25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Aug 30, 2025

டைமண்ட் லீக் ஈட்டி ஏறிதல் போட்டியில் 2வது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.

 டைமண்ட் லீக் போட்டி உலக தடகள கூட்டமைப்பு சார்பில் ,16வது சீசன் பைனல், சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் நடந்தது. ஈட்டி ஏறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா உட்பட, 7 பேர் பங்கேற்றனர். டோக்கியோ (2021, தங்கம்), பாரிஸ் (2024, வெள்ளி) என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மீது எதிர்பார்ப்பு இருந்தது. முதல் இரு வாய்ப்பில் 84.35, 82.00 மீ., துாரம் மட்டும் எறிந்த இவர், அடுத்த 3 வாய்ப்புகளில் பவுல் செய்தார். கடைசி, 6வது வாய்ப்பில் அதிகபட்சம் 85.01 மீ., துாரம் மட்டும் எறிந்து, இரண்டாவது இடம் பிடித்தார். டைமண்ட் லீக் போட்டி உலக தடகள கூட்டமைப்பு சார்பில் ,16வது சீசன் பைனல், சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் நடந்தது. ஈட்டி ஏறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா உட்பட, 7 பேர் பங்கேற்றனர். டோக்கியோ (2021, தங்கம்), பாரிஸ் (2024, வெள்ளி) என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மீது எதிர்பார்ப்பு இருந்தது. முதல் இரு வாய்ப்பில் 84.35, 82.00 மீ., துாரம் மட்டும் எறிந்த இவர், அடுத்த 3 வாய்ப்புகளில் பவுல் செய்தார். கடைசி, 6வது வாய்ப்பில் அதிகபட்சம் 85.01 மீ., துாரம் மட்டும் எறிந்து, இரண்டாவது இடம் பிடித்தார். 

Aug 30, 2025

இந்தியா ஆசிய துப்பாக்கி சுடுதலில் 31 பதக்கங்கள் வென்றது. ஒட்டுமொத்தமாக (சீனியர், ஜூனியர், யூத்) போட்டியில் 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என, 103 பதக்கம் வென்றது இந்தியா.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன்  கஜகஸ்தானில், ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., 'சென்டர் பயர் பிஸ்டல்' பிரிவில் ராஜ்கன்வர் சிங் சாந்து (583.22 புள்ளி),குர்பிரீத் சிங் (579.17), அங்குர் கோயல் (571.18) அடங்கிய இந்திய அணி, 1733.57 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றது. இதன் தனிநபர் பிரிவில் ராஜ்கன்வர் சிங் சாந்து தங்கம் வென்றார். இந்தியாவின் அங்கூர் மிட்டல் ஆண்களுக்கான 'டபுள் டிராப்' பிரிவில் தங்கம் வென்றார். அனுஷ்கா (93 புள்ளி), பிரனில் (89), ஹபிஸ் (87) அடங்கிய இந்திய அணி  பெண்கள் அணிகளுக்கான டிராப்' பிரிவில் தங்கத்தை கைப்பற்றியது. தனிநபர் பிரிவில் 'டாப்-3' இடம் பிடித்த இவர்கள் பதக்கம் வென்றனர்.50 மீ., 'ரைபிள் 'புரோன்' பெண்களுக்கான தனி நபர் பிரிவில் இந்தியாவின் மணினி கவுசிக், 617.8 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். இதன் அணிகள் பிரிவில் மணினி கவுசிக் (617.8), சுரபி பரத்வாஜ் ரபோல் (614.4), வினோத் விதர்சா (613.8) அடங் கிய இந்திய அணி, 1846.0 புள்ளிகளுடன் வெள்ளிப்ப தக்கத்தை கைப்பற்றியது. சீனியர் பிரிவில் 14 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என, 31 பதக்கம் வென்ற இந்தியா 2வது இடம் பிடித்தது. ஒட்டுமொத்தமாக (சீனியர், ஜூனியர், யூத்) 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என, 103 பதக்கம் வென்றது இந்தியா. 

Aug 30, 2025

'ஹாக்கி மந்திரவாதி' என போற்றப்பட் ஹாக்கி தயான் சந்த் சாதனைக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க ஹாக்கி நட்சத்திரங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை.

.இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த். 1905, ஆக. 29ல் உ.பி.,யில் பிறந்தார். சிறந்த முன்கள வீரரான இவர், தனது மந்திர ஆட்டத்தால் 1928, 1932, 1936ல் இந்திய அணி தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல கைகொடுத்தார். ஹாக்கி வரலாற்றில் அதிக கோல் (570, 185 போட்டியில்) அடித்து சாதனை படைத்தார். 'ஹாக்கி மந்திரவாதி' என போற்றப்பட்ட இவர்,  74வது வயதில் (1979, டிச.3) காலமானார்.இவரது பெயரில் இந்திய விளையாட்டின் உயர்ந்த 'தயான் சந்த் கேல் ரத்னா விருது’ வழங்கப்படுகிறது. பிறந்த நாளான ஆக. 29, தேசிய விளையாட்டு தினமாக கடை பிடிக்கப்படு கிறது. இவருக்கு 1956ல் 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது."ஒலிம்பிக் கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் ஹாக்கியில் தான் கிடைத்தது. இதற்கு தயான் சந்த் முக்கிய காரணம் .இந்திய விளையாட்டுக்கு இவர் செய்த சேவைக்கு அங்கீகாரமாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டு மென அனைத்து ஹாக்கி நட்சத்திரங்கள் சார்பில் அரசை கேட்டுக் கொள்கிறேன்,"என்றார் அரங் திலிப் டிர்கே.

Aug 29, 2025

கிராண்ட் செஸ்டூர் பைனலுக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா, முன்னேறினார்.

கிராண்ட் செஸ் டூர் 10வது சீசனில் ஒரு பகு தியான சின்க்யுபீல்டு கோப்பை தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிசில், இதன் 9வது சுற்றில் இந்தியாவின் பிரக் ஞானந்தா அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 32வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. பிரக்ஞானந்தா (1.0 புள்ளி) 2வது இடத்தையும், குகேஷ் (4.0) 8வது இடத்தையும் கைப்பற்றினார்.செஸ் டூர் பைனலுக்கு கிராண்ட் (செப். 26-அக்.4  இடம் : சாவ் பாலோ, பிரேசில்) தமிழகத்தின் பிரக்ஞானந்தா தகுதி பெற்றார்.

Aug 29, 2025

ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி:

ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் பீஹாரின் ராஜ்கிர் நகரில், இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. 'சூப்பர்-4' சுற்றுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், முன்னேறும். இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாடும். முடிவில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள், வரும் செப். 7ல் நடக்கவுள்ள பைனலில் மோதும்.இதில் வெற்றி பெறும் அணி, அடுத்த ஆண்டு பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பைக்கு (ஆக. 14-30) நேரடியாக தகுதி பெறும். இந்திய அணி, தொடரை வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Aug 29, 2025

குர்பிரீத் சிங் ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், ஆண்களுக்கான தனிநபர் 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தி யாவின் குர்பிரீத் 572.18 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் அமன்பிரீத் சிங் (572.11 புள்ளி) வெள்ளிப்பதக்கத்தைவென்றார்.ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில் குர்பிரீத் சிங் (572.18), அமன்பிரீத் சிங் (572.11), ஹர்ஷ்  குப்தா (565.13) அடங்கிய இந்திய அணி, 1709.42 புள்ளிகளுடன் முதலிடம்  பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றது.தனிநபர் 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' ஆண்கள் அணிகளுக்கான பிரிவில் இந்தியாவின் சூரஜ் சர்மா (571.12 புள்ளி), தனிஷ்க் நாயுடு (568.11) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். சூரஜ் சர்மா (571.12 புள்ளி), தனிஷ்க் நாயுடு (568.11), முகேஷ் (564.16) அடங்கிய இந்திய அணி, 1703.39 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றியது.50 மீ., 'ரைபிள் புரோன்' ஜூனியர் ஆண்கள்அணிகளுக்கான பிரிவில் சமி உல்லா கான் (617.0), அட்ரியன் கர் மாகர் (614.5),குஷாக்ரா சிங் ரஜாவத் (612.8) அடங்கிய இந்திய அணி, 1844.3 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றது.இந்தியாவுக்கு இதுவரைஇத்தொடரில் 44 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் என, 82 பதக்கம் கிடைத்துள்ளது. 

Aug 29, 2025

வேலவன் செந்தில்குமார்,அனா ஹத்சிங்,  தேசிய ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றனர்.

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப் 81வது சீசன் டில்லியில், ஆண்களுக்கான பைனலில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், அபய் சிங் மோதினர். வேலவன் 3-1 (11-8, 11-9, 4-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2023, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய அபய் சிங், 2வது இடம் பிடித்தார்.டில்லியின் அனாஹத் சிங், கோவாவின் அகன்ஷா சலுங்கே பெண்களுக்கான பைனலில், மோதினர். அனாஹத் 3-0 (11-7, 11-6, 11-4) என வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக (2023-25) கோப்பை வென்றார்

Aug 28, 2025

அஜித் நாராயணா புதிய காமன் வெல்த் சாதனையுடன் ,பளுதுாக்குதலில் தங்கம் வென்றார். இந்தியாவின் நிருபமா தேவி செரம்,பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி வென்றார்.

காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் குஜராத்  மாநிலம் ஆமதாபாத்தில், ஆண்களுக்கான 71கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அஜித் நாராயணா 26, (தமிழகம்) பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 145, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 172 என, மொத்தம் 317 கிலோ பளுதுாக்கிய அஜித், புதிய காமன் வெல்த் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார். நைஜீரியாவின் ஜோசப்எடிடியாங் உமோ பியா (316 கிலோ) வெள்ளி வென்றார். இந்தியாவின் நிருபமா தேவி செரம்,பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற 'ஸ்னாட்ச்' பிரிவில் 91, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 126 என, மொத்தம் 217 கிலோ பளுதுாக்கி 2வது இடம் பிடித்து, வெள்ளி வென்றார்.இந்தியாவின் ஹேமந்தா டோய்மாரி ஜூனியர் ஆண்களுக்கான 71 கிலோ எடைப் பிரிவில் (264 கிலோ, 'ஸ்னாட்ச்' 118, 'கிளீன் அண்டு ஜெர்க்' 146) தங்கம் வென்றார்.

Aug 28, 2025

இந்திய பெண்கள் தெற்காசிய ஜூனியர் கால்பந்தில் நான்காவது வெற்றி!

17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பூடானில்,  7வது சீசன் ,இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள்பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும்.முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, கோப்பை வெல்லும்.முதல் 3 போட்டியில் நேபாளம், வங்கதேசம், பூடானை வென்றது இந்தியா. நேற்று இரண்டாவது கட்ட போட்டி, இந்திய அணி, மீண்டும் பூடானை எதிர் கொண்டது. முடிவில் இந்திய அணி 5-0 என தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்தியா 12 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது .

Aug 28, 2025

அனிஷ் பன்வாலா ஆசிய துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் .

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பி யன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், , 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் ,ஆண்களுக்கான தனிநபர் 25 மீ இந்தியாவின் ஆதர்ஷ் சிங் (585.20 புள்ளி), அனிஷ் பன்வாலா (583.21) முறையே 2, 4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். பைனலில் அனிஷ் 35 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.  மற்றொரு இந்திய வீரர் ஆதர்ஷ், 15 புள்ளிகளுடன் 5வது இடத்தை கைப்பற்றினார். சீனாவின் சு லியான்போபான் (36 புள்ளி) தங்கம் வென்றார். இது வரை 9 தங்கம் உட்பட 23 பதக்கம் சீனியர் பிரிவில் வென்ற இந்தியா, 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (15 தங்கம், 27 பதக்கம்) .

1 2 ... 76 77 78 79 80 81 82 ... 136 137

AD's



More News