புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவின், ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்” என போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, உ.பி.. அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் 36-36 என சமநிலையில் இருந்தது. டை பிரேக்கரில் உ.பி., அணி 6-5 என வெற்றி பெற்றது. (அக். 22-31, பஹ்ரைன்) ஆசிய யூத் விளையாட்டு குத்துச்சண்டை போட்டிக்கான 23 பேர் கொண்ட இந்திய அணியில் துருவ் கார்ப், உத்தம் சிங் ராகவ், குஷி சந்த், அஹானா சர்மா, சந்திரிகா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.(15, 17 வயது, அக். 21-26, சீனா) ஆசியபாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் தன்வி பத்ரி இடம் பெற்றுள்ளார். இவர், கடந்த ஆண்டு 15 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஒற்றையரில் தங்கம் வென்றிருந்தார். ஜூனியர் இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாசென்றுள்ள ,5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. கான் பெராவில் முதல் போட்டி இன்று நடக்கிறது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, உட்பட 8 அணிகள் பங்கேற்கின் றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட் டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு (அக். 29, 30) முன்னேறும். பைனல் நவ 2ல் கொழும்பு அல்லது பெங்களூருவில் நடக்கும். தனதுமுதல் போட்டியில் ,இந்திய அணி (செப். 30) இலங்கையை சந்திக்கிறது. இதற்குத் தயாராகும் வகையில் இன்று முதல், பயிற்சி போட்டிகள் துவங்குகின்றன. கொழும்புவில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள் மோத காத்திருக்கின்றன ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பெங்களூருவில் நடக்கும் போட்டியில் ,இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டிகள் இந்திய 'ஏ' அணி, நியூசிலாந்தைஎதிர்கொள்கிறது.
அஷ்வின் இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ,டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்கள் பட்டியலில், கும்ளேவுக்கு (619) அடுத்து, 2வது இடத் தில் உள்ளார் அஷ்வின் (537). கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் டில் இருந்து ஓய்வு பெற்றார். பிரிமியர் லீக் அரங்கில் சென்னை (2008-15, 2025), புனே (2016), பஞ்சாப் (2018-19), டில்லி (2020-21), ராஜஸ்தான் (2022-24) அணிகளுக்காக, களமிறங்கினார். சமீபத்தில் பிரிமியர் லீக் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார் அஷ்வின். சிட்னி தண்டர் அணிக்காக ஆஸ்தி ரேலியாவில் நடக்கவுள்ள 'பிக் பாஷ் லீக்' 15வது சீசனில் (டிச. 15 - 2026, ஜன. 26) விளையாட ஒப்பந்தமானார் அஷ்வின். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். வீரர்கள் ஏலத்தில் (அக். 1) இடம் பெற்றுள்ள அஷ்வின், சர்வதேச லீக் டி-20' 4வது சீசனுக்கான (டிச. 2 2026, ஜன. 4) தேர்வாகும் பட்சத்தில், 'பிக் பாஷ் லீக்' தொடரில் பின் பாதியில் களமிறங்குவார்.
இந்தியாவின் ஜோகா பர்டி, பெண்களுக்கான 'ஸ்பீடு கிளிம்பிங்' போட்டியில் 7.883 வினாடியில் இலக்கை அடைந்து, புதிய தேசிய சாதனை படைத்தார். ஒட்டு மொத்தமாக இவர் 31வது இடம் (மொத்தம் 42) பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தார். தென் கொரியாவில் பாரா 'கிளிம்பிங்' உலக சாம்பியன்ஷிப் ,தென் கொரியாவில். இந்தியா சார்பில் மணிகண்டன் குமார் பங்கேற்றார். கடந்த 2012ல் உலக சாம்பியன் ஆன இவர்,36+ புள்ளி எடுத்து வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 2014க்குப் பின் உலக அளவில் இவர் வென்ற முதல் வெள்ளிப்பதக்கம் இது. அமெரிக்காவின் பிரைடன் பட்லர் (444) தங்கம், ஜெர்மனியின் பிலிப் (36) வெண்கலம் கைப்பற்றினர்.
பெண்களுக்கான சாலஞ்சர் டென்னிஸ் தொடர், சீனாவில் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ருடுஜா போசாலே ஜோடி, தென் கொரியாவின் நாரி கிம், சீனாவின் செங்இயி யுவான் ஜோடியை எதிர் கொண்டது. துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல் பட்ட இந்திய ஜோடி, இரு செட்டுகளையும் எளிதாக வசப்படுத்தி,.ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் நடந்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.இந்தியாவின் ரியா பாட்யா, சீனா வின் ஜின்யு காவோவை பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ,முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய ரியா, அடுத்த செட்டை 1-6 என நழுவவிட்டார்.ரியா 6-3 என வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது, கடைசி செட்டை வென்றார். ஒரு மணி நேரம், 57 நிமிடம் நடந்த போட்டி முடிவில் ரியா, 6-4,1–6, 6-3 என வெற்றி பெற்றார்.
நேற்று துவங்கிய 'சூப்பர் 500' சர்வதேச பாட்மின்டன் தொடர் தென் கொரியாவில், பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் மேஹனா ரெட்டி, ஜப்பானின் ரிரினா ஹிரா மோட்டோவை சந்தித்து , மேஹனா 21-19, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.இரண்டாவது போட்டியில் மேஹனா, சீனா தைபே வின் பெய் சு செனை எதிர்கொண்டார். இதில் 21-6, 21-18 என எளிதாக வெற்றி பெற்ற மேஹனா, பிரதானசுற்றுக்கு தகுதி பெற்றார். தாய்லாந்தின் சியாஹெங்கை இன்று எதிர்கொள்கிறார்.
உலக பாரா வில்வித்தை சாம் பியன்ஷிப்தென் கொரியாவின் குவான்ஜு நகரில்ஆண்கள் ‘ரீகர்வ்' போட்டியில் தகுதிச்சுற்று நடந்தன. இந்தியாவின் ஹர் விந்தர் சிங், 645 புள்ளி எடுத்து, 4வது இடம் பிடித்தார். மற்ற இந்தியவீரர்கள் சாஹில் 14 (633), தன்னா ராம் 30வது (617) இடம் பிடித்தனர்.இரட்டையரில் பூஜா, சரப்ஜித் ஜோடி, 4வது இடம் பெற்றது.இந்தியாவின் ஷீத்தல் தேவி பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில், 687 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்தார்.பெண்கள் இரட்டையரில் ஷீத்தல், சரிதா ஜோடி 4வது இடம் பிடித்தது.சரிதாவுக்கு 12வது (666) இடம் கிடைத்தது. அடுத்து நடந்த பெண்கள் 7-1 என ஒற்றையர் ('ரீகர்வ்) முதல் சுற்றில் இந்தியாவின் பூஜா, போலந்தின் ஜோலண்டாவை வீழ்த்தினார்...
பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில் கால்பந்தில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கு, 1956 முதல் 'பாலன் டி ஆர்' விருது வழங்கப்படுகிறது. உலக கால்பந்து 'பிபா' தரவரிசையில் 'டாப்-100' பட்டியலில் உள்ள நாடுகளின் பத்திரிகையாளர்கள் ஓட்டுப்பதிவு தேர்வு செய்வர். அர்ஜென்டினாவின் மெஸ்சி அதிகபட்சம் 8 முறை, போர்ச்சுகலின் ரொனால்டோ 5 முறை இவ்விருது வென்றனர். 2025ம் ஆண்டின் சிறந்த வீரராக பிரான்சின், அவுஸ்மேன் டெம் பெலே தேர்வு செய்யப்பட்டார். கிளப் அரங்கில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடும் இவர், ரேமண்ட் கோபா, மிட்செல் பிளாட்டினி, ஜீன்-பியரே பாபின், ஜினடின்ஜிடேன், கரிம் பென்சிமாவுக்குப் பின், 'பாலன் டி ஆர்' விருது வென்ற 6வது பிரான்ஸ் வீரர் ஆனார். ஸ்பெயினின் அய்டனா பொன்மதி, சிறந்தவீராங்கனையாக ,தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ('ஹாட்ரிக்') தேர்வானார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா அணிபைனலுக்கு முன்னேற உதவினார்.சிறந்த வீராங்கனையாக ஐரோப்பிய கால்பந்து தொடரில்,ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
அக். 2 to 26 வரை பிரைம் வாலிபால் லீக் (பி.வி. எல்.,) 4வது சீசன் ஐதராபாத்தில், கோவா கார்டியன்ஸ் அணி முதன்முறையாக விளையாடுகிறது.இந்த அணிக்கு, உரிமையாளராக ராஜு சேகுரி உள்ளார். இந்திய கிரிக்கெட்வீரர் கே.எல்.ராகுல், கோவா அணியின் இணை உரிமையாளரானார்."பிரைம் லீக் தொடர், இந்தியாவில் வாலிபால் போட்டிக்கு திருப்பு முனையானது. இத்தொடரின் மூலம் இப்போட்டி மீதான ஆர்வம் இளம் விளையாட்டு நட்சத்திரங்களிடம் அதிகரிக்கும் என்றார். வாலிபால் விளை யாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என ராகுல்கூறினார்.
இந்தியா,இலங்கையில்ஐ.சி.சி. உலககோப்பை(50 ஓவர்),13வதுசீசன்(செப்.30நவ.2) நடக்கஉள்ளது..இந்தியா, ஆஸ்திரேலியா, உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. கவுகாத்தியில் நடக்கும், முதல் போட்டியில் இந்தியா ,இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய பெண்கள் அணி, இது வரை உலக கோப்பை வென்றதில்லை"இத்தொடர் சவாலாக இருக்கும். சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம் ஸ்னேராணா என கூறினார்கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இம்முறை கோப்பை வெல்வதே எங்கள் இலக்கு என தெரிவித்துள்ளார்.