தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி .JULY 2 ND
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி .JULY 2 ND
டி. என் பி.எல்., 'டி-20' தொடரின் 9வது சீசன் தமிழக கிரிக்கெட் சங் கத்தின் சார்பில் நடக்கிறது. தகுதிச்சுற்று 1ல் வெற்றி பெற்ற திருப்பூர் அணி பைனலுக்கு முன்னேறியது.
நேற்று, திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் திண்டுக்கல், திருச்சி அணிகள் மோதின.
திருச்சி அணி, 20 ஓவரில் 140/9 ரன் எடுத்தது, திண்டுக்கல் அணி 16.4 ஓவரில் 143/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நாளை நடக்கும் தகுதிச்சுற்று 2ல் சேப்பாக்கம் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.
கிரிக்கெட் இங்கிலாந்து,இந்திய அணி 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
லீட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. நேற்று, 2வது டெஸ்ட் பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் துவங்கியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 310 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் (114), ஜடேஜா (41) அவுட்டாகாமல் இருந்தனர்.
0
Leave a Reply