன்டிம் பங்கல் .

குரோஷியாவின் ஜாக் ரெப்பில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்'  பிரிவு போட்டி நடந்தன. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அன்டிம், இருமுறை ஐரோப்பிய சாம்பியன் ஆன சுவீடனின் ஜோனா மால்ம்கிரெனை சந்தித்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட அன்டிம், 9-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார். 

Sep 19, 2025

பாட்மின்டன் காலிறுதிக்கு  முன்னேறிய சிந்து .

மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750’ பாட்மின்டன் தொடர் சீனாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின்சிந்து, தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவோங் மோதினர். முதல் செட்டை 21-15 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டையும் 21–15 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் சாய்ராஜ், சிராக்ஷெட்டி ஜோடி,ஆண்கள் இரட்டை சாத்விக்யர் பிரிவு 2வது சுற்றில் ,சீனதைபேயின் சியு ஹசியாங் சியே, சி-லின் வாங் ஜோடியை சந் தித்தது. மொத்தம் 33 நிமி டம் நீடித்த போட்டியில் சாத்விக், சிராக் ஜோடி 21-13, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. 

Sep 19, 2025

16 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஆசிய வாலிபால்3 போட்டியிலும் வெற்றி பெற்று, பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

16 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஆசிய வாலிபால் ('டிவிசன் பி') தொடர்மலேசியாவின் செரெம்பன் நகரில் இந்திய அணி 'பி' பிரிவில் ஈரான், உஸ் சமோவா பெகிஸ்தான், அணிகளுடன் இடம் பெற்றது. லீக்சுற்றில் பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்று, பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.இதில் நேற்று, 'பி' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த இந்தோனேஷிய அணியைசந்தித்தது. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 24-24 என சமநிலையில்இருந்தன. பின் இந்திய அணி, 65-53 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.

Sep 19, 2025

ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் 9வது சீசன்வெண்கலம் வென்ற இந்திய ஜோடி.

ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் 9வது சீசன் தென் கொரியாவில், கலப்பு இரட் டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜெய் மீனா, ஆத்யாதிவாரி ஜோடி, தென் கொரியாவின் ஹைகியோங் முன், கிம் பீம்-ஜூன் ஜோடியைசந்தித்தது. இந்திய ஜோடி, 2-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது .ஜெய் மீனா-ஆத்யா திவாரி ஜோடி சர்வதேச அரங்கில் கைப்பற்றிய 2வது பதக்கம்.

Sep 19, 2025

புரோ கபடி லீக் 12வது சீசன் ஜெய்ப்பூர் அணி வெற்றி.

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில்,  தமிழ் தலைவாஸ், பெங்களூருஉள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ராஜஸ் தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்' என போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.நேற்று நடந்த லீக் போட்டியில் ஜெய்ப்பூர், பெங்கால் அணிகள் மோதி,. பெங்கால் வீரர்களை 'ஆல்-அவுட்' செய்த ஜெய்ப்பூர் அணி, முதல் பாதி முடிவில் 24-18 என முன்னிலையில் இருந்தது. ஆட்டநேர முடிவில் ஜெய்ப்பூர் அணி 45-41 என்ற கணக்கில் 4வது வெற்றியை பதிவு செய்தது.

Sep 18, 2025

ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை . ஜெய் மீனா 'வெண்கலம்'

ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் 9வது சீசன் தென் கொரியாவில்,  ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜெய் மீனா 4-1 என, சீனாவின் லி ரன் செங்கை வீழ்த்தினார். அடுத்து நடந்த அரையிறுதியில் ஜெய் மீனா, சீன தைபேயின் சென் போயி மோதினர். ஜெய் 1-4 என தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் ஆசிய 'சாப்ட் டென்னிஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை .

Sep 18, 2025

கபடி லீக் 12வது சீசன் டில்லி அணி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலை வாஸ், மும்பை உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்' என போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், டில்லி அணிகள் மோதின. இதில் டில்லி அணி 33-29 என வெற்றி பெற்றது. டில்லி அணிக்கு நீரஜ் நார்வல் (9 புள்ளி) கைகொடுத்தார். தெலுங்கு டைட்டன்ஸ் சார்பில் கேப்டன் விஜய் மாலிக் 5 புள்ளி பெற்றார்.இதுவரை விளையாடிய 6 போட்டியிலும் வெற்றி பெற்ற டில்லி அணி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது

Sep 18, 2025

ஆஸ்திரேலிய பெண்கள் அணியை  வீழ்த்திய  இந்தியா. மந்தனா சதம்.

ஆஸ்திரேலிய பெண்கள் அணி, இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று,  முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. நேற்று, நியூ சண்டிகரில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி 'பீல்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணி 49.5 ஓவரில், 292 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவரில், 190/10 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.மந்தனா சதம் அடிக்க, இந்திய அணி 102 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

Sep 18, 2025

75 வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு , அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 'ஜெர்சி' பரிசு .

வரும் டிசம்பரில் மெஸ்ஸி, இந்தியா வரவுள்ள அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அணி, 2022ல் 'பிபா' உலக கோப்பை வென்றது. கோல்கட்டா, ஆமதாபாத், மும்பை, டில்லி என நான்கு நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.பிரதமர் மோடியை டிச. 15ல் டில்லியில் மெஸ்சி, சந்திக்க உள்ளார். இதனிடையே 75 வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, 2022, உலக கோப்பை தொடரில் அணிந்திருந்த 'ஜெர்சியை' பரிசாக அனுப்பியுள்ளார் மெஸ்ஸி.

Sep 17, 2025

புரோ கபடி லீக் 12வது சீசன் பெங்கால் வெற்றி,

 புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில்,. நேற்று, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் பெங்கால், உ.பி., அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில்பெங்கால் அணி 41-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

1 2 ... 69 70 71 72 73 74 75 ... 136 137

AD's



More News