25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இன்றைய தினம்

Apr 13, 2023

இராஜபாளையம் டைம்ஸின் 3 ஆம் ஆண்டு இணையதள துவக்கம்

இராஜபாளையம் டைம்ஸ் இணைய தள சேவை   3 ஆம் வருடப் பிறப்பை   15  லட்சம் பார்வையாளர்களுடன்  உங்களுடன் கொண்டாடுகிறது. 23 வருடங்களாக இராஜபாளையம் டைம்ஸ் இராஜபாளையத்தில் வலம் வருகிறது  .rajapalayamtimes.com  (APP) SMARTPHONE ல்  PLAYSTORE  ல் DOWNLOAD  செய்து  வாசிக்கவும். 

Mar 22, 2023

உலக தண்ணீர் தினம்

இயற்கையின் வரப்பிரசாதமான நீரின் முக்கியத்துவம் அறியவே கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ் இயலாது தண்ணீர் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இன்றுவரை காணப்படவில்லை.உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் அகலவில்லை. .தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிரம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் பார்த்து கொள்வதோடு சேமிக்கவும் முடியும். அன்றாடம் செய்யும் சிறுசிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுக்கும். பல் துலக்கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம் இதன்மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது.உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்..உலக நாடுகளில்40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

Mar 22, 2023

தெலுங்கு வருடப்பிறப்பு

உகாதி என்பது இந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தென் மாநிலங்களில் புத்தாண்டின் தொடக்கத்தைக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இது பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வருகிறது. பங்குனி மாதஅமாவாசைக்கு மறுநாளே யுகாதிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.யுகத்தின் ஆரம்பம் இந்த நாளில் தொடங்கியது என்பதால் யுகாதி என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகின்றனஉகாதி அன்று மக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்து, அலங்கரித்து, புதிய ஆடைகளை அணிந்து, உப்பு, இனிப்பு, புளிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு விதமான சுவைகளுடன் செய்யப்படும் பாரம்பரிய உணவான உகாதி பச்சடி போன்ற சிறப்பு உணவுகளைத் தயாரிக்கிறார்கள்.. வேப்பம் பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய், மாவடு போன்றவற்றைச் சேர்த்து இந்தப் பச்சடியைச் செய்கிறார்கள். இதைக் கன்னட மொழியில் 'பேவு பெல்லா என கூறுகிறார்கள்.யுகாதி பண்டிகையின் போது காலையிலையே எழுந்து எண்ணெய் வைத்து குளியல் செய்து புதிய ஆடைகளை அணிந்து இந்த நாளினை கொண்டாடி மகிழ்வார்கள்.வாசலில் மாவிலை தோரணம் கட்டி, வண்ண கோலமிட்டு வீட்டினை அழகுபடுத்துவார்கள்இந்த நாளில் அம்பிகை வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. அதோடு ஒரு சிலர் குலதெய்வ வழிபாடுகளையும் செய்வார்கள் பூஜையில் தெலுங்கு இனத்தவர்கள் பாட்டு பாடி வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.யுகாதி பண்டிகை காலங்களில் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும்.ராஜபாளையம் நகரில் வாழும் தெலுங்கர்கள் எல்லாருமே கொண்டாடி மகிழ்வர் விளையாட்டு போட்டிகள் வைத்து கொண்டாடுவர் .

Mar 17, 2023

 இன்று சென்னை திருப்பதி பத்மாவதி தாயாருக்கு புதிய கோயில்  கும்பாபிஷேகம்

சென்னை தி.நகரின் பரபரப்பான சாலைகளில் ஒன்று ஜி.என்.செட்டி சாலை. இந்த சாலையில்தான் புதிய பத்மாவதி தாயார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த இடம் திரைப்பட நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமான,தனதுஇடத்தைக் அவர் திருப்பதி பெருமாள் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக ,கோயில் கட்டுவதற்காகக் கொடுத்தார்.நிலத்தின் மொத்த அளவு ஆறு கிரவுண்டு. மூன்று கிரவுண்டு நிலத்தில் தாயார் திருக்கோயிலும் மீதமுள்ள இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம், மண்டபம், மடப்பள்ளி ஆகியன கட்டப்பட்டுள்ளன. சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்வேங்கடேசபெருமாள் கோயில் ஒன்று தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது.திருப்பதியில் பத்மாவதி தாயாருக்குத் தனிக் கோயில் இருப்பதைப் போன்று சென்னையிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் பலரும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதற்கான பணிகளை2019 ம் ஆண்டு தேவஸ்தானம் தொடங்கியது. ஆலயம் கட்டி முடிக்க 10 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.கடந்த12- ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.  கும்பாபிஷேகப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இன்றுமார்ச்17- ம் தேதி காலை7.30 மணி முதல்7.44 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு காலை10 மணி முதல்11 மணி வரை சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத்தை ஒட்டி வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் பாதுகாப்பு வசதிகளும் முறையாகச் செய்யப்பட்டுள்ளன.  

Mar 08, 2023

.உலக மகளிர் தினம்

பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.மகளிர் தினம் என்பது பெண்ணுரிமையை நிலைநாட்டுவதும், பாதுகாப்பதுமாகும். பெரும் பணக்காரர்கள், நிலவுடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ஆட்சியாளர்கள் என உயர்தட்டு மக்களுக்காகவே இந்த உலகம் பிறந்ததாக எண்ணிய காலமது!  குறிப்பாக சொல்வதென்றால், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளில் ஆணாதிக்கமானது அளவு கடந்த நிலையில் ஆக்கிரமித்து இருந்தது. மேலும் விடுதலைக்கு முன்னிருந்த இந்தியாவிலும் இதே நிலைதான் நீடித்தது. அடிமைத்தனத்தில் ஆண் - பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஆயினும் பெண்கள் அளவுகடந்த துயரங்களையும் வேதனைகளையும் சந்திக்க நேரிட்டது.  வேலைசெய்யும் ஆண்களுக்கு ஒருநாள் கூலி ஒரு ரூபாய் என்றால் பெண்களுக்கு அதில் பாதிக்கூட கிடையாது. நாலில் ஒரு பங்காக 25காசு மட்டுமே கூலியாகக் கொடுக்கப்பட்டது. அந்தளவிற்கு பெண்ணடிமைத்தனம் பெரும்பாலான நாடுகளில் மேலோங்கி இருந்தது.  அதிலும் பெரும்பாலான நாடுகள் விவசாயத் தொழிலையே முதன்மையாகக் கொண்டிருந்ததால், வயல்களில் பெண்கள் நடவு பணிகளில் ஈடுபடும்போது குனிந்தே வேலை பார்க்க வேண்டும். ஓய்வுக்காக ஒருகணம் நிமிர்ந்தால்கூட முதலாளி வர்க்கத்தினரின் சவுக்கடி பெண்களின் உடல் முழுவதையும் பதம் பார்த்துவிடும். மாதவிடாய் நாட்களிலும் ஓய்வு கிடையாது. பெண்களின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படவேண்டும், அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 1975ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாளை  உலக மகளிர் தினமாக ஐ.நா அங்கீகரித்தது.உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் நாளன்று நாடெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் இக்கொண்டாட்டத்திற்கு  வரவேற்பளித்து வருகின்றன.  

Mar 01, 2023

நமது முதலமைச்சருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .( Birthday Wishes to Sri MK Stalin )

நமது முதலமைச்சருக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல071271 91333என்ற எண்ணில் இப்போதே அழையுங்கள் . 

Feb 22, 2023

இன்று சாலமன் பாப்பையா பிறந்த தினம்

 87 வது பிறந்த தினத்தில்  சாலமன் பாப்பையாப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்  கலைமாமணி, பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள  சாலமன் பாப்பையா ,, 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும் பண்டிகை நாள் பட்டிமன்றங்களின் தலைவனாக விளங்குகிறார்.பெண் கல்வி, மருத்துவம், ஊழல்' உள்ளிட்ட சமூக தலைப்புகளுக்கு பட்டிமன்றங்களை மாற்றி ,பேச்சில், பெண்களுக்கும் சம வாய்ப்பளித்தார். மூன்று தலைமுறை பேச்சாளர் களை வளர்த்துள்ள இவர், 'திருக்குறள், புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி' உள்ளிட்ட இலக்கி யங்களுக்கு, எளிமையாக உரை எழுதியுள்ளார்.சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லுாரியில், பி.ஏ., பொருளாதாரமும், தியாகராஜர் கல்லுாரியில், எம்.ஏ., தமிழும் படித்தார்.கல்லுாரியில் ஆசிரியர் பணியை துவங்கி,  பேராசிரியர். தமிழ்த் துறைத் தலைவராக உயர்ந்தார்.  ஆரம்பத்தில் 1963ல், குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து, 'பெரிய புராணம், சிலப்பதிகாரம், மணிமேகலை' உள்ளிட்ட சமய இலக்கிய பட்டிமன்றங்களில் பங்கேற்றார்.சாலமன் பாப்பையா பட்டிமன்றம் என்றால் தமிழ் ஆர்வலர்களுக்கு அலாதி பிரியம் தான். 

Feb 18, 2023

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி (Maha Shivaratri) இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.நித்திய சிவராத்திரி,மாத சிவராத்திரி,பட்ச சிவராத்திரி,யோக சிவராத்திரி,மகா சிவராத்திரி.ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து ,சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து,நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி  விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக, ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

Feb 16, 2023

ரசிகமணி டி.கே.சி. கல்லாதோருக்கும் கம்பனை அறிமுகம் செய்த தமிழ் ஆர்வலரின்' நினைவு தினம்

 தமிழ் கவிதைகளில் இருந்த கருத்துகளை ரசனையுடன் எடுத்துக் கூறியதால் ரசிகமணி டி.கே.சி.' என்று அழைக்கப்பட் டார். 1926ல் சென்னை மாகாண சட்டசபையில் மேலவை உறுப்பினரானார்.தொடர்ந்து,ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனராக பொறுப்பேற்றார். கம்பராமாயண இடைச்செருகலை நீக்கி பதிப்பித்தார். மேடைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களின் அவசியத்தைக் கூறி ராஜா அண்ணாமலை செட்டியாரை சென்னையில் தமிழ் இசை மன்றம் துவங்க ஏற்பாடு செய்தார்.    FEB 16 ,  1954ல் தன் 71வது வயதில் இதே நாளில் காலமானார்.

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News