25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இன்றைய தினம்

Aug 07, 2024

விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் தேரோட்டம்

அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில் திருஆடிபூரத் திருத்தேரோட்டம் ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆண்டாள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆடிப்பூரத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.எம்.மான்ராஜ் அவர்கள்  மற்றும்திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் திரு.பி.ஆர்.வெங்கட்ராமராஜா(சேர்மன்- ராம்கோ குழுமம்)ஆகியோர் திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.இவ்விழா.திருத்தேரானது கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் வீதி உலா வந்தது.ஆடிப்பூரத்தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தது. காவல்துறையின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றங்களைத் தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன்,திருவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.தங்கம் ரவிக்கண்ணன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.கு.ஆறுமுகம், திருக்கோவில் செயல் அலுவலர் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Aug 01, 2024

காகிதம்

காகிதம் தயாரிக்க காடுகள் அழிக்கப்படுவதில்லை..46 % காகிதம் சேகரிக்கப்பட்ட பழைய கழிவுகள் காகிதத்திலிருந்தும், 22% விவசாயக் கழிவுகளான கரும்புச்சக்கை, நெல் மற்றும் கோதுமை வைக்கோல் ஆகியவற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.ஏனையவை காகிதத்திற்கென நடப்பட்ட மரங்கள் (plantations) மற்றும் சமுதாய காடுகளில் (Social Forestry) இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. காகிதம் சுற்றுப்புற சூழலை அழிக்காது, நிலையானது, மக்கும் தன்மை கொண்டது, மறுசுழற்சிக்கு உகந்தது

Jul 03, 2024

ரோட்டரி கர்மவீரர் காமராஜர் இருதய பாதுகாப்பு ஊர்தி,Camp, ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல்.

இன்று ரோட்டரி ஆண்டின் முதல் நாள். இது முதல் பகிர்வு.மருத்துவர்கள் தினமும் இணைகிறது..ஜூலை - 3.ரோட்டரி கர்ம வீரர் காமராஜர் இதயம் பாதுகாப்பு ஊர்தி நம் நகருக்கு வருகிறது. Rtn. இதயம் V.R.முத்து அவர்களின் சீரிய எண்ணம் செயல்பாட்டுக்கு வருகிறது.இதய பிரச்சினை உள்ளவர்கள், Check செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் -நான்கு பதிவுகளையும் வாசித்து முன்னேற்பாட்டுடன் வரலாம்.இதயம் காப்பது இதயமே.Camp நடைபெறும் இடம்:P. A.C.R. நினைவு நூற்றாண்டு மண்டபம், சுதர்சன் கார்டன்,இராஜ பாளையம்.  , ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல்.

May 07, 2024

இராஜபாளையம் புதுப்பாளையம், சக்கராஜா கோட்டை அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் பொங்கல் திருவிழா அழைப்பிதழ்

அன்புடையீர்,திகழும் மங்களகரமான 1199-ம் ஆண்டு குரோதி வருஷம் சித்திரை மாதம் 24-ம் தேதி (07-05-2024) செவ்வாய்கிழமை இரவு 8.00 மணி அளவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அருள்ஜோதி வடிவாய் அமர்ந்து, நாதஸ்வரம், மேளவாத்தியங்கள். கிளாரினெட் கச்சேரி, வாண வேடிக்கைகளுடன் றப்பட்டு, ஜவஹர் மைதாளம் தெரு, மதுரை ராஜாக் கடைத்தெரு. தென்காசி - மதுரை மெயின் ரோடு, P.S.K. பார்க் அங்கைய ராஜா தெரு. வளையல் செட்டியார் தெரு. அம்பலப்புளி பஜார் ஸ்ரீ முத்தாலம்மன் பீடம் வந்து ஸ்ரீ குருசாமி கோவில் சிதம்பர மூப்பனார் தெரு வழியாக சுற்றி வந்து ஆலயம் வந்தடையும், அவ்வமயம் பக்த கோடிகள் அனைவரும் தவறாது ஷெ பொங்கல் விழா வைபங்களில் கலந்து கொண்டு சிறப்புவித்து அம்மன் அருள் பெற வேண்டுகிறோம்.இரவு 10.00 மணிக்கு மேல் வில்லிசை வேந்தர், ஜோதிடர் M.V. மனோகரன் வில்லிசை கலைக் குழுவினர் வழங்கும் வில்லிசை கச்சேரி நடைபெறும். (ஸ்ரீ முத்தாலம்மன் பிறப்பு - வளர்ப்பு கதை)2-ம் நாள் நிகழ்ச்சிகள்08.05.2024 சித்திரை 25-ம் தேதி புதன்கிழமை பகல் முழுவதும் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் முன்பு அமைந்துள்ள அலங்காரப் பந்தலில் ஸ்ரீ முத்தாலம்மன் அருள்ஜோதி ரூப சக்தியாய் அமர்ந்து மக்களுக்கு காட்சி கொடுக்கும். அவ்வமயம் பொதுமக்கள் அனைவரும் அம்மன் தரிசனம் செய்து, அம்மனின் அருளைப் பெற்று திகழுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.காலை 10.00 மணிக்கு மேல் மதியம் வரை திருமதி. பாண்டியம்மாள் பாடகி பாரதி இசைக்குழு அவர்களின் பக்தி இசைப்பாடல்கள், பாரம்பரிய பஜனை மற்றும் நாமாவளிகள், கும்மி கிராமிய தெம்மாங்குப்பாடல்கள் நடைபெறும்.இப்படிக்குஇராஜபாளையம் புதுப்பாளையம், சக்கராஜா கோட்டைஅருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் டிரஸ்ட்

May 01, 2024

தொழிலாளர்களின் உழைப்பு தான் இந்த உலகம் நின்றுவிடமால் சுழல வைக்கிறது.

உழைப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம்1ம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.ஏன் மே1ம் தேதி உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்று கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியாதுமே தினமும் ஒரு விடுமுறை நாள் என்று நாம் தவறாக எண்ணிவிடக்கூடாது. உழைப்பாளர்கள் முற்காலத்தில்12 மணி நேரம் முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில்20 மணி நேரமும் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம் ஆகும்..முன்பு உள்ள மக்கள் ஓய்வில்லமால்தொடர்ந்துவேலை பார்த்துகொண்டே இருந்தார்கள் .அவர்களின்உழைப்பிற்குஏற்ற ஊதியமும்கிடைக்கவில்லை. 1886 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிகாகோ நகரத்தில்2.5 லட்சம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. பிறகு, தொழில் நகரங்களான சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன், மில்வாக்கி, பிலடெல்பியா, சின்சினாட்டி, பிட்ஸ்பர்க், பால்டிமோர், டெட்ராய்ட் என அமெரிக்கா முழுவதும்3.5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது.இதை எதிர்த்து சிகாகோ நகரத்தில்1886ம் ஆண்டு மே1ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வெற்றி பெற்றதன் அடையாளமே தொழிலாளர் தினம் உருவானதற்கு காரணமாக இருந்தது.தொழிலாளர்களின் துன்பத்தை கண்டறிந்து,முதலாளிகள் தங்களதுஉழைப்பை சுரண்டுகின்றனர் என்பதைஅறிந்து உலகதொழிலாளர்கள் அனைவரும்ஒன்றுசேர்ந்துபோராட்டத்தில்ஈடுபட்டனர்.உழைப்பாளர்கள் ஒன்று சேர்வதற்கு அடிக்கல் நாட்டியவர் காரல் மார்க்ஸ்.உழைப்பு இல்லாமல் எந்த ஒரு பொருளும் உருவாகாது என்பதை உணர்ந்தும், ஆனால் இங்கு தொழிலாளர்கள் ஐந்தறிவு ஜீவன்களை விட கீழ்த்தரமான நிலையில் நடத்தப்படுகிறார்கள் என்றும் நினைத்தனர்.  முக்கிய கோரிக்கை தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரம் என்பது தான். இந்த கோரிக்கை 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி நடைபெற்றது.தொழிலாளர்களின் இந்த போராட்டத்தை தாங்க முடியாமால் அரசு1890ம் ஆண்டு ஏற்று8 மணி நேர வேலைக்கு ஒத்துக்கொண்டது. இதன் விளைவாக உருவானது தான் தொழிலாளர் தினம்.தற்போது80நாடுகளுக்குமேல்இந்ததினத்தைகொண்டாடிவருகின்றனர். இந்தியாவில்முதன் முதலில்1923ம் ஆண்டும.சிங்காரவேலர் என்பவர்மெரினா கடற்கரையில் செங்கொடியைஏற்றி கொண்டாடினார்.இந்த நாளின் நினைவாக மெரினாவில் அண்ணா சதுக்கத்தின் எதிரில் உழைப்பாளிகள் சிலை எழுப்பப்பட்டது, இது 1959-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள நேப்பியர் பூங்கா1990ம் ஆண்டு மே தினப் பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொழிலாளர்களின் உழைப்பு தான் இந்த உலகம் நின்றுவிடமால் சுழல வைக்கிறது. 

Apr 23, 2024

சித்திரா பௌர்ணமியன்று நமது பாவ, புண்ணிய கணக்கு  சித்திரகுப்தரால் எழுதப்படுகிறது

சித்திரா பௌர்ணமியன்று சித்திரகுப்தனை வழிபட்டால் அவர் நம் பாவ கணக்குகளைக் குறைத்து, புண்ணிய கணக்குகளை அதிகமாக்குவார் என்றும் ஒரு நம்பிக்கை இருப்பதால் சித்திரா பௌர்ணமியன்று பெருமாள், சிவன், அம்பிகை போன்ற தெய்வங்களுக்கு வழிபாடு செய்வதோடு, சித்திரகுப்தனுக்கும் வழிபாடு செய்கிறார்கள். சித்திரா பௌர்ணமி சித்திரகுப்தனின் பிறந்த நாள் என்று ஒரு சாராரும், அவருடைய திருமண நாள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.மரணத்திற்கு அதிபதி கடவுளான யமதர்மராஜாவுக்கும் ஒரு சமயம் சிக்கல் ஒன்று நேர்ந்தது. தான் யாருடைய உயிரை பறிக்க வேண்டுமோ அவர்களைப் பற்றிய முழு விவரங்களைப் பற்றி தெளிவான கருத்துகள் இல்லாத தனது தர்மசங்கடத்தைஸ்ரீ பிரம்மாவிடம் இவர் முறையிடுகிறார். அச்சமயம் அங்கு தோன்றும்  சிவபெருமான் சித்திரகுப்தனை அப்பணிக்கு அமர்த்துகிறார்.  சித்திரகுப்தரும் வெகு சிரத்தையாக மானிடர்கள் பிறந்த காலம் முதல் இறக்கும் தருணம் வரை அவர்களது வாழ்க்கையில் அவர்கள் செய்த அனைத்து பாவ, புண்ணிய காரியங்களையும் 'ஆகாஷிக் குறிப்புகள்'  ஒரு பதிவேட்டில் பதிவு செய்கிறார். இவரது ஒரு கையில் மையினை உடைய ஒரு கிண்ணமும் மறு கையில் சிறகால் ஆன எழுதுகோலும் இருக்கும். சித்திரா பௌர்ணமியன்று இவர் இந்தக் கணக்கை யமதர்மராஜாவிடம் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து கணக்குகளையும் முறையாக எழுதி பராமரித்து வருபவர் சித்திரகுப்தர்தான் என்பது இந்து சமய நம்பிக்கை. ஒருவருடைய இறப்புக்குப் பிறகு இந்தக் கணக்கு வழக்குகளைப் பொறுத்தே அவரவருக்கு சொர்க்கமோ நரகமோ அமையும் என்பது இந்துக்களின் உறுதியான நம்பிக்கையாகும்.சித்திரா பௌர்ணமியன்று, "சித்திரகுப்தன் இன்றைக்கு நம்மோட பாவ, புண்ணிய கணக்கை எழுதி யம தர்மராஜா கிட்ட கொடுக்கிற நாள்.  இன்னிக்கு சேட்டை எதுவும் செய்யாம ஒழுக்கமா  ஜாக்கிரதையா இருங்க. ஒரு ஈ, எறும்பைக் கூட கொல்லக் கூடாது!" என்று வீட்டில்  பெரியோர்கள் எச்சரிப்பதை சின்ன வயதிலேயே நாம் கேட்டிருக்கிறோம்.இன்று உப்பில்லாத விரதம் அனுசரித்து சித்திரகுப்தனை வழிபடுவார்கள். இன்று எருமைப் பாலில் செய்த பாயசம் சிறப்பான நைவேத்தியமாகும்."நாங்கள் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் கணக்கில் எடுத்துக்கொள்!" என்று சித்திரகுப்தரிடம் இறைஞ்சி வழிபடுகின்றனர்.சித்திரகுப்தருக்கு தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் தனிக்கோயில் உள்ளது. அதேபோல, தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்திரபுத்திர நாயனார் என்னும் பெயருடன் கோயில் அமைந்துள்ளது. இதைத்தவிர, திருவண்ணாமலை அருணாசலேஸ்வார் கோயிலில் இவருக்கு ஒரு தனி சன்னிதி உள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் நுழைவு வாயில் அருகே உள்ள பிராகாரத்தில் இவர் ஒரு தூணில் காட்சியளிக்கிறார்.சித்திரா பௌர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலமும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இன்று சித்திரா பௌர்ணமி ஆகும். இன்று கிரிவலம் வருபவர்கள் ஈசனின் அருளோடு, சித்திரகுப்தரின் கருணையையும் பெற்று சிறக்கலாம்.

Apr 14, 2024

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 தமிழ் புத்தாண்டு சந்தோசத்திற்கும்,கொண்டாட்டதிற்கு மான தருணம் இதுகுடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள்.இந்த புனிதமான விடுமுறை நாள் உங்களுக்குமிகுந்த சந்தோசங்களையும்,வளங்களையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்.

Apr 11, 2024

ரம்ஜான் வாழ்த்துக்கள்

மழையும் வெயிலும்மண்ணுக்கு வேண்டும்ஈகையும் நட்பும்மனிதனுக்கு வேண்டும்இந்நன்னாளில் உங்கள்எல்லா துன்பங்களும்கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்கஇனிய ரமலான் வாழ்த்துக்கள்

Apr 09, 2024

"யுகாதி"கொண்டாட்டம்

சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.உகாதி என்கிற சொல் சமசுகிருதம் மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. சமசுகிருதத்தில்"யுக" என்ற சொல்லுக்கு வயது என்றும்,"அடி" என்ற சொல்லுக்கு தொடக்கம் என்கிற பொருள் கணப்படுகிறது."ஓர் ஆண்டின் தொடக்கம்" என்கிற பொருளில்"உகாதி" என்கிற சொல் வந்துள்ளதைக் காணலாம்.உகாதி சித்திரை மாதத்தின் சுத்த பாட்டிமை தினத்தில் வருகிறது. பெரும்பாலும், இப் பண்டிகை, ஆங்கில நாட்காட்டியின் படி, மார்ச்சு மாதக் கடைசியில் அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வருகிறது.கர்நாடக மாநிலத்தில் இது "யுகாதி" என்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் "உகாதி" என்றும் அழைக்கப்படுகிறதுதமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு மொழி பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர்.உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இதனால், இப் பச்சடியில் இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு போன்ற சுவைகள் கலந்துள்ளன. இது, வருகிற புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறதுமகாராட்டிரம் மாநில இந்துக்களால் இந்த நாள் குடீ பாடவா என்று கொண்டாடப்படுகிறது. .சிந்து மாகாணம், சிந்தி இன மக்கள் இதனை சேட்டி சந்த் என்று கொண்டாடுகிறார்கள்மணிப்பூர் வாழ் மக்கள் இதனை "சாஜிபு நொங்மா பன்பா" எனக் கொண்டாடுகின்றனர்.பாலி மற்றும் இந்தோனேசியா வாழ் இந்துக்கள் இதனை நைபி என்று கொண்டாடுகின்றனர்.

Apr 08, 2024

85வது பிறந்தநாள் அஞ்சலி திரு.க.வீ.அழ.ராம.மு.ராம.முத்தையா செட்டியார்

சின்னய்யா அழகப்பர் சிறுவிழிகள் மலர்ந்த தினம் சகலகலாவல்லித் தாய் பன்னெடும் நாள் புரிந்த தவம் முன்னவர் வழிபாட்டால் முந்தி வந்த மூலதனம் முளைத்தெழுந்த தாமரையாய் முகம் காட்டி மலர்ந்த தினம் விளைவிக்க கல்விப்பயிர் விவசாயி ஜனித்த தினம் சளைக்காமல் அள்ளியிட சூரியனார் உதித்த தினம் மழையாகத் தனம் பொழிய மனை தவழ்ந்த மன்னரினம் மகத்தான கல்வித்தாய் மகவொன்றை ஈன்ற தினம் துளைத்திடும் நோவுக்கே தனை ஈந்த வள்ளலினம்.byவள்ளி முத்தையா 

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News