வரலட்சுமி விரத நல்வாழ்த்துக்கள். மஹாலட்சுமி தாயாரை போற்றி வணங்கி அனைத்து செல்வ வளங்களையும் பெறுவோம்.
அனைவரது வாழ்க்கையிலும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இன்பம், துன்பம் என அனைத்து சூழல்களிலும் துணையாக இருப்பவர்களே உண்மையான நண்பர்கள். அனைவருக்கும் இருக்கும் ஒரே உறவு 'நண்பர்கள்'. மற்ற உறவுகள் இயற்கையாக வருவது. நண்பர்கள் மட்டுமே நாம் தேர்வுசெய்யக்கூடியது. பல வேறுபாடுகளை கடந்தது நட்பு மட்டுமே. சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட நண்பர்களை அதிகம் சேர்ப்பது முக்கியம். நண்பர்கள் தினம் பல நாடுகளில், வெவ்வேறு தேதியில் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா., சார்பில் ஜூலை 30ல் சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகில் வாழும் புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளன. அழிந்து வரும் புலிகளை பாதுகாக்க கோரிஜூலை 29ல்உலகபுலிகள்தினம்கடைபிடிக்கப்படுகிறது.இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, வியட்நாம், பூடான், நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, கம்போடியா, சீனா, தைவான், லாவோஸ், ரஷ்யா என 13 நாடுகளில் புலிகள் வாழ்கின்றன. புலிகள், தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால் காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவது. காடுகளில் உற்பத்தியாகும் நதிகளையும் பாதுகாக்கிறது. இயற்கையை பாதுகாக்கும் புலிகளை பாதுகாக்கஉலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்(ஜூலை 28) காலை 9:10 மணிக்கு துவங்க இதனை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ஸ்ரீரங்கம் ரெங்க நாதர், மதுரை கள்ளழகர் கோயில்களில் இருந்து நேற்று பட்டு, மங்களப் பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்களைகோயில் யானை ஜெயமால்யதா முன் செல்ல மங்களப் பொருட்கள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடக்கிறது.
உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் நிர்வாக ஆணையம் 1989-ம் ஆண்டு முதல் ,உலக மக்கள் தொகை தினத்தை அனுசரிக்கப் பரிந்துரைத்தது. உலக மக்கள் தொகை தினம் என்பது உலகளாவிய மக்கள் தொகை வளர்ச்சி, மக்கள் தொகை மாற்றங்கள் மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கியமான பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான முருகப்பெருமானின் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 2023ல் திருப்பணிகள் துவங்கின. பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை, 6:15 முதல், 6:50 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றது. . 6100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப் பட்டன. கோயிலுக்குள் நேற்று மதியம் 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 12ம் கால யாக சாலை பூஜை அதிகாலை 4:00 மணிக்கு நடை பெற்றது. காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் ராஜகோபுர கும்ப கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம்நடை பெற்றது.அதேநேரத்தில், சண்முகர், ஜெயந்திநாதர்,வள்ளி, தெய்வானை, குமரவிடங்கபெருமாள், நடராஜர், உள்வெளி பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபி ஷேகம் நடை பெற்றது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க 20 ட்ரோன் வசதி செய்யப்பட்டது.
ROTARY CLUB OF RAJAPALAYAM Cordially invites you to the INSTALLATION CEREMONY Of Rtn. Srimaan Ramachandra Raja ,As PresidentRtn.Dr.N. Karthikeyan, as SecretaryFor the year 2025 - 2026 ,On 02/07/2025, Wednesday 6.30 pm ,@PRR Rotary Hall, Cotton Market, Rajapalayam.Chief Guest - Rtn. PDG AKS V.R. MUTHUEND POLIO NOW COORDINATOR ZONE. 5 Year 2025-2028Guest of Honour - Rtn PDG H. SHAJAHAN Special Guest - P.V. ABINAV RAJAManaging Director, Ramco Systems Ltd.,FelicitationRtn. Dr. M. RADHA MD.DM., Asst Governor, Zone-11Rtn. PAG. T. MAYIL BALASUBRAMANIANRtn. R. Ananthi, President. Rtn.Dr.N. Karthikeyan,Secretary
உங்களின் உடல், மன ஆரோக்கியத்திற்காக, சர்வதேச யோகா தினத்தில் யோகா கற்றுக் கொள்ள ஓர் வாய்ப்பு.ஞானோதயம் கல்வி அறக்கட்டளை* 21.06.2025 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடத்தும் *ஆரோக்கியமான வாழ்விற்கான யோகா* என்ற தலைப்பில் யோகா பற்றிய அறிமுக வகுப்பு ஆன்லைனில் நடைபெற உள்ளது.கட்டணங்கள் ஏதுமில்லை.இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள (கூகுள் பார்மை)https://forms.gle/dRAgtxYTSfwD8mec9Google form பூர்த்தி செய்து whatsapp குரூப்பில் இணைந்தால் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் யோகா வகுப்பில் பங்கேற்கலாம்.WhatsApp group Link https://chat.whatsapp.com/LvatF8EYKLJFqSf3Kd8Ujc
முதலில் வீட்டை சுத்தம் செய்து, முருகப் பெருமானின் படம், விளக்கு உள்ளிட்ட அனைத்தையும் சுத்தம் செய்து விட வேண்டும். வைகாசி விசாக நாளன்று அதிகாலையில் எழுந்து முருகப் பெருமான் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். வேல் அல்லது முருகப் பெருமானின் விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அன்றைய தினம் முருகப் பெருமானின் மனம் குளிர குளிர பால், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும் இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முருகப் பெருமானுக்கு சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். முருகன் அவதரித்த வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தை பேரு கிட்டும் என்பது நம்பிக்கை.
இராஜபாளையம் மூத்தோர் நலச் சங்கத்தின் சார்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி “ஆபரேசன் சிந்தூர் வெற்றி பேரணி” உரிய அனுமதியுடன் நடைபெற உள்ளது. இன்று மாலை 05:30 மணிக்குநாள்: 17-05-25, சனிக்கிழமை நேரம்: மாலை 05:30 மணிதுவங்கும் இடம் : ஜவஹர் மைதானம் தியாகி P S K சிலை வளாகம்அங்கிருந்து காந்திகலைமன்றம், PSK பார்க், அம்பலப்புளி பஜார் வழியாக மீண்டும் ஜவஹர் மைதானத்தை வந்தடையும்.பேரணி *தேசியக்கொடி* ஏந்தி,கீழ்கண்ட கோஷங்களுடன் நடைபெறும்.1. தேச ஒற்றுமை - ஓங்குக .2. முப்படைகளை - போற்றுவோம்.3. வந்தே மாதரம் - ஜெய் ஹிந்த் !4. பாரத மாதாகி - ஜெய்ஆண்கள் வெள்ளை சட்டையும், பெண்கள் குங்குமம் (மெரூன்) கலர் சேலையும் அணிந்து வந்தால் சீருடை போல் நன்றாக இருக்கும்.கட்டுக்கோப்பாக தேசமே முதன்மை என்ற கோட்பாடுடன் *தேசபக்தி உள்ள அனைத்து பொதுமக்களும்* கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.நம் நகர் முன்னாள் இராணுவ வீரர்கள் வெற்றி பேரணியில் கலந்து கொண்டு பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.