25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Aug 23, 2025

ஆண்களுக்கான ஏ.டி. பி., டென்னிஸ் தொடர்.

ஆண்களுக்கான ஏ.டி. பி., டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து கொண்ட இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, இந்தியாவின் போபண்ணா, மொனாக்கோவின் ரொமைன் அர்னியடோ ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட் 'டை பிரேக்கர்' வரை நீண்டது. 'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 7-6 என வென்றது. அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 22 நிமிடம் நடந்த போட்டி முடிவில் பாம்ப்ரி ஜோடி 7-6, 6-3 என நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. 

Aug 23, 2025

இந்திய பெண்கள் 'ஏ' அணி கிரிக்கெட்

இந்திய பெண்கள் 'ஏ' அணி, ஆஸ்திரேலியா சென்று, ஆஸ்திரே லியா 'ஏ' அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் கொண்ட டெஸ்டில் பங்கேற்கிறது. பிரிஸ்பேனில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இந்திய பெண்கள் 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 93/5 ரன் எடுத்திருந்தது. ராகவி (26), கேப்டன் ராதா (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 299 ரன்னில் ஆல் அவுட்டானது.  ஆஸ்திரேலிய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 158/5 ரன் எடுத்து, 141 ரன் பின்தங்கி இருந்தது. 

Aug 23, 2025

17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம் பியன்ஷிப் 7வது சீசன் இந்தியா வெற்றி

17 வயதுக்குட்பட்டபெண்களுக்கானதெற்காசியகால்பந்துசாம்பியன்ஷிப் 7வதுசீசன்பூடானில்,இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, கோப்பை வெல்லும்.முதல் போட்டியில் நேபாளத்தை வென்ற இந்தியா, நேற்று வங்கதேசத்தை சந்தித்தது. முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில்இந்திய அணி 2-0 என, இத்தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது. நாளை மூன்றாவது போட்டியில் இந்திய அணி, பூடானை சந்திக்க உள்ளது. தெற்காசிய கால்பந்து தொடரில் இந்திய பெண்கள் அணி (17 வயது), தற்போது 6 ஆண்டுக்குப் பின் நேற்று, மீண்டும் வென்றது. 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

Aug 23, 2025

சென்னையில், மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன்

மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன் சென்னையில் ,சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ,ஜப்பானின் டோக்கியோவில் நடக்க உள்ள உலக தடக சாம்பியன்ஷிப்பில் ( செப்டம்பர் 13-21) பங்கேற்க தகுதி பெறலாம். நேற்று சென்னையில் பெய்த மழை காரணமாக போட்டிகள் பாதிக்கப்பட்டன. பெண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் பவித்ரா, ஏஞ்சல், அபிநயா, தனலட்சுமி இடம் பெற்ற அணி 44.73 வினாடி நேரத்தில் வந்து தங்கம் கைப்பற்றியது. கர்நாடகா (45.34), கேரளா (46.54) வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றன.ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் மகாராஷ்டிராவின் தேஜாஸ் ஷிர்சே (13.60 வினாடி) தங்கம், தமிழகத்தின் மானவ் (14.03) வெள்ளி வென்றனர். பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் நந்தினி (13.45) வெள்ளி கைப்பற்றினார்.பெண்களுக்கான 20 கி.மீ., நடை பந்தயத்தில் தமிழகத்தின் மோகவி முத்துரத்தினா (ஒரு மணி நேரம், 41 நிமிடம், 34.72 வினாடி) மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.இதுவரை தமிழகம் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றது.

Aug 23, 2025

ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில்.

 ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில்,  பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் இளவேனில் (630.7 புள்ளி), மெஹுலி கோஷ் (630.3) முறையே 7, 8வது இடம் பிடித்து பைனலுக்கு முன் னேறினர். பைனலில் தமிழகத்தின் இளவேனில், 253.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இது, ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் இளவேனில் கைப்பற்றிய 4வது தங்கம், 9வது பதக்கம். இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளார். இம்முறை சீனியர் பிரிவில்  இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கம் இது. ஏற்கனவே இந்திய வீரர் அனந்த் ஜீத் சிங் நருகா ('ஸ்கீட்') > தங்கம் வென்றிருந்தார்.பெண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் இளவேனில், மெஹுலி, அனன்யா அடங்கிய இந்திய அணி, 1891.3 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றியது.10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் ஜூனியர் பெண்களுக்கான ,ஷம்பவி (633.7), ஹ்ருத்ய ஸ்ரீ (632.1), இஷா அனில் (630.4) அடங்கிய இந்திய அணி, 1896.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றது.

Aug 22, 2025

துப்பாக்கிசுடுதல் இந்தியாவின் அபினவ் ஷா, 250.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், ஜூனி யர் ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பைனலில் இந்தியாவின் அபினவ் ஷா, 250.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.இதன் அணிகள் பிரிவில் அபினவ் ஷா (628.1), ஹிமான்ஷு (630.9), நரேன் பிரனவ் (631.1) அடங்கிய இந்திய அணி 1890.1 உலக புள்ளிகளுடன் தங்கம் வென்று  சாதனை.  

Aug 22, 2025

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையரில்,  இத்தாலி ஜோடிக்கு கோப்பையுடன், ரூ. 8.72 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

. யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் ,கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் போலந்தின் இகாஸ்வியா டெக், நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, 'நடப்பு சாம்பியன்' இத்தாலியின் சாரா இரானி, ஆன்ட்ரியா வவாசோரி ஜோடியை சந்தித்தது.இத்தாலி ஜோடி முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றியது. ஸ்வியா டெக், காஸ்பர் ரூட் ஜோடி, 2வது செட்டை 7-5 என தன் வசப்படுத்தியது.வெற்றியாளரை நிர்ணயிக்கும் சூப்பர் டை பிரேக்கரில்' இத்தாலி ஜோடி 10-6 என வென்றது.  ஒரு மணி நேரம்,32 நிமிடம் நீடித்த போட்டியில் சாரா இரானி, ஆன்ட்ரியா வவாசோரி ஜோடி 6-3, 5-7, 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது..இந்த ஜோடி கைப்பற்றிய 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றிருந்தது. இத்தாலி ஜோடிக்கு கோப்பையுடன், ரூ. 8.72 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 

Aug 22, 2025

தமிழகத்தின் விஷால் சீனியர்' தடகள சாம்பியன்ஷிப்பில் தேசிய சாதனை.

மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 64 வது சீசன் சென்னையில், நேற்று ஆண்களுக்கான 400மீ., ஓட்டம் பைனல் நடந்தது. தமிழகத்தின் விஷால் தென்னரசு 45.12  வினாடி நேரத்தில் கடந்து, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதற்கு முன் 2019ல் முகமது அனாஸ், 45.21 வினாடியில் கடந்து இருந்தார். தமிழகத்தின் மற்றொரு வீரர் ராஜேஷ் ரமேஷ் (46.04), ஹரியானாவின் விக்ராந்த் (46.17), வெள்ளி, வெண்கலம் வென்றனர்.   

Aug 22, 2025

டாப்ஸ்யா உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் .

20 வயதுக்குட்பட்டோருக்கானஉலகமல்யுத்தசாம்பியன்ஷிப்பல்கேரியாவில்பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன.இதன் அரையிறுதியில் இந்தியாவின் டாப்ஸ்யா, நடப்பு சாம்பியன், ஜப்பானின் சொவாகா உசிடாவை 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.அடுத்து நடந்த பைனலில் டாப்ஸ்யா, நார்வேயின் பெலிசிடாஸ் டொமாஜெவா மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டாப்ஸ்யா, 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார் .உலக சாம்பியன்ஷிப்பில் 57 கிலோ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார். பெண்களுக்கான 68 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீஷ்டி, ஜப்பானின் ஹோஷினோ மோதினர். இதில் ஸ்ரீஷ்டி 0-7 என தோல்வியடைய, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 

Aug 22, 2025

சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர்

 சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவில் ,இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா என இருவர் உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்ற மூன்றாவது சுற்று போட்டி நடந்தன.குகேஷ், அமெரிக்காவின் சாம் செவியனை சந்தித்தார். குகேஷ். துவக்கத்தில் இருந்து இருவரும் சம பலத்தில் விளையாட, 44வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை சந்தித்தார். பிரக்ஞானந்தா, 46 வதுநகர்த்தலில் 'டிரா' செய்தார்.மூன்றுசுற்றுமுடிவில்அமெரிக்காவின்பேபியானோ, ஆரோனியன், பிரக்ஞாந்தாதலா 2.0புள்ளியுடன் 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.  குகேஷ் (1.5) 8வது இடத்தில் தொடர்கிறார். 

1 2 ... 78 79 80 81 82 83 84 ... 136 137

AD's



More News