செப். 27-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் டில்லியில், உயரம் தாண்டுதல் போட்டியில் ('டி64') இந்தியா சார்பில் பிரவீன் குமார் 22, பங்கேற்கிறார். ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் , வெள்ளிவென்ற இவர், உலக தடகளத்தில் 4வது முறையாக களமிறங்குகிறார். 2019ல் துபாயில் நடந்த உலக சாம் பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக விளையாடிய பிரவீன், 4வது இடம் பிடித்தார். கடந்த ஆண்டு காயத்தால் பதக்கத்தை தவறவிட்டேன். இம்முறை முழு உடற்தகுதியுடன் இருப்பதால் தங்கம் வென்று சாதிப்பேன் என நம்புகிறேன்," என்றார். கடினமாக பயிற்சி மேற்கொண்டால் 2.10 மீ.,உயரத்தை எட்டலாம் என்றார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தபெண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் ஷா'காரி ரிச்சர்ட்சன்மெலிஸ்சா உள்ளிட்டோர் அடங்கிய அமெரிக்க அணி, இலக்கை 41.75 வினாடியில்கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. வெள்ளி, வெண்கலத்தை, முறையே ஜமைக்கா (41.79 வினாடி), ஜெர்மனி (41.87) கைப்பற்றின.ஆண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் நோவா லைஸ், கிறிஸ்டியன் கோல்மன், கென்னெத் அடங்கிய அமெரிக்க அணி, இலக்கை 37.29 வினாடியில் கடந்து தங்கம் வென்றது.இது நோவா லைஸ் வென்ற 2வது தங்கம். ஏற்கனவே 200 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். பெண்களுக்கான 4x400 மீ.,தொடர் ஓட்டத்தின் பைனலில் இசபெல்லா, லின்னா, ஆலியா பட்லர், சிட்னி மெக்லாக்லின் அடங்கிய அமெரிக்க அணி (3 நிமிடம், 16.61 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றது. வெள்ளி, வெண்கலத்தை முறையே ஜமைக்கா, நெதர்லாந்து வென்றன.ஆண்களுக்கான 4x400 மீ.,தொடர் ஓட்டத்தின் பைனலில் ,அமெரிக்க அணி (2 நிமிடம், 57.83 வினாடி) வெள்ளி வென்றது. போட்ஸ்வானா அணி (2 நிமிடம், 57.76 வினாடி) தங்கத்தை கைப்பற்றியது.இம்முறை 16 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என, 26 பதக்கம் வென்ற அமெரிக்கா முதலிடத்தை கைப்பற்றியது.
பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., கொரிய ஓபன் டென்னிஸ் தொடர் தென்கொரியாவின் சியோல் நகரில் ஒற்றையர் பிரிவு பைனலில் போலந்தின் இகாஸ்வியாடெக், ரஷ்யாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவா மோதினர்.முதல் செட்டை 1-6 என இழந்த ஸ்வியாடெக், 'டை பிரேக்கர்' வரை நீடித்த 2வது செட்டை 7-6 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் ஸ்வியாடெக் 7-5 என போராடி வென்றார். இரண்டு மணி நேரம், 43 நிமிடம் நீடித்த போட்டியில் ஸ்வியா டெக் 1-6, 7-6, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார்.
ஆசிய ஜூனியர் (14 வயது) சாம்பியன்ஷிப் தொடர் பிலிப்பைன்ஸ்தலைநகர் மணிலாவில் ,பெண்கள் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜென்சி தீபக்பாய், தென் கொரியாவின்எரின்லிம்மை எதிர்கொண்டார். ஜென்சி, முதல் செட்டை 6-1 என எளிதாககைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தி, ஒரு மணி நேரம், 14 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில்ஜென்சி 6-1, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
சீனாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடரில் ஆண்கள்இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய் யிக் ஜோடியை சந்தித்தது.முதல் செட்டை 21-17 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-14 என மொத்தம் 41 நிமிடம் நீடித்த போட்டியில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-17, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஜோடி, நடப்பு சீசனில் தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியது.
17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து தொடர் இலங்கையின்கொழும்புவில் மொத்தம் 7 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.இந்திய அணி 'பி' பிரிவில் மாலத்தீவு, பூடான் உள்ளிட்ட அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் 6-0 எனமாலத்தீவை வென்றது இந்தியா. இரண்டாவது போட்டியில், 17 வயதுக்குட்பட்ட அணிகள் தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள (தெற்காசிய அளவில்) இந்தியா,3வது இடத்திலுள்ள பூடானை சந்தித்தது. முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதை யடுத்து 6 புள்ளியுடன், பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் சீனாவில் ,ஆண்கள் இரட்டையர் பிரிவு (டபிள்யு.எச். 1-2) அரையிறுதியில் இந்தியாவின் பிரேம்குமார் ஆலே, அபு ஹுபைதா ஜோடி 4-21, 10-21 என சீனாவின் மை ஜியான் பெங், ஜிமோ ஜோடியிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.மற்றொரு அரையிறுதியில் (எஸ்.எல்.3-4) இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி 21-16, 21-17 என சீனாவின் யுயாங் காவோ, ஜியாங் லிசுவான் ஜோடியை வென்றது.(எஸ்.எல்.3) அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத் 21-16, 21-19 என, ஜப்பானின்புஜிஹராவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் (எஸ்.எல். 4) இந்தியாவின்சுகந்த் கடம் 21–16, 21–12 என தென் கொரியாவின் சோ நடானை தோற்கடித்தார்.எஸ்.எச். 4 பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் நாகர் கிருஷ்ணா 21– 16, 21-16 என சீனாவின் ஜெங்கை வென்றார்.
ஆசியகோப்பை('டி-20')17வதுசீசன் ஐக்கிய அரபுஎமிரேட்சில்(யு.ஏ.இ.,), இந்தியா,'நடப்புசாம்பியன்' இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அபுதாபியில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, ஓமனை எதிர்கொண்டது.'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் ஸ்கோர் 14 ஓவரில் 135/5 ரன் எடுத்திருந்தது.
தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் ஜப்பான் தலைநகர் உலக டோக்கியோவில் ,ஆண்களுக்கான 200 மீ., ஓட்ட பைனலில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (19.52) தங்கம் வென்றார்.உலக தடகளம் 200 மீ ஓட்டத்தில் தொடர்ந்து இவர் வென்ற நான்காவது தங்கம் ஆகும்.பெண்களுக்கான 200 மீ., ஓட்டம் பைனலில் நேற்று அமெரிக்காவின் மெலிஸ்சா ஜெபர் சன் (21.68 வினாடி) முதலிடம் பிடித்தார். உலக தடகளத்தின் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி (2017, 2019, 2022, 2023, 2025) 5வது முறையாக பங்கேற்றார்.தகுதிச்சுற்றில் 55.18 மீ.,துாரம் மட்டும் எறிந்த இவர், 29வது இடம் பிடித்தார்.
16 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஆசிய கூடைப்பந்து ('டிவிசன் பி') தொடர் மலேசியாவின் செரெம்பன் நகரில் இந்திய அணி 'பி' பிரிவில் ஈரான்,உஸ்பெகிஸ்தான், சமோவா இடம் அணிகளுடன் பெற்றது.லீக் சுற்றில் 3 போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறி, , 67-66 என்ற கணக்கில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.பின் ஈரான் அணியினர் எழுச்சி பெற, இந்தியா 61-62 என பின் தங்கியது. கடைசி நிமிடத்தில் அடுத் தடுத்து புள்ளிகள் எடுத்த இந்தியா, 67-66 என்ற கணக்கில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. ஆசிய கூடைப்பந்து 'டிவிசன் A”பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றது.