25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஜியோ சைக்கிள்..!எலக்ட்ரிக் வாகன துறையில் நுழையும் ஜியோ..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜியோ சைக்கிள்..!எலக்ட்ரிக் வாகன துறையில் நுழையும் ஜியோ..

தொலைதொடர்பு துறை உள்பட பல துறைகளில்ஜியோ நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி துறையில் ஈடுபட போவதாகவும், முதல் கட்டமாக எலக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எரிபொருள் விலை உயர்வு, காற்று மாசு உள்பட பல்வேறு பிரச்சனைகள் சுற்றுச்சூழல் துறையில் உள்ள நிலையில், மக்களுக்கு ஒரு சிறந்த போக்குவரத்து சாதனம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தி செய்யப் போவதாக அந்நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

 48 வாட்ஸ் லித்தியம் பேட்டரியுடன் வரும் இந்த சைக்கிள், ஒருமுறை சார்ஜ் செய்தால்100 கிலோ மீட்டர் வரை இயக்கலாம் என்றும், ஒரு மணி நேரத்திற்கு45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது, குறிப்பாக இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.முழுமையாக சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படை விலை15 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், ரூ.900 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்யலாம். மேலும், ஆன்லைன் மூலமாக இந்த சைக்கிளை ஆர்டர் செய்யலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2025 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், முதல் கட்டமாக முக்கிய நகரங்களில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News