25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Aug 16, 2025

செஸ் கிராண்ட் செஸ் ,நான்காவது தொடரில், குகேஷ், 4 வது இடம் பிடித்தார்.

 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) கிராண்ட் செஸ் தொடரின், ,நான்காவது தொடர் அமெரிக்காவின் மிசவுரியில் நடக்கிறது. முதலில் ரேபிட் முறையில் போட்டி நடந்தன. நேற்று நடந்த 7வது சுற்றில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின், லெய்னியரிடம் தோல்வியடைந்தார்.குகேஷ், 8வது சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லேயுடன் மோதிவிளையாடி45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 9வது, கடைசி சுற்றில் அமெரிக்காவின் பேபியானோவை சந்தித்தார்.இம்முறை குகேஷ், 89 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.ரேபிட் பிரிவில் நடந்த 9 சுற்று முடிவில் 10.0 புள்ளி (4 வெற்றி, 2 'டிரா', 3 தோல்வி) பெற்ற குகேஷ், 4 வது இடம் பிடித்தார். 

Aug 16, 2025

சாலஞ்சர்ஸ் பிரிவு 9வது சுற்றில்சென்னை செஸ் தொடரில் பிரனேஷ், வின்சென்ட் 'சாம்பியன்'

சென்னை செஸ் தொடரில் இந்தியாவின் பிரனேஷ் (சாலஞ் சர்ஸ் பிரிவு), ஜெர்மனியின் வின் சென்ட் கீமர் (மாஸ்டர்ஸ்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.சென்னையில், கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்,மாஸ்டர்ஸ் பிரிவு 9வது சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் ரே ராப்சன் மோதினர். கீமர், 41வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு 9வது சுற்றில் இந்தியாவின் நிஹால் சரின் (வெள்ளை), 55வது நகர்த்தலில் சகவீரர் பிரனவை தோற்கடித்தார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (வெள்ளை), முரளி கார்த்திகேயன் (கருப்பு ) மோதிய மற்றொரு 9வது சுற்றுப் போட்டி 49வது நகர்த்த லில் 'டிரா' ஆனது.இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அமெரிக்காவின அவோன்டர் லியாங் மோதிய போட்டியும் 'டிரா' ஆனது.நெதர்லாந்தின் அனிஷ் கிரி, சக வீரர் ஜோர்டான் வான் பாரீஸ்ட்டை வீழ்த்தினார்.ஒன்பது சுற்றுகளின் முடிவில் 7.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த வின்சென்ட் கீமர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அடுத்த நான்கு இடங்களை அனிஷ் கிரி (5.0 புள்ளி), அர்ஜுன் (5.0), முரளி   கார்த்திகேயன் (5.0), நிஹால் சரின் (4.5) உறுதி செய்தனர்.இந்தியாவின் பிரனேஷ் ,ஹர்ஷ்வர்தன்  சாலஞ்சர்ஸ் பிரிவு 9வது சுற்றில் மோதினர். இதில் பிரனேஷ் 46வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்ற 9வது சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் ஆர்யன் சோப்ரா (எதிர்: ஹரிகா), திப்தயன் கோஷ் (எதிர்: வைஷாலி), இனியன் (எதிர்: அபி மன்யு புரானிக்), அதிபன் (எதிர்: லியோன் மென்டோன்கா) வெற்றி பெற்றனர்.ஒன்பது சுற்றின் முடிவில், 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பிரனேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். 

Aug 16, 2025

ஆனந்த் குமார், உலக விளையாட்டு 'ஸ்கேட்டிங்கில்'வெண்கலம் வென்றார் .

உலகவிளையாட்டு 12வதுசீசன்சீனாவில், இந்தியாசார்பில் 17பேர்(10வீரர்,7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட்பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர். 'இன்லைன் ஸ்பீடு ஸ்கேட்டிங்' ஆண்களுக்கான 1000 மீ., 'ஸ்பிரின்ட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார், ஆர்யன்பால் சிங்குமன் அரையிறுதிக்குள் நுழைந்தனர். இதில் 2வது இடம் பிடித்த ஆனந்தகுமார், பைனலுக்கு முன்னேறினார். ஆர்யன் குமார் 7வது இடம் பிடித்து வெளியேறினார்.அடுத்து நடந்த பைனலில் இலக்கை ஒரு நிமிடம், 22.482 வினாடியில் கடந்த ஆனந்த்குமார் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். உலக விளையாட்டில், ஒரு சீசனில் இந்தியாவுக்கு இம்முறை அதிக பதக்கம் (3) கிடைத்துள்ளது.. உலக விளையாட்டு அரங்கில் இதுவரை இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்துள்ளது.

Aug 16, 2025

. 2000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில்  தேசிய சாதனை  படைத்தார் அங்கிதா தியானி .

ஜெருசலேம்கிராண்ட்ஸ்லாம்தடகளபோட்டிஇஸ்ரேலில், பெண்களுக்கான2000 மீ.,'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில்  பங்கேற்றஇந்தியாவின் அங்கிதா தியானி23,,பந்தய துாரத்தை 6 நிமிடம், 13.92 வினாடியில் கடந்த அன்கிதா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை  வென்று இலக்கை அதி வேகமாக கடந்து புதிய  தேசிய சாதனை படைத்தார்.அன்கிதா தியானி உத்தரகாண்ட்  மாநிலத்தை சேர்ந்தவர். பாரிஸ் ஒலிம்பிக் (2024) 5000 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற இவர், ஆசிய சாம்பியன் ஷிப் (2023, வெண்கலம், 5000 மீ.,),ஆசிய உள்ளரங்கு சாம்பியன்ஷிப் (2024, வெள்ளி 3000 மீ.,), உலக பல்கலை., விளையாட்டில் (2025, வெள்ளி, 3000 மீ., 'ஸ்டீ பிள்சேஸ்') பதக்கம் வென்றுள்ளார். 

Aug 14, 2025

கிராண்ட் பிரிக்ஸ் தடகளபோட்டி.

கிராண்ட் பிரிக்ஸ் தடகளபோட்டி ஹங்கேரியில், ஆண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் ஒலிம்பிக்கில் இரண்டு முறை(2020,2024) தங்கம் வென்ற சுவீடனின் டுப்ளான்டிஸ் 25,பங்கேற்றார். கடந்த ஜூன்மாதம் சொந்தமண்ணில் நடந்த போட்டியில் 6.28 மீ., உயரம் தாவி உலகசாதனை படைத்திருந்தார். நேற்று பைனலில் பங்கேற்ற டுப்ளான்டிஸ், அதி கபட்சமாக 6.29 மீ., உயரம் தாவி,13வதுமுறையாக தனது சொந்த உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்து புதிய உலக சாதனை படைத்தார்..ஆண்களுக்கான 3000மீ., ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் பங்கேற்று,7 நிமிடம்,34.49 வினாடியில் வந்து 5வது இடம் பிடித்து, தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடந்த போட்டியில் இவர், 7 நிமிடம், 38.26 வினாடியில் கடந்து தேசிய சாதனை படைத்துள்ளார்.

Aug 14, 2025

பிரிஸ்பேனில் கிரிக்கெட் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்.

இந்திய பெண்கள் 'ஏ' அணி ஆஸ்திரேலியா சென்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய 'ஏ' அணி தஹ்லியா, பேட்டிங் தேர்வு செய்தார் ஆஸ்திரேலிய ஏ அணி 47.5 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய ஏ அணி 215/7 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. தொடரில் இந்தியா ஏ 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி நாளை பிரிஸ்பேனில் நடக்க உள்ளது. 

Aug 14, 2025

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்.

ஆக. 25-31ல் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பிரான்ஸ் தலைநகர் பாரிசில்,  தொடர் அட்டவணை வெளியானது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென்,முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' சீனாவின் ஷி யூ கியை எதிர் கொள்கிறார்.சர்வதேச அரங்கில் சீன வீரருக்கு எதிராக விளையாடிய 4 போட்டியில், ஒன்றில் மட்டும் லக்சயா வெற்றி பெற்றுள்ளார்.முதல் சுற்றில் பின்லாந்தின் ஜோகிம்மை சந்திக்கும் மற்றொரு இந்திய வீரர் பிரனாய், 2வது சுற்றில் உலகின் 'நம்பர்-2'   டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆண்டர்சனை எதிர்கொள்ள நேரிடும். பெண்கள் ஒற்றையரில் களமிறங்கும் சிந்து,3வது சுற்று வரை எளிதாகமுன்னேறிவிடலாம்.

Aug 14, 2025

தமிழகத்தின் சென்னையை சேர்ந்த ரோகித் கிருஷ்ணா இந்தியாவின் புதிய செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

நேற்று 7 வது சுற்று போட்டி சென்னையில், கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் ,மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன், நெதர்லாந்தின்அனிஷ் கிரி மோதினர். இப்போட்டி 35வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் நிஹால் சரின், அமெரிக்காவின் ராய் ராப்சனை சந்தித்தார். நிஹால், 43 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். தமிழகத்தின் சென்னையை சேர்ந்த ரோகித் கிருஷ்ணா 20 , இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ஆனார்.கடந்த மார்ச் மாதம் சுவீடனில் நடந்த கிராண்ட் மாஸ்டர் தொடரில் 9 சுற்றில் 6.5 புள்ளி எடுத்தார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான முதல் அந்தஸ்தை எட்டினார். அடுத்து துபாய் ஓபன் தொடரில் 9 சுற்றில் 5.5 புள்ளி எடுக்க, இரண்டாவது அந்தஸ்தை அடைந்தார்.கஜகஸ்தானில் அல்மாட்டியில் மண்டல ஓபன் சர்வ தேச செஸ் தொடரில் பங்கேற்ற, ரோகித் கிருஷ்ணா கடைசி சுற்றில் (9 வது) ஆர்மேனியா வின் ஆர்தர் தவ்த் யனை வென்றார்.6.0 புள்ளி எடுத்து 8வது இடம் பிடித்தார். தவிர, 'பிடே' தரவரிசையில் 15.1 புள்ளி பெற்றார். இதையடுத்து சர்வதேச தரவரிசையில் மொத்தம் 2500 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்ட, மூன்றாவது அந்தஸ்தை அடைந்தார்.  தற்போது இந்தியாவின் 89 வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.இந்தியாவின் ஆதித்யா, இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு 9 சுற்றில் 5 வெற்றி, 5 'டிரா' செய்து, 6.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.

Aug 13, 2025

உலகவிளையாட்டில் பெண்களுக்கான உஷூ போட்டியில், நம்ரதா பத்ரா வெள்ளி வென்றார்.

12வது சீசன்உலக விளையாட்டு சீனாவில் ,இந்தியா சார்பில் 17 பேர்(10 வீரர்,7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட்பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.இந்தியாவின் நம்ரதா பத்ரா, பெண்களுக்கான உஷூ போட்டி,'சாண்டா'52 கி.கி., பிரிவில், பைனலுக்கு முன்னேறினார். நேற்று நடந்த பைனலில், நம்ரதா, சீனாவின் மெங்யூ செனை சந்தித்தார். இதில் நம்ரதா 0/2 என தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதையடுத்து உலக விளையாட்டு உஷூ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என சாதனை படைத்தார்.ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி யில், ஆண்களுக்கான அரையிறுதி முதல் 'ஹீட்டில்' இந்தியாவின் ஆர்யன்பால், 34.849 புள்ளியுடன் நான்காவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். 

Aug 13, 2025

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் ஹரிகா-பிரனேஷ், அதிபன் வெற்றி.

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் சென்னையில், சாலஞ்சர்ஸ் பிரிவில் 10 இந்திய நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர்.நேற்று ஆறாவது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் ஹரிகாவைஷாலி மோதினர். ஹரிகா,80வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் அபிமன்யு புரானிக், பிரனேஷை சந்தித்தார். தொடர்ச்சியாக 4 வெற்றி பெற்ற அபிமன்யு, இம்முறை46வது நகர்த்தலில் தோல்வி யடைந்தார். அதிபன்பாஸ்கரன், திப்தயனை வென்றார். 4.5 புள்ளியுடன் பிரனேஷ் முதலிடத்துக்கு முன்னேறினார். அபிமன்யு (4.5 புள்ளி, 4 வெற்றி, 1 தோல்வி, 1 'டிரா') அடுத்து உள்ளார்.  இந்தியாவின் அர்ஜூன், மாஸ்டர்ஸ் பிரிவில், ஜெர்மனியின் வின்சென்ட்டை எதிர் கொண்டார்.

1 2 ... 81 82 83 84 85 86 87 ... 136 137

AD's



More News