25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Mar 27, 2026

தெற்காசிய கால்பந்து 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.அரை இறுதியில் இந்தியா.

 ஆண்களுக்கான தெற்காசிய கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோருக்கான) தொடர் மாலத்தீவில் ,இந்தியா, வங்கதேசம் உட்பட 7 அணிகள் இரு பிரிவுகளாக மோதுகின்றன. நேற்று மாலியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.விஷால் யாதவ், முதல் கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வங்கதேசம், இந்திய அணிகள்  . 'பி' பிரி வில் முதல் இரு இடத்தை உறுதி செய்து, அரையிறுதிக்கு முன்னேறின

Mar 27, 2026

சென்னை - மும்பை  அணிகள் ,பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சென்னை - மும்பை மோதல்.

 சென்னை - மும்பை  அணிகள் ,பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சென்னை - மும்பை மோதல்.முதற்கட்ட அட்டவணை முதல் 20 லீக் போட்டிகளுக்கான  (மார்ச் 28 - ஏப்.12) வெளியானது 2ம் கட்ட அட்டவணை , (ஏப். 13-மே 24) பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கு வெளியானது. வரும் மே 2ல்  சென்னை,  மும்பை அணிகள் சென்னையில் நடக்கும் போட்டியில் மோதுகின்றன. பிரிமியர் கிரிக்கெட் 19வது சீசன் நாளை துவங்கி.பைனல், மே31ல் நடக்கவுள்ளது. 84 போட்டிகளில் நடப்புசாம்பியன் ' பெங்களூரு,சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள், விளையாடுகின்றன.பின்னர் 'பிளே - ஆப்' சுற்றுக்கான அட்டவணை அறிவிக்கப்படும்.

Mar 26, 2026

இந்தியாவுக்கு ஆசிய வில்வித்தையில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆசிய வில்வித்தை ஸ்டேஜ் 1 தொடர்  தாய்லாந்தின் பாங்காக் நகரில் ரீகர்வ் பிரிவில் ஆண்கள் அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியாவின்  சுஹ்ஜெய்ன், தேவாங்க், ஜூயல் இடம் பற்ற இந்திய அணி, தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து இருந்தது. இந்திய அணி, நேற்று நடந்தகாலிறுதியில் ,மங்கோலியாவை சந்தித்தது.ஷு ட் ஆப்' வரை சென்ற, இப் போட்டியில் இந்தியா  29-27 என வெற்றி பெற்றது.அரையிறுதியில் இந்திய அணி, மலேசியாவை 5-1 என்ற கணக்கில், வென்று பைனலுக்கு  முன்னேறியது. இந்தியாவின் சிகிதா, தேஜல், ராஜ் கவுர்இடம் பெற்ற அணி, பெண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவில் ,தகுதிச்சுற்றில்  'நம்பர்-1' இடம்பெற்றது. நேற்று நடந்த காலிறுதியில் இந்திய அணி, 232-222 எனஹாங்காங்கை வென்று,அரையிறுதியில் இந்திய அணி, 229-226 என தாய்லாந்தை வீழ்த்தியது. பைனலில் (நாளை) இந்தியா-கஜகஸ் தான் மோத உள்ளன.பெண்கள் அணிகளுக்கான ரீகர்வ் ,அரையிறுதியில் இந்தியாவின் ரிதி, கீர்த்தி, ருமா இடம் பெற்ற அணி, 1-5 என சீனாவிடம் தோற்றது. அடுத்து நடந்த போட்டியில் இந்திய அணி 5-1 என மலேசியாவை வீழ்த்தி, வெண்கலம் கைப்பற்றியது. இந்தியாவின் ரஜத் சவுகான், ரிஷாப், பிரதமேஷ் இடம் பெற்ற அணி, ஆண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவு அரையிறுதியில் தகுதிச்சுற்றில் ,'நம்பர்-1' இடம் பிடித்தது. எனினும் அரையிறுதியில்  வியட்நாமிடம் இந்திய அணி, 233-234 என தோற்றது.அடுத்து நடந்த போட்டியில்  234-232  என பூடானை சாய்த்து, வெண் கலம் வசப்படுத்தியது. இந்தியாவின் ரிதி, பெண்களுக்கான தனிநபர் ரீகர் பிரிவு அரையிறுதியில் ,6-0 என மலேசியாவின் ஜோயேடனை வென்று, பைனலுக்குள் நுழைந்தார்.

Mar 26, 2026

இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர்''வரும் 'டி-20' உலக கோப்பை தொடரில் சிறப் பாக செயல்பட்டு, வெல்ல முயற்சிப்போம், என தெரிவித்தார்.

பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் (ஜூன் 12 -ஜூலை 5)  இங்கிலாந்து, வேல்சில், நடக்கவுள்ளது. இந்திய அணி,  இதற்கு தயாராகும் வகையில் தென் ஆப்ரிக்காவில் 5 போட் டிகள் (ஏப். 17, 19, 22, 25, 27) கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது.  ஐ.சி. சி., உலக கோப்பை கடந்த ஆண்டு நவி மும்பையில் நடந்த (50 ஓவர் ) பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய, ஹர்மன்பிரீத் கவுர்தலைமையிலான இந்திய அணி, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றுவரலாறு படைத்தது. இந்த வெற்றி, 'டி-20' உலக கோப்பையிலும் தொடரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு உலக கோப்பை வென்றதால், எங்கள் மீதான எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்தொடரில் கிடைத்த அனுபவம், உலகின் எந்த பகுதியிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது.

Mar 26, 2026

ஆசிய சைக்கிளிங் டிராக் சாம் பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

ஆசிய சைக்கிளிங் டிராக் சாம்பியன்ஷிப் பிலிப்பைன்சில். பெண்கள் ஜூனியர் ஸ்பிரின்ட் அணிக்கான போட்டியில் இந்தியா சார்பில் ஆபா, நமிதா, தபிதா இடம் பெற்ற அணி பைனலுக்குமுன்னேறியது. இதில் 52.817 வினாடியில் வந்து இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றது.இந்தியா சார்பில் செலஸ் டினா, திரியாஷா, கீர்த்தி இடம் பெற்ற அணிபெண்கள் ஸ்பிரின்ட் அணிக்கான போட்டியில் களமிறங்கியது. இதன் முதல் சுற்றில் இந்தியா, மலே சியா மோதின. இந்திய அணி 49.525 வினாடியில் வந்து, தேசிய சாதனை படைத்தது. இதற்கு முன் 50.329 வினாடியாக இருந்தது. இருப்பினும் இந்திய அணி இரண்டாவது சுற்று வாய்ப்பை இழந்தது. மலேசிய அணி 48.086 வினாடியில்அடுத்த சுற்றுக்கு வந்து, முன்னேறியது.

Mar 26, 2026

நியூசிலாந்துக்கு  எதிரான 5வது 'டி-20' போட்டியில் ,தென் ஆப்ரிக்க அணி, 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

,தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்பங்கேற்றது. நியூசிலாந்தில் நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2-2 என சம நிலையில் இருந்தது. கிறைஸ்ட்சர்ச்சில் 5வது போட்டி நேற்று,  நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து 'பீல் டிங்' தேர்வு செய்தது.தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/4 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 154/8 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.  தென் ஆப்ரிக்காவின் எஸ்தர்ஹியுசன்  ஆட்ட நாயகன், தொடர்  நாயகன் விருதுகளை வென்றார்.

Mar 26, 2026

தமிழகத்தின் ரீகன் தேசிய போல் வால்ட் போட்டியில், தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.

தேசிய உள்ளரங்கு தடகள சாம்பி யன்ஷிப், இந்தியாவில் முதன் முறையாக, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில்,.நேற்று இரண்டாவது,கடைசி  நாள் ஆண்களுக்கான போல் வால்ட் போட்டிகள் நடந்தது. தமிழகத்தின் ரீகன் கணேசன், 5.30 மீ., உயரம் தாவி, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.ராம்பீர் சிங் (4.85 மீ.,), பினீஷ் ஜேக்கப் (4.55) அடுத்த இரு இடம் பெற்றனர். தமிழகத்தின் ராபின்சன் ஆண்களுக்கான 'டிரி பில் ஜம்ப் 'போட்டியில் (14.67 மீ.,) இரண்டாவது இடம் பெற்று, வெள்ளி வென்றார். பெண்களுக்கான உயரம் தாண்டுதலில்,மூன்றாவது வாய்ப்பில் 1.71 மீ., தாவிய தமிழக வீராங்கனை கெவினா, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். முதல் வாய்ப்பில் குஜராத்தின் பயல் (1.71)தங்கம் வென்றார். தமிழகத்தின் சாய் சிந்தனா 20வயதுக்குட்பட்டபெண்களுக்கான 400மீ., ஓட்டத்தில் (59.96 வினாடி ) தங்கம் வென்றார்..உ.பி.,யின் சலோனி குமாரிபெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் (53.73) தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.  பஞ்சாப்பின் குரிந்தர்விர் சிங் ஆண்களுக்கான 60 மீ., ஓட்டத்தில் (6.60 வினாடி), தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.

Mar 25, 2026

அமெரிக்காவின் கல்சொமானி குழுமம் ,ராஜஸ்தான் அணியை ரூ.15,290 கோடிக்கு வாங்கியது.

 சென்னை, மும்பை உட்பட 10 அணிகள் பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்கின்றன. ராஜஸ்தான் அணியை விற்பனை செய்ய, அதன் உரிமையாளர் மனோஜ் பதாலே (எமர்ஜிங் மீடியா வென்ச்சர்ஸ்) முடிவு செய்தார். இதை வாங்க அமெ ரிக்க தொழில் அதிபர் கல் சொமானி, டைம்ஸ் இன்டர்நெட் குழுமம், ஆதித்ய பிர்லா குழுமம், மிட்டல்  குடும்பம் போட்டியிட்டன. முடிவில் கல்சொமானி குழுமம், ரூ.15,290, கோடிக்கு ராஜஸ்தான் அணியை வாங்கியது

Mar 25, 2026

இந்தியாவின் தான்வி சர்மா, முதன் முறையாக சர்வதேச பாட்மின்டன் தரவரிசையில் 34வது இடம் பிடித்தார்.

பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் உலக பாட்மின் டன் கூட்டமைப்பு (பி. டபிள்யு . எப்.,) சார்பில்,  வெளியானது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை இடம் சிந்து, 13வது பெற்றார். போலந்து தொடரில் கோப்பை வென்ற உன்னதி ஹூடா, 27வது இடத்தில் உள்ளார். அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் தான்வி சர்மா 17, உலகத் தரவரிசையில் முதன் முறையாக, பிரான்சின் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் 34வது இடம் பிடித்தார். சிந்து, உன்னதி ஹூடா வுக்கு அடுத்து சிறந்த தரவரிசை பெற்ற இந்திய வீராங்கனை ஆனார் தான்வி.இஷாராணி 40வது  இடத்திற்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையரில் தரவரிசையில் 12 வது இடம் பிடித்துள்ளார் இந்தியாவின் லக்சயா சென். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 4வது இடத்தில் தொடர்கிறது. 

Mar 25, 2026

இந்தியாவின் ரஜத் பசவுகான், பிரதமேஷ் ஆசிய வில்வித்தையில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆசிய வில்வித்தை 'ஸ்டேஜ் 1' தொடர் தாய்லாந்தின் பாங்காக் நகரில்,. ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் போட்டிகள் நடந்தன. இதன் இரண்டாவது சுற்றில் இத்தொடரின் தகுதிச் சுற்றில் 'நம்பர்-1' இடம் பெற்ற இந்தியா வின் ரஜத் சவுகான், 148-147 என வங்கதேசத்தின் ஜஸ்வர் ஜோவை வீழ்த்தி, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரதமேஷ் ஜவஹர், 145-139 என சிங்கப்பூரின் டெங்ஊனை வென்றார்.இந்தியாவின் ரிஷாப் யாதவ், 148-142 என தென் கொரியாவின் இவான் சினியவேவை வென்றார்..'பெண்களுக்கான ரீகர்வ் பிரிவில் போட்டிகள் நடந்தன. தகுதிச்சுற்றில் 2வது இடம் பெற்ற இந்தியாவின் ருமா பிஸ்வாஸ், 6-0 என தாய்லாந்தின் கன்யா நாத்தை வென்றார். வீழ்த்தினார்.இந்தியாவின் கீர்த்தி, 6-0 என ஆஸ்திரேலியாவின் மேகன் டெனியரை வென்றார்..ரிதி 7-1 என மங்கோலியாவின் பிஷிந்தியை வீழ்த்தி,மூவரும், மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தனர். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 136 137

AD's



More News