கோதுமை ரவை இட்லி
தேவையான பொருட்கள் - கோதுமை ரவை ஒரு கப், உளுத்தம்பருப்பு கால் கப், உப்பு தேவையான அளவு.
செய்முறை: உளுந்தையும், ரவையையும் தனித்தனியே ஊறவையுங்கள். உளுந்தை நன்கு அரைத்து, வழித்தெடுக்கும் சமயம் கோதுமை ரவையை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்து கரைத்து புளிக்கவைத்து, இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த இட்லி.
0
Leave a Reply