25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இன்றைய தினம்

Oct 11, 2024

கல்வி மற்றும் தொழில் பெறுக  சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை

சரஸ்வதி தேவி என்பவள் வெள்ளை தாமரையில் அமர்ந்து சாந்தம் நிறைந்த பார்வையோடு கலைகளின் அம்சமாக திகழக்கூடிய ஒரு தெய்வீக அம்சம் ஆகும். நவராத்திரி என்ற ஒன்பது நாட்கள் கொண்ட விழாக் காலத்தில் 9-வது நாளில் சரஸ்வதி பூஜை செய்யப்படுகிறது. அடுத்த நாள் விஜயதசமி என்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படு கிறது. அந்த நாளில் தான் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் பூஜை செய்கிறார்கள். நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நோட்டுப் புத்தகங்கள், லேப்டாப், செக் புத்தகங்கள், கணக்கு புத்தகங்கள் ஆகிய வற்றையும் பூஜையில் வைத்து வழிபடுவது சம்பிரதாயமாகும்.கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு உரிய நாள் ஆயுத பூஜை என்று சொல்லப்படக்கூடிய சரஸ்வதி பூஜை நாள் ஆகும்.  வீடுகள் மற்றும் அலுவல கங்களில் உள்ள அனைத்து பொருட்கள், இயந்திரங்கள், வாகனங்கள், புத்தகங்கள், கதவுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் சுத்தம் செய்து சந்தனம்,குங்குமம் இட்டு அலங்கரிக்கப்படும். மாவிலை தோரணம் மற்றும் வாழை மரங்கள் கட்டி பூஜைகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.'செய்யும் தொழிலே தெய்வம் என்ற ஆன்மீக பண்பாட்டு மனோபாவ அடிப்படையில் அனைத்து தொழிலை செய்பவர்களும் தம்முடைய தொழில் மற்றும் தொழில் கருவிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளித்து வணங்கக்கூடிய நாளாகவும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாட்கள் அமைகின்றன. 

Oct 02, 2024

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மஹாளய அமாவாசை

மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும்.ஆனால் மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் சிறப்பாக திகழ்கிறது இச்சிறப்பு பெற்ற மகாளய அமாவாசை அக்டோபர் 02 ம் தேதி புதன் கிழமை மகாளய அமாவாசை தினம் வருகிறது.மகாளய அமாவாசை அன்று செய்ய வேண்டியவை-1.பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.2.பிறகு பகல் பொழுதில் முன்னோர்களின் படத்திற்கு முன் இலை பரப்பி அதில் அவர்களுக்கு பிடித்த உணவுகளை பரிமாறி வைத்து வழிபட வேண்டும்.3.மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக யாராவது ஒருவருக்காவது உணவு, உடை போன்ற ஏதாவது ஒன்றை தானமாக வழங்க வேண்டும்.4.நிறைவாக மாலை 6 மணிக்கு பிறகு வீட்டில் உள்ள முன்னோர்களின் படத்திற்கு முன்பு தனியாக ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

Oct 02, 2024

காந்தி ஜெயந்தி 2024

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தின் முக்கிய தலைவரான மகாத்மா காந்தியின் பிறந்தநாளை , இந்தியாவில் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.இது ஒரு தேசிய விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது . காந்தியின் அகிம்சை, சத்தியம் மற்றும் கீழ்ப்படியாமை ஆகியவற்றின் கொள்கைகளை நினைவு கூறும் நாளாகும். அவரது பாரம்பரியத்தை மதிக்கவும், அமைதி மற்றும் நீதி பற்றிய அவரது போதனைகளை மேம்படுத்தவும் ,நாடு முழுவதும் பல நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Sep 27, 2024

உலக சுற்றுலா தினம் 2024 - செப்டம்பர் 27

உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது.. புதிய அனுபவங்களுடன் சுற்றுலா நமக்கு நிறைய மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகளை வழங்குகிறது. சுற்றுலா என்பது ஒரு இடத்திற்குச் செல்லும் மக்களுக்கு விடுமுறை மற்றும் சேவைகளை வழங்கும் மற்றும் ஏற்பாடு செய்யும் வணிகமாகும். ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் கூற்றுப்படி, சுற்றுலா என்பது தனிப்பட்ட அல்லது தொழில்முறை நோக்கங்களுக்காக அவர்களின் வழக்கமான சூழலுக்கு வெளியே உள்ள பிற இடங்கள் அல்லது நாடுகளுக்கு மக்களை நகர்த்துவதை முன்வைக்கிறது. நமது பயணம் விடுமுறையாக இருந்தால், நம் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் நாட்டிற்குள் அல்லது நாட்டிற்கு வெளியே பல இடங்களுக்குச் சென்று, வெவ்வேறு இடங்களின் வெவ்வேறு கலாச்சாரங்களைப் பற்றிய சில அறிவைப் பெறலாம்.ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு 1980 செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினத்தை சர்வதேச அனுசரிப்பாகக் கொண்டாடியது.ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் சிலைகள் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே இந்த தேதி உலக சுற்றுலா தினமாக தேர்வு செய்யப்படுகிறது.1997 இல் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த அதன் பன்னிரண்டாவது அமர்வில், ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் பொதுச் சபையானது, உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுவதில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் பங்காளியாக செயல்பட ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தது.நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மறைந்த இக்னேஷியஸ் அமடுவா அடிக்பி, செப்டம்பர் 27ஆம் தேதியை உலக சுற்றுலா தினமாக மாற்றும் யோசனையை முன்வைத்தவர்.ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் நாட்டில் உலக சுற்றுலா தினத்தை ஒரு சிறப்பு கருப்பொருளுடன் கொண்டாடுகிறோம்.ரியாத், சவுதி அரேபியா மற்றும் உலக சுற்றுலா தின தீம் 2023 "சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு" ஆகும்.உலக சுற்றுலா தினம் 2024 "சுற்றுலா மற்றும் அமைதி" என்ற கருப்பொருளுடன் ஐரோப்பாவில் நடத்தப்படுகிறது.உலக சுற்றுலா தினம் 2025 தெற்காசியாவில் "சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்" என்ற கருப்பொருளுடன் நடத்தப்படுகிறது.சுற்றுலாத் துறைக்கு மரியாதை செலுத்தும் வகையில், சுற்றுலாத் துறையில் பணிபுரிபவர்களைக் கௌரவிப்பதற்கும், பயணம் செய்வதற்கும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.சர்வதேச சமூகத்தின் கலாச்சார, அரசியல், சமூக மற்றும் பொருளாதார விழுமியங்களை பாதிக்கும் வகையில் சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.உலக சுற்றுலா தினம், முழு உலகத்தின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் சுற்றுலா எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் விளக்குகிறது.

Sep 21, 2024

21 செப்டம்பர் 2024  மஹா பரணி

மஹாபரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு திதி,, தர்ப்பணம் செய்து, யம தீபம் ஏற்றினால் யமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்குச் செல்லவேண்டிய, நம் முன்னோர்களின் வேதனையைக் குறைத்து, சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார் என்பது ஐதீகம். மகாளய பட்சத்தின் போது வருகை தரும் பித்ருக்களுக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது யம தீபம்  மட்டுமே.மகாளபட்சத்தில் வரும் மஹா பரணி அன்று யமதீபம் ஏற்றி யமதர்மராஜாவை வழிபட வேண்டும்.நாட்டில்  உள்ள மிக புண்ணிய தலங்களில் மிகமுக்கிய மானதாக  கருதப்படுவது காசியும், கயாவும் தான் இங்கு சென்று இறந்தாலும் சரி, இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தாலும் சரி அவர்கள் உடனடியாக முக்தியை அடைவார்கள் என்பது நம்பிக்கை. ஆனால் அனைவராலும் காசிக்கோ அல்லது கயாவிற்கோ சென்று முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாது. ஆனால் அங்கு சென்று தர்ப்பணம் கொடுத்த பலனை தரக் கூடிய அற்புதமான நாள் தான் மகா பரணி,மகாபரணியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்கள் இறை நிலையாகிற முக்தியை பெறுவார்கள் என்பது ஐதீகம். மகாளய பட்சத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு சொல்லப்படும் மிக முக்கியமான, பித்ருக்களின் ஆசிகளை பெறுவதற்குரிய நாளாக கருதப்படுவது மகாபரணி நாளாகும்.

Sep 17, 2024

செப்டம்பர் 2024 பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்

இந்தஆண்டு செப்டம்பர் மாதம் "பௌர்ணமியானது செப்டம்பர் 17ம் தேதி வருகிறது. செப்டம்பர் 17ம் தேதி காலை 11.22 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 18ம் தேதி காலை 09.10 மணி வரை பௌர்ணமி திதி உள்ளது. செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்கிழமை, இந்த ஆண்டு புரட்டாசி மாத பிறப்பாகவும் அமைந்துள்ளதால் கூடுதல் சிறப்புடையாக அமைந்துள்ளது. பௌர்ணமி என்பதால் சிவனையும், சத்ய நாராயணரையும், புரட்டாசி முதல் நாள் என்பதால் பெருமாளையும், செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமானையும் இந்த நாளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். பொதுவாக மாதப் பிறப்பு மற்றும் பௌர்ணமியில் கிரிவலம் செல்வதால் மற்ற நாட்களில் கிரிவலம் செல்வதை விட அதிக பலன் கிடைக்கும் என்பார்கள். இந்த ஆண்டு இரண்டும் இணைந்து வருவதால் இந்த நாளில் கிரிவலம் செல்வது இரட்டிப்பு பலனை தரும்.நினைத்தாலே முக்தியை தரக் கூடிய திருத்தலம் திருவண்ணாமலை, உலகின் பல மூலைகளில் இருக்கும் சித்த புருஷர்களையும், ஞானிகளையும் தன்னை நோக்கி ஈர்க்கும் ஆன்மிக தலம் திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் இந்த தலம் பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும், ஆன்மிக சிறப்புகளையும் தன்னுக்குள் அடக்கி வைத்துள்ளது. இங்கு சிவனே மலையாக வீற்றிருப்பதால் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பான வழிபாடாகும். அருணகிரி நாதர் முதல் ரமண மகரிஷி வரை ஆயிரக்கணக்கான ஆன்மிக சான்றோர்களை போற்றி கொண்டாடும் திருத்தலம் திருவண்ணாமலையாகும்.

Sep 07, 2024

விநாயகர் சதூர்த்தி- 2024

சிவபெருமானின் அருள் பெற்ற கஜமுகாசுரன் தான் பெற்ற வரத்தின் வல்லமைகளால் தலைகணம் கொண்டு தேவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்துள்ளார். தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி கஜமுகாசுரன் வரம் பெற்று இருந்ததால் செய்வதறியாமல் தேவர்கள் திணறி வந்தனர்.அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவ பெருமானிடம் சரணடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.விநாயகருக்கும், கஜமுகாசரனுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. போரின் முடிவில் எந்த ஆயுதங்களாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று கஜமுகாசுரன் வரம் பெற்றதால் தன்னுடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை சம்ஹாரம் செய்தார். பின்னர் கஜமுகாசுரனை மூஞ்சுறாக மாற்றி தனது வாகனமாக்கிக் கொண்டார். ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தீராத வினை தீரும் என்பதும், அனைத்து விதமான பாக்கியங்கள் நம்மை வந்து சேரும். முதன்மை கடவுளாக விளங்கும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுவது தொடர்பாக பல புராண கதைகள் உள்ளன. கஜமுகாசுரனை கொன்றதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்பதும் ஐதீகம்.

Aug 26, 2024

கோகுலாஷ்டமி

கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது.மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். கிருஷ்ண இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள். கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு. கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின்அருள்100சதவீதம்அதிகரிப்பதாகபக்தர்கள்நம்புகிறார்கள்.ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணரின் அருள் பார்வை நம் மீது படும். கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற கீதகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும். கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர் – சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை..கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். அரசியல் வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும்.தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும். கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

Aug 15, 2024

இந்திய சுதந்திர தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினம், 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்று சுதந்திர நாடாக மாறிய வரலாற்று தருணத்தை இந்த நாள் குறிக்கிறது. இந்தியாவில் ஒரு முக்கிய தேசியவிழாவாகும்1947 ஆகஸ்ட் 15 அன்றுநாடுசுதந்திரமாகஅறிவிக்கப்பட்டது.பிரிட்டிஷ்ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவிற்கு கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்15ம்தேதி சுதந்திரம் கிடைத்தது.இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவு செய்து அதன் பொறுப்பை கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் ஒப்படைத்தது. அவர் 1947-ம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி அதற்கான திட்டத்தை வெளியிட்டார். திருப்பூர் குமரன், பாரதியார், வ. உ.சி, பழசிராஜா, கட்டபொம்மன், திப்பு சுல்தான், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் என்று ஏராளமான தென்னிந்திய போராளிகளும் தியாகிகளும் தான் சுதந்திரம் வாங்கபோராடினார்கள். வாங்கித் தந்தார்கள்..மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டம் தொடர்ந்தது மகாத்மா காந்தி அகிம்சை வழி நாடு முழுவதும் வேகமாக பரவி அனைவரும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட முன் வந்தனர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு டெல்லியில் செங்கோட்டையில் லகோரி கேட் மீது இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுதந்திரத்திற்காக சுதந்திர வீரர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்தனர். அவர்களுடைய நினைவாகவே ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் குமரன், பாரதியார், வ. உ.சி, பழசிராஜா, கட்டபொம்மன், திப்பு சுல்தான், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் என்று ஏராளமான தென்னிந்திய போராளிகளும் தியாகிகளும் தான் சுதந்திரம் வாங்கபோராடினார்கள். வாங்கித் தந்தார்கள்இந்தியசுதந்திர தின விழா உற்சாகமாக ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவின் தேசிய கொடி உயரமாக உயர்த்தப்பட்டு பெருமை மற்றும் தேசபக்தியுடன் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். சுதந்திர தினத்தன்று பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் அரசு அலுவலகங்களில் நாடக நடனங்கள், கலாச்சார நிகழ்வு மற்றும் நடனம், இசை போன்றவை ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் தேசியக்கொடி கொண்டு அலங்கரித்து மக்கள் தங்களது சுதந்திர தின விழாவை கொண்டாடுகின்றனர். அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி, அரசுஅலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நடன நிகழ்ச்சி கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.சுதந்திர தினத்தன்று மாநில தலைநகரங்களில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது, அதில் பிரதமர் பங்கேற்று கொடியேற்ற விழா நடந்த பிறகு ஆயுதப்படை மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு நடத்தப்படும், ஆண்டின் இந்தியாவில் முக்கிய சாதனைகள் குறித்தும் எதிர்கால சவால்கள் மற்றும் இலக்குகள் போன்றவற்றைக் குறித்து பேசப்படுகின்றது.

Aug 10, 2024

இராஜபாளையம் பி.ஏ.சி.ராமசாமி ராஜா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கலந்துரையாடல் விழா,

நாள்: 10.08.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிஇடம் : பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளி ஆடிட்டோரியம், இராஜபாளையம்.தலைமைஉயர்திரு.P.R.வெங்கட்ராமராஜாதலைவர், ராம்கோ குழுமம், ராஜபாளையம்சிறப்பு விருந்தினர்கள்:டாக்டர் நித்தியானந்தன் தேவராஜ் CEO/ நிர்வாக இயக்குனர், A Voith Group நிறுவனம், கோயம்புத்தூர்.திரு.A.சண்முகவேலாயுதன்,நிறுவனர்- I.P.L. தயாரிப்புகள், சென்னை (1967 பேட்ச் மெக். முன்னாள் மாணவர்)முன்னாள் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்...திரு.பி.சந்திரசேகர் ராஜா தலைவர், முன்னாள் மாணவர் சங்கம்திரு.K.R.சுரேந்திர ராஜா தலைவர், முன்னாள் மாணவர் சங்கம் மத்திய கிழக்கு நாடுகள், மஸ்கட்திரு .S .ரவிசங்கர் செயலாளர், முன்னாள் மாணவர் சங்கம்எஸ்.சிவக்குமார் துணைத்தலைவர்பி.ராஜ்குமார் துணைத்தலைவர்பி.ரகுபதி பொருளாளர்

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News