25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Aug 19, 2025

டைமண்ட் லீக் தொடர் பைனலுக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.

டைமண்ட் லீக் போட்டி உலக தடகள கூட்டமைப்பு சார்பில் ,16வது சீசன் தற்போது நடக்கிறது. உலகின் 12 இடங்களில் 2025ல் இதுவரைபோட்டிகள் நடந்தன.  ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக  செயல்பட்ட 'டாப்-6' நட்சத்திரங்கள், டைமண்ட் லீக் பைனலில், பங்கேற்க தகுதி பெறலாம். எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2025ல் இரு தொடரில் மட்டும் பங்கேற்றார். கத்தாரில் முதன் முதலாக 90 மீ., துாரத்துக்கும் (90.23 மீ.,) மேல் எறிந்து இரண்டாவது இடம் (7 புள்ளி) பிடித்தார். பாரிசில் 88.16 மீ.,துாரம் எறிந்து, முதலிடம் (8 புள்ளி) பிடித்தார். இரு தொடரில் மொத்தம் 15 புள்ளி பெற்ற நீரஜ் சோப்ரா, தற்போது பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.

Aug 19, 2025

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ,இந்தியா  “தங்கம்”, 'வெள்ளி'

 கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ,  ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் அன்மோல் ஜெயின் (580 புள்ளி), ஆதித்யா மல்ரா (579), சவுரப் சவுத்தரி (576) அடங்கிய இந்திய அணி, 1735 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் ஜூனியர் ஆண்கள் தனிநபர்  ,இந்தியாவின் ஜோனாதன் கவின் அந்தோணி (582.20 புள்ளி), முகேஷ் (582.18), கபில் (579.15) முறையே 2,3,4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர் அடுத்த நடந்த பைனலில் கபில், 243.0 புள்ளிகளுடன் தங்கத்தை வென்றார். 

Aug 19, 2025

யூத் கன்டெண்டர் சர்வதேச டேபிள் டென்னிசில் இந்திய 'சாம்பியன்கள் ' .

சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில் ' யூத்' கன்டெண்டர் தொடர், ஜோர்டானில் இந்தியாவின்  அனன்யா, அன்கோலிகா  15 வயது பெண்களுக்கான பைனலில் மோதினர். இதில் அனன்யா 3-0 என (11-8, 11-1, 11-3) நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இந்தியாவின் ஹர்குன்வர் சிங், குஷால் ஆண்களுக்கான (19 வயது) பைனலில் ஹர்குன்வர் சிங் 3-1 என்ற செட் கணக்கில் (8-11, 11-8, 11-6, 11-4) வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.இந்தியாவின் வைஷ்ணவி, திவ்யான்ஷி 17 வயது பெண்களுக்கான பைனலில் மோதினர். இதில் திவ்யான்ஷி, 3-0 என (11-5, 11-3, 11-4) வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.இந்தியாவின் திவ்யான்ஷி, அதர்வா ஜோடி  15 வயது கலப்பு இரட்டையரில் 3-0 என ஈரானின் நிஹால், அல் தஹேர் ஜோடியை வென்று சாம்பியன் ஆனது.திவ்யான்ஷி, 2-3 என ஈரானின் செடயேசிடம் தோற்று, 19 வயது பிரிவு பைனலில் இரண்டாவது இடம் பிடித்தார்.இந்தியாவின் சித்தாந்த் (15 வயது), அபிநந்த் (17 வயது), பெண்கள்பிரிவில்அனன்யா(17 வயது), ஷிரியா, வைஷ்ணவி (19 வயது) ஆண்கள் பிரிவில் 3வது இடம் பிடித்தனர்.

Aug 18, 2025

பெகா ஓபன் ஸ்குவாஷ் தொடரில் அனாஹத் சிங் 2வது இடம்

ஆஸ்திரேலியாவில் நடந்த பெகா ஓபன் ஸ்குவாஷ் தொடர் ,பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங் 17, எகிப்தின் ஹபிபா ஹனி மோதினர்.அரையிறுதி போட்டியின் போது கணுக்காலில் காயமடைந்த அனாஹத், முதல் செட்டை 11-9 என வென்றார். அடுத்த இரு செட்களை 5-11, 8-11 என இழந்த அனா ஹத், 4வது செட்டில் 4-10 என பின்தங்கி இருந்த போது காயத்தால் பாதியில் விலகினார்.எகிப்து வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். உலக தரவரிசையில் 53வது இடத்தில் உள்ள அனாஹத், 2வது இடத்துடன் ஆறுதல் அடைந்தார்.

Aug 18, 2025

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 'ஏ' பெண்கள் அணி, கோப்பை வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா சென்ற இந்தியா 'ஏ' பெண்கள் அணி, பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. நேற்று, பிரிஸ்பேனில் 3வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்தியா 'ஏ' அணிக்கு 47.4 ஓவரில் 216 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா 'ஏ' அணி 27.5 ஓவரில் 222/1 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.  இந்தியா 'ஏ' அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

Aug 18, 2025

சர்வதேச பாட்மின்டன் தொடரில் தான்யா ஹேம்நாத் சாம்பியன் .

சர்வதேச பாட்மின்டன் தொடர் வடக்கு மரியானா தீவுகளில் உள்ள சாய்பன் நகரில் நடந்தது. உலக பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் சோதனை முயற்சியாக, 21க்குப் பதில், 15 புள்ளி கொண்ட செட் முறை அறிமுகம் செய்யப்பட்டது.பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் தான்யா ஹேம்நாத், அரையிறுதியில் ஜப்பானின் ரிரினா ஹிராமோட்டோவை வென்றார்.பைனலில் தான்யா 21, மற்றொரு ஜப்பான் வீராங்கனை கனே சகாயை எதிர்கொண்டார். முதல் செட்டை 15-10 கைப்பற்றி ,அடுத்த செட்டையும் 15-8 என எளிதாக கைப்பற்றினார்.  முடிவில் தான்யா 15-10, 15-8  என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பை வென்றார்.  

Aug 18, 2025

ஜெர்மன் சூப்பர் கோப்பை கால்பந்து தொட ரில் பேயர்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

ஜெர்மன் சூப்பர் கோப்பை கால் பந்து 16வது சீசனுக்கான பைனல் ஜெர்மனியின் ஸ்டட் கர்ட் நகரில் நடந்தது. இதில் ஸ்டட்கர்ட், பேயர்ன் முனிக் அணிகள் மோதின.துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பேயர்ன் முனிக் அணிக்கு 18வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். பேயர்ன் முனிக் அணிக்கு 77வது நிமிடத்தில் லுாயிஸ் டியாஸ் ஒரு கோல் அடித்தார். ஸ்டட் கர்ட் அணிக்கு 'ஸ்டாப்  பேஜ்' நேரத்தில் (90+3வது நிமிடம்) ஜேமி லெவெ லிங் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் பேயர்ன் முனிக் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 11வது முறையாக கோப்பை வென்றது. 

Aug 16, 2025

வாழ்வின் பெருமை மிக்க தருணமாக இந்திய ஆண்கள் அணி கேப்டன் பிரதிக் வைகர், பெண்கள் அணியின் நிர்மலாசுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்திய 'கோ கோ' நட்சத்திரங்கள் கருதுகின்றனர்.

 டில்லியில், 'கோ கோ' உலக கோப்பை முதல்சீசன் சமீபத்தில் இந்திய ஆண் கள், பெண்கள் அணியினர் நுாறு சதவீத வெற்றியுடன் உலக கோப்பை வென்று வரலாறு படைத்தனர். இவர்களை கவுரவிக்கும் விதமாக, இன்று டில்லியில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை சந்தித்தனர்.  இந்தியாவில் பிறந்த 'கோ கோ' விளையாட்டு, பள்ளி முதல் கல்லுாரி வரை ஆர்வமாக விளையா டப்படுகிறது. ஆசிய (2026), விளையாட்டு ஒலிம்பிக்கில் (2036) 'கோ  கோ' சேர்க்கப்பட வேண்டுமென மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்மன்சுக்  மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.இந்திய ஆண்கள் அணி கேப்டன் பிரதிக் வைகர் கூறுகையில், "டில்லி செங்கோட்டையில் இன்று நடக்கும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றது வாழ்வின் பெருமைமிக்க தருணமாக கருதுகிறேன். எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது,”என்றார். இந்திய பெண்கள் அணியின் நிர்மலா கூறுகையில் குடியரசு சுதந்திர தின கொண்டாட்டங்களை 'டிவி'யில் தான் பார்த்துள்ளேன். சிறப்பான உணர்வைதந்தது முதல் முறையாக சக வீராங்கனைகளுடன் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டது என்றார்.  

Aug 16, 2025

உலகபாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ் தொடரில் பவினா ஜோடி வெண்கலம் .

உலகபாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில்,. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் பவினா பென் படேல், தங்கப்பதக்கம் கைப்பற்றி இருந்தார். அடுத்து இரட்டையர் பிரிவு போட்டிகள் நடந்தன. கலப்பு இரட்டையரில் இந்தியாவின் பவினா பென், சுபம் வாத்வா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.இதில் இந்திய ஜோடி தென் கொரியாவின் கிம் ஜங் கில், லீ மில் கியு ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 12-10 என போராடி வென்ற இந்திய ஜோடி, (2-11, 3-11, 3-11) .முடிவில் இந்திய ஜோடி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, வெண்கலப் பதக்கம் பெற்றது.பவினா வென்ற இரண்டாவது பதக்கம். 

Aug 16, 2025

அனாஹத் சிங். ஆஸ்திரேலிய ஸ்குவாஷ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார்.

'பெகா' ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் ஆஸ்திரேலியாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங், நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்றார். ஆஸ்திரேலியாவின் கார்டுவெல் சாராவை சந்தித்து ,அனாஹத், சிங்  3-0 (11-3, 11-3, 11-4) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

1 2 ... 80 81 82 83 84 85 86 ... 136 137

AD's



More News