25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கிரிக்கெட்  -  2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சீசன் துவங்கியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட் - 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சீசன் துவங்கியது.

 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சீசன் துவங்கியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை லீட்சில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணிக்கு சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மா, கோலி, அஷ்வின் என சீனியர்கள் ஓய்வு பெற்றதால், இளம் வீரர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தவிர, முதல் டெஸ்டில் களமிறங்கும் லெவன் அணியில் யார்? இடம் பெறுவர் எனத் தெரியவந்துள்ளது. 

இந்திய அணி வீரர்கள் லண்டனில் இருந்து முதல் டெஸ்ட் நடக்கவுள்ள லீட்சிற்கு ரயிலில் பயணம் செய்தனர். இதுகுறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்டது. ரயில் பயணத்தில் வீரர்கள் தங்களது சிறு வயது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 'ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து, இமாச்சல பிரதேசத்தில் மலைப்ப குதியில் பயணம் செய்துள்ளதாக', துருவ் ஜூரல் தெரிவித்தார்.

தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி 18-ம் தேதி

சேலத்தில், நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவு லிங்' தேர்வு செய்தார்.  மதுரை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது.  நெல்லை அணி 18.5 ஓவரில் 158 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. 

டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவு லிங்' தேர்வு செய்தார்.  மதுரை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது.  நெல்லை அணி 18.5 ஓவரில் 158 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News