யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின்ஜான்லெனார்டு ஸ்டிரப் மோதினர். போட்டியின் போது கழுத்து, வலது தோள்பட்டைபகுதியில் ஏற்பட்ட வலிக்கு முதலுதவி எடுத்துக் கொண்ட ஜோகோவிச் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். கிராண்ட் ஸ்லாம் அரங்கில் 64வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். தவிர இவர், ஒரு சீசனின் 4 கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் காலிறுதிக்கு முன்னேறிய மூத்த வீரரானார்.உலகின் 'நம்பர்-1' பெலா ரசின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சா பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் மோதினர்.இதில் 6-1, 6-4 சபலென்கா என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-1, 6-2 என, சகவீராங்கனை ஆன்லியை மற்ற 4வது சுற்று போட்டிகளில் வீழ்த்தினார். செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 1–6, 7–6, 6-3 என, அமெரிக்காவின் டெய்லர்டவுன்சென்ட்டை தோற்கடித்தார்.
ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் பீஹாரின் ராஜ்கிர் நகரில், இந்தியா, தென் கொரியா உள்ளிட்ட 8 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன.'ஏ' பிரிவில் சீனா, ஜப்பானை வீழ்த்திய இந்தியா, ஏற்கனவே 'சூப்பர்-4' சுற்றுக்குள் நுழைந்தது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதி, இந்தியா 15-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ,13வது சீசன் (செப். 30 - நவ.2) நடக்க வுள்ளது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின் றன. 'ரவுண்டு-ராபின்' முறையில் ,ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில்விளையாடும்.முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல்நான்குஇடம்பிடிக்கும்அணிகள்அரையிறுதிக்கு(அக் 29,30) முன்னேறும்.பைனல், நவ.2ல்நடக்கவுள்ளது.இத்தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்தது. இதில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 40 கோடி வழங்கப்படும்.
1977 முதல், சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு. எப்.,) சார்பில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. சமீபத்தில் பாரிசில், 29வது சீசன் நடந்தது.. இந்தியாவில் உலகபாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்30வது சீசனை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டில்லியில், நடக்கவுள்ளது. சமீபத்தில் முடிந்த இத் தொடரின் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வெண்கலம் கைப்பற்றியது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடப்பதால், இந்திய நட்சத்திரங்கள்பதக்கங்கள் வென்றுசாதிக்கலாம்.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் சென் போ யாங், லியு யி ஜோடியை எதிர் கொண்டது ஒரு மணி நேரம், 7 நிமிடம் நீடித்த போட் டியில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 19-21, 21-18, 12-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது. இது, உலக பாட்மின்டன் அரங்கில் சாத்விக், சிராக் ஜோடி கைப்பற்றிய 2வது பதக்கம். ஏற்கனவே 2022ல் வெண்கலம் வென்றிருந்தது.இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் கிடைத்துள்ளது.
. யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், பெண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் போலந்தின் ஸ்வியாடெக், ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயா மோதினர். ஸ்வியாடெக் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் மாக் டலினா பிரீச் மோதினர். இதில் கோகோ காப் 6-3, 6-1 என சுலபமாக வெற்றி பெற்றார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-0, 4-6, 6-3 என ஆஸ்திரே லியாவின் டாரியா கசட் கினாவை வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் பீஹாரின் ராஜ்கிர் நகரில் ,'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. இந்திய அணிக்கு 4வது நிமிடத்தில் மன்தீப் சிங், ஒரு 'பீல்டு' கோல் அடித்தார்.அடுத்த நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்தியா 2-0 என வலுவான முன்னிலை பெற்றது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பி யன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், 'யூத் டிராப்' பிரிவில் இந்திய வீரர் யுகன் 14, பங்கேற்றார். தனிநபர் பிரிவில் 116 புள்ளிகளு டன் தங்கப்பதக்கத்தை வென்றார். ஆண்கள் அணிகள் பிரிவில் யுகன் (116 புள்ளி), அஹ் யான் சையத் அலி (102), மானவ்ராஜ் (90) அடங்கிய இந்திய அணி 308 புள்ளிக ளுடன் தங்கம் வென்றது. கலப்பு அணிகள்பிரிவில் யுகன் (63), தனிஸ்கா (58) ஜோடி, 121 புள்ளி களுடன் தங்கம் கைப்பற்றியது. கோவையை சேர்ந்த யுகன் இதன் மூலம் தங்கம் வென்ற இளம் வீரர் என்ற சாதனைபடைத்தார் .
'நேஷன்ஸ்' கோப்பை தொடர் ,மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் (சி.ஏ.எப்.ஏ.,) சார்பில் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் ,மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு,போட்டிகள் லீக் முறையில் நடக் கின்றன. இரு பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு முன்னேறும்.உலகத் தரவரிசையில் 133 வது இடத்தில் உள்ள இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் 106 இடத்திலுள்ள தஜிகிஸ்தானை முதல் போட்டியின். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக் கில் வெற்றி பெற்றது. கடந்த 17 ஆண்டில் முதன் முறையாக தஜிகிஸ்தானை வென்றது.தனது இரண்டாவது போட்டியில் ஈரானை சந்திக்க உள்ளது.
ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன்நேற்று பீஹாரின் ராஜ்கிர் நகரில் துவங்கியது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.உலகத் தரவரிசையில் 7வது இடத்திலுள்ள இந்திய அணி 'ஏ' பிரிவில், சீனா, ஜப்பான் (ஆக. 31), கஜகஸ்தான் (செப்.1) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் 23வது இடத்திலுள்ள சீனாவை சந்தித்தது. போட்டியின் 47 வது நிமிடம் இந்தியாவுக்கு ''பெனால்டி கார்னர்' கிடைத்தது. இம்முறை ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து உதவினார். இது ஹர்மன்பிரீத் அடித்த 'ஹாட்ரிக்' கோல் ஆனது. முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.