25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு போட்டிகள்.JULY 2ND
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள்.JULY 2ND

கால்பந்து 

2026,மார்ச் 1/26ல் ஆஸ்திரேலியாவில்(12 அணிகள்) நடக்கவுள்ளபெண்களுக்கான ஆசிய கோப்பை கால் பந்து தொடரின். நடப்பு சாம்பியன் சீனா, தென்கொரியா,ஜப்பான், ஆஸ்திரேலியா என4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடக்கிறது. 34 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.

தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்-லெஸ்தே அணிகளுடன் இந்திய அணி'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் மங்கோலியா(13,0), திமோர்லெஸ்தே(4,0) அணிகளை வென்ற இந்தியா, நேற்று மூன்றாவது போட்டியில் இராக்கை எதிர்கொண்டது. 

இந்திய அணி 5,0என்ற கோல் கணக்கில் இந்தியாவெற்றி பெற்றது. 3 போட்டியில் 9புள்ளியுடன் முதலிடத்தில் பட்டியலில் உள்ளது. ஜூலை 5ல் நடக்கவுள்ள கடைசி போட்டியில் தாய்லாந்தை(6) வென்றால்,22 ஆண்டுக்குப்பின் ஆசியகோப்பை தொடருக்கு தகுதி பெறலாம்.   

வில்வித்தை, 

 ஆசிய 'பேர் பவ்' வில்வித்தை சாம்பியன் ஷிப்தாய்லாந்தின் பாங்காக்கில் இன்று துவங்கி. ஜூலை6 வரைநடக்கவுள்ளது. இத்தொடரில் ஜப்பான், இந்தியா, மலேசியா, சீனா உட்பட 13 நாடுகளை சேர்ந்த 407 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில்,சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு, சேலம், விநாயகா மிஷன் கல்லூரி மாணவர் சஞ்சய் உட்பட 7 பேர் கலந்து கொள்கின்றனர். 

துப்பாக்கி சுடுதல், 

டேராடூனில் நடந்ததுப்பாக்கி சுடுதல் தேசிய தகுதி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அஞ்சும், சவுரப் சவுத்தரி, மெகுலி கோஷ் ஆகியோர் மீண்டும்  தேர்வாகி இந்தியாவுக்காக விளையாட உள்ள னர்.

 பாட்மின்டன்

 இந்தியாவின் ஸ்ரீகாந்த்  கனடா ஓபன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில்18-21, 21-19, 21-14 என்ற கணக்கில் சகவீரர் பிரியான்ஷு ரஜாவத்தை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News