25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சென்னையில், மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சென்னையில், மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன்

மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன் சென்னையில் ,சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ,ஜப்பானின் டோக்கியோவில் நடக்க உள்ள உலக தடக சாம்பியன்ஷிப்பில் ( செப்டம்பர் 13-21) பங்கேற்க தகுதி பெறலாம். நேற்று சென்னையில் பெய்த மழை காரணமாக போட்டிகள் பாதிக்கப்பட்டன. 

பெண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் பவித்ரா, ஏஞ்சல், அபிநயா, தனலட்சுமி இடம் பெற்ற அணி 44.73 வினாடி நேரத்தில் வந்து தங்கம் கைப்பற்றியது. கர்நாடகா (45.34), கேரளா (46.54) வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றன.

ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் மகாராஷ்டிராவின் தேஜாஸ் ஷிர்சே (13.60 வினாடி) தங்கம், தமிழகத்தின் மானவ் (14.03) வெள்ளி வென்றனர். பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் நந்தினி (13.45) வெள்ளி கைப்பற்றினார்.

பெண்களுக்கான 20 கி.மீ., நடை பந்தயத்தில் தமிழகத்தின் மோகவி முத்துரத்தினா (ஒரு மணி நேரம், 41 நிமிடம், 34.72 வினாடி) மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.

இதுவரை தமிழகம் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News