25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Apr 01, 2026

ஆசிய ஸ்குவாஷ் கூட்ட மைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நட்சத்திரங்களுக்கான விருது வழங்கப்படுகிறது.

ஆசிய ஸ்குவாஷ் கூட்ட மைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நட்சத்திரங்களுக்கான விருது வழங்கப்படுகிறது.ஜூனியர் பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்க னையாக இந்தியாவின் அனாஹத்  சிங் தேர்வானார். உலகத் தரவரிசையில் 20 வது இடத்திலுள்ள அனாஹத், கடந்த ஆண்டு (2025) ஆசிய ஜூனியர், ஆசிய சாம்பியன் ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

Apr 01, 2026

( MARCH 31 )– பஞ்சாப்,குஜராத் அணி,IPL - 2026.

குஜராத், பஞ்சாப் அணிகள் நேற்று பஞ்சாப்பில் உள்ள புதிய சண்டிகரில் மோதி,. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பீல்டிங் தேர்வு செய்தார்.குஜராத் அணி 20 ஓவரில் 162/2 ரன் மட்டும் எடுத்தது. பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

Mar 31, 2026

8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தனது முதல் லீக் போட்டியில் ,ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

வருடம் தோறும்  நடக்கும் கிரிக்கெட்  லீக் தொடர்,.நேற்று அசாமின் கவுகாத்தியில் உள்ள  பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில்,சென்னை அணி  , ராஜஸ்தான் அணி மோதின.'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், பீல்டிங் தேர்வு செய்தார்.சென்னை அணி 19.4 ஓவரில் 127 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.ராஜஸ் தான் அணி 12.1 ஓவரில் 128/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Mar 30, 2026

கிரிக்கெட் லீக்போட்டியில் மும்பை, கொல்கட்டா அணிகள் மோதின.

கிரிக்கெட் லீக் தொடருக்கான லீக் போட்டியில் மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை, கொல்கட்டா அணிகள் மோதின. மும்பை 'லெவன்' அணியில் ஆப்கானிஸ்தான் 'ஆப்-ஸ்பின்னர்' கசன்பர், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஷெர்பேன் ரூதர் போர்டு அறிமுகமாகினர். கொல்கட்டா 'லெவன்' அணியில், வெளிநாட்டு வீரர்களான கிரீன், ஆலன், நரைன், முசரா பானி இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.கொல்கட்டா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்தது. மும்பை அணி 11 ஓவரில், 135/0 ரன் எடுத்திருந்தது.

Mar 30, 2026

இன்று சென்னை அணி தனது முதல் லீக் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.

பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில், அசாமின் கவுகாத்தியில் இன்று நடக்கஉள்ள லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் மோதுகின்றன. கடந்த முறை ராஜஸ்தானுக்காக பங்கேற்ற சஞ்சு சாம்சன், இம் முறை சென்னை அணிக்காக களமிறங்குகிறார். இதே போல சென்னை அணிக்காக விளையாடிய ரவிந்திர . ஜடேஜா, தற்போது ராஜஸ்தானுக்காக களம் காண்கிறார். இருவரும் அணி மாறிய நிலையில், நேருக்கு நேர் மோதலை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

Mar 28, 2026

( ஐ. பி. எல் ) இந்தியன் பிரிமியர் லீக் 'டி - 20' தொடர் இன்று ஆரம்பம்.

பெங்களூரு, சின்ன சாமி மைதானத்தில் இந்தியன்பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடரின் 19வது சீசன் இன்றுதுவங்குகிறது. மே 31ல் பைனல் நடக்கஉள்ளது.சென்னை, கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இன்று முதல் லீக்போட்டியில் பெங்களூரு அணி, ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.இம்முறை லீக் சுற்றில்ஐ.பி.எல்., தொடரில் 70 போட்டிகள் ,அடுத்து 'பிளே ஆப்' சுற்றில் 4 என மொத்தம் 65 நாளில், 74 போட்டிகள் நடக்க உள்ளன.சென்னையில் சேப்பாக்கம், மும்பை வான்கடே, கொல்கட்டா ஈடன் கார்டன் உட்பட 13 மைதானங்களில் போட்டிகள் நடக்கும்.ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் 'ஏ', 'பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், மற்ற அணிகளுடன் தலா 1 முறை (4 போட்டி) மோதும். அடுத்த பிரிவில் உள்ள 5 அணிகளுடன் தலா இருமுறை மோதும் (10 போட்டி). ஒவ்வொரு அணியும் தலா 14 போட் டியில் பங்கேற்கும்.புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் தகுதிச்சுற்று 1ல் மோதும். வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும். 3, 4 வது இடம் பிடிக்கும் அணி கள் 'எலிமினேட்டர்' 'போட்டியில் மோதும். வெல்லும் அணி தகுதிச் சுற்று 2க்கு முன்னேறும்.தோற்கும் அணி வெளியேறும்.தகுதிச்சுற்று 1ல் தோற்ற, 'எலிமினேட்டர்' போட்டியில் வென்ற அணிகள் தகுதிச்சுற்று 2ல் மோதும். வெல்லும் அணி பைனலுக்கு செல்லும். தோற்கும் அணிக்கு 3வது இடம் கிடைக்கும்.தகுதிச்சுற்று 1, 2ல் வென்ற அணிகள் மே 31 ல், நடக்கவுள்ள பைனலில்  மோதும்.

Mar 28, 2026

ஐ.பி.எல்., தொடரின் 19 சீசனில், முதன் முறையாக 10 அணிகளுக்கும் இந்திய வீரர்கள் கேப்டனாக களமிறங்குகின்றனர்.

ஐ.பி.எல்., தொடரின் 19 சீசனில், முதன் முறையாக 10 அணிகளுக்கும் இந்திய வீரர்கள் கேப்டனாக களமிறங்குகின்றனர். போட்டி மதியம் 3:30 மணிக்கு துவங்கும். மற்றவை இரவு 7:30 மணிக்கு துவங்கும்.'பிளே-ஆப்' சுற்றுக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.ஐ.பி.எல்., தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 46.5 கோடி. பைனலில் சாதித்து, கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 20 கோடி கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 13 கோடி வழங்கப்படும்.ஐ.பி.எல் .,தொடரில் 2025ல் முதன் முறையாக சாம்பியன் ஆனது பெங்களூரு அணி. இதற்கான கொண்டாட்டத்தில் 11 பேர் (ஜூன் 4, 2025) பலியாகினர். சம்பவம் நடந்து 10 மாதம் ஆன நிலையில், முதல் போட்டி இன்று பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடக்கிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், துவக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இம்முறை மைதானத்தை சுற்றிலும் பல் வேறு பாதுகாப்பு பணிகள் நடந்துள்ளன. ரசிகர் கள் உள்ளே வர, வெளியேற தற்காலிகபாதைஅமைக்கப்பட்டுள்ளன.

Mar 27, 2026

இந்தியா ஆசிய வில்வித்தையில் காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் ,பைனலுக்கு முன்னேறியது.

ஆசிய வில்வித்தை 'ஸ்டேஜ் 1' தொடர் தாய்லாந்தின்பாங்காக் நகரில் ,காம்பவுண்டு பிரிவில் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் தகுதிச்சுற்றில் 'நம்பர் -1' இடம் பெற்ற இந்திய ரஜத் சவுகான் சிகிதா ஜோடி, நேரடியாக காலிறுதியில் பங்கேற்றது.இதில் 159-155 என்ற கணக்கில் சீன தைபே அணியை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின. இந்திய ஜோடி 157-153 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்து, இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது.பெண்களுக்கான ரிகர்வ் பிரிவு கலப்பு அணி கள் போட்டிக்கான தகு திச்சுற்றில் இந்தியாவின் தேவாங்,ருமா ஜோடி முதலிடம் பிடித்தது.நேரடியாக காலிறு தியில் களமிறங்கியது. இதில், தரவரிசையில் 9வது இடம் பிடித்த வியட் நாம் ஜோடியிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Mar 27, 2026

டேவிட் பெக்காம்.ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப், 'எலைட்' பிரிவில் பைனலுக்கு முன்னேறினார்.

பிலிப்பைன்சில் ஆசிய சைக்கிளிங் டிராக் சாம் பியன்ஷிப் பிலிப்பைன்சில் ,ஆண்களுக்கான எலைட்கெய்ரின் பிரிவில் போட்டி நடந்தது. இதன் இரண்டாவது அரையிறுதியில் இந்தியவீரர் டேவிட் பெக்காம் பங்கேற்றார். துவக்கத்தில் கால்பந்தில், சைக்கிளிங்கில் சாதித்து வரும் டேவிட் பெக்காம், 10.014 வினாடியில் வந்து  இரண்டாவது இடம் பிடித்தார்.சீனாவின் ஜிவெய் ( 9.866),ஜியி  ஹானுக்கு (9.869) அடுத்து, டேவிட் பெக்காம் மூன்றாவது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். 

Mar 27, 2026

இந்தியாவில்  பங்கேற்கும் இந்திய அணி 5 டெஸ்ட், 9 ஒருநாள், 'டி-20' போட்டிக் கான அட்டவணை வெளியானது.

 வரும் செப்டம்பர் முதல், 2027, மார்ச் 3 வரை இந்தியாவில் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில்,  இந்தியா பங்கேற்கும் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியானது. இந்தியஅணி பங்கேற்கும் 9 ஒருநாள் போட்டியிலும் டெஸ்ட், 'டி-20'ல் இருந்து ஓய்வுபெற்ற 'சீனியர்' வீரர்கள் ரோகித்-கோலி களமிறங்குகின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 136 137

AD's



More News