25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இன்றைய தினம்

May 11, 2025

சித்ரா பெளர்ணமி 2025 

11.5.2025 ஞாயிறு இரவு முதல் திங்கள் இரவு வரை சித்ரா பெளர்ணமிகடும் வெயில் காலத்தில் குளிர் நிலவுடன் வரும் நாள் சித்திரா பெளர்ணமி அன்றுதான் இந்திர லோக தலைவன் இந்திரன் மதுரை சொக்கரை வழிபட்டு பல வரங்களை பெற்றான் .அழகர் ஆற்றில் இறங்கி மதுரையை சொர்க்கமாக மாற்றும் நாள்.மதுரையின் ஆதி வழிபாடு மட்டுமல்ல தமிழின் ஆதி விழா சித்திரை திருவிழா .கோடிக்கணக்கான உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தன் அவதாரம் நாள்.கணக்கு எழுதுபவரின் பிறந்த நாள் என நமக்கு சூட்சுமமாக சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் ஒளிந்து இருக்கிறதுபூர்வ புண்ணியாதிபதி சூரியன் லக்னத்தில் உச்சம் பெறுகிறார் பேரறிவு கிரகம் லக்னத்தில் இருக்கும் நாள் அறிவுக்கு பலம் கொடுக்கும் நாள் அல்லவா அன்றைய தினம் நம் அறிவுக்கண் பிரகாசம் அடையும் நாள்..மதுரையம்பதியில் சொக்கனை நாளை தரிசிப்பவர்கள் நாளை கிரிவலம் வந்து அண்ணாமலையானை பூசிப்பவர்கள் ,தாமிரபரணியில் குளித்து நெல்லையப்பனை காண்பவர்கள் ,கொடுமுடி மகுடேஸ்வரர் ,பவானி சங்கமேஸ்வரரை ,சென்னை கபாலீஸ்வரனை தரிசிப்பவர்கள் மட்டுமல்லஉங்க வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆற்றிலோ குளத்திலோ குளித்து விட்டு அரச மர வினாயகரை காலையோ மாலையோ தரிசனம் செய்தாலும் பெரும் புண்ணியம்.அதிர்ஷ்டம்.அவர்கள் மூளை திறன் பல மடங்கு பிரகாசிக்க போகிறதுநாளை ஒரு வேளை உணவாவது பசித்தவர்களுக்கு கொடுங்கள் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு பேனா வாங்கி கொடுங்கள்முதியவர்கள் வெயிலில் நொந்து நடந்து செல்பவர்களுக்கு குடையோ செருப்போ வாங்கி கொடுங்கள் ..மாலையில் வீட்டில் தீபம் ஏற்றி ,வழிபடுங்கள் .உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கும் அம்மன் கோயிலில் சிவன் கோயிலில் அபிசேகத்துக்கு பால் வாங்கி கொடுங்கள்.நீண்டதொலைவில்இருக்கும்கோயிலுக்குசென்றுஅவதிபடாதீர்கள்.முக்கியமாக மிதுனம் ,கன்னி ,தனுசு ,மீனம் ராசியினர் அருகில் இருக்கும் கோயிலில் வழிபடுவதே நல்லது.குலதெய்வம் கோயில் சென்று மாவிளக்கு போட்டு சர்க்கரை பொங்கல் வைத்து சுவாமிக்கு பால் அபிசேகம் செய்து வழிபட்டால் எல்லா கஷ்டமும் தீர்ந்து செல்வ நிலை உயரும்.

May 09, 2025

புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா.

மே 1-ம் தேதி கொடியேற்றதுடன், துவங்கிய புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மஞ்சள் நீராட்டு விழா. திரளாக அம்மன் அருளைப் பெற மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். 

Apr 30, 2025

மே தின, உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 2025

வீட்டை உயர்த்திட நாட்டை வளர்த்திட நாளை உருவாக இன்று உழைந்திடும் உன்னதக் கரங்களே..! தொழிலாளர்கள் உங்கள் உழைப்பும் அப்பணிப்புமே நாட்டை  கட்டமைக்க உதவுகிறது.உடலினை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் உன்னத தோழனே உன்னுடைய நாளில் உங்களை நாங்கள் வணங்குகிறோம்..!

Apr 29, 2025

அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்.

இந்த அட்சய திருதியை நாளில் வாழ்க்கை எப்போதும் ஏராளமான செழிப்பையும் மகிழ்ச்சியை நிறைந்ததாக இருக்க லட்சுமி தேவியின்பூரண அருள் கிடைக்கட்டும். செல்வ வளம் பெற்று, இன்பமுடன் இனிதே வாழ அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்.

Apr 21, 2025

போப் ஆண்டவர், உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மாபெரும் தலைவர் மரணமடைந்தார்.

அர்ஜென்டினாவை சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி, போப் ஆண்டவராக பொறுப்பேற்று தனது பெயரை "போப்" பிரான்சிஸ்" என்று மாற்றிக் கொண்டார். 12 ஆண்டுகள் போப் பதவியில் இருந்த அவர் , தனது 89 வது வயதில்  (போப் பிரான்சிஸ் 1936 - 2025 )உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.  போப் ஆண்டவர். உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மாபெரும் தலைவர். ரோம் நகர போப், புனித பீட்டரின் வாரிசு, வாடிகன் நகர தலைவர் என்ற பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர்.போப் ஆண்டவருக்கு போன்டிபெக்ஸ் மேக்சிமஸ் என்ற பட்டமும் உண்டு. இது "மிக உயர்ந்த பூசாரி" என்று பொருள்படும்.மனித நேயம் மிக்க மறைந்த போப் பிரான்சிஸ், ஒரு மதத்தின் தலைவராக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார். அவரது மரணம் உலகத்திற்கே மாபெரும் ஓர் இழப்பாகும். அனைத்து நாடுகளிலும் அவருக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. போப் என்பது லத்தீன் மொழியில்  பொருள் தந்தை ,பப்பா என்ற சொல்லில் இருந்து உருவானது.. ஒரு போப் ஆண்டவர், தான் விரும்பி ராஜினாமா செய்யும் வரையும், மரணம் அடையும் வரையும் அந்த பதவியில் இருக்கலாம். அவரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. 

Apr 13, 2025

இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம் வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும்.நல்லதே நடக்க... நானிலம் சிறக்க...மகிழ்ச்சி பெருக...மனிதநேயம் சிறக்க...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  

Apr 05, 2025

CHITRA HOSPITALS

Chitra Hospitals, with a new facelift, to be inaugurated by Thiru K.K.S.S.R. Ramachandran Minister - Revenue and Disaster ManagementVirudhunagar's largest 24/7 Emergency Department to be inaugurated by Thiru P.R. Venketrama Raja Chairman - RamcoThe regions's most advanced Cardiac Surgery Department to be inaugurated by Thiru K.T. Srinivasa Raja MD-Adyar Ananda BhavanThe district's most sophisticated Cardiac Cath Lab to be inaugurated by Dr. G.S.K. Velu Chairman - Neuberg and TrivitronHTI Scans and Labs with the district's first 80-Slice CT Scanner to be inaugurated by Dr. C. Vijayabaskar MLA - Viralimalai | Former Minister - Health and Family Welfare24/7 HTI Pharmacy to be inaugurated by Dr. Xavier Britto Chairman - Kerry Indev Logistics | Movie Producer In the presence ofDr. Rani Srikumar -MP-TenkasiThiru S. Thangappandian -MLA RajapalayamTmt. A.A.S. Pavithra Shyam -Chairperson - Rajapalayam MunicipalityThiru S. Sivaprakasam -Ex-Chairman - AruppukottaiWith the blessings of our founder. Late Dr. K. Bhimraja, M. D.

Apr 03, 2025

திரவுபதி அம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையம்திரவுபதி அம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது.அதனைத்தொடர்ந்து அம்மனுக்குகாப்பு கட்டும்நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்று விழாவில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ,சாமி தரிசனம் செய்தனர். தினசரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் திருவீதி உலா வந்து ,பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திரு விழா 13-ந் தேதி நடக்க இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Mar 30, 2025

இனிய ரமலான் வாழ்த்துக்கள் .

இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்.அனைவரும் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடனும் வாழ இனிய ரமலான் வாழ்த்துக்கள் .

Mar 07, 2025

ROTARY CLUB OF RAJAPALAYAM Naatru Literary Organization Celebrates World Womens Day - 2025

Expecting your Gracious Presence.Program starts  sharply at 5.30 p.m.Introductory Speech -2 mnsAcceptance Speech -3 -mins  நம்மை நாம்அங்கீகரிக்காமல்யார் நம்மை அங்கீகரிப்பது?நம்மை நாம்பாராட்டாமல்யார் நம்மை பாராட்டுவது?நம்மை நாம் வாழ்த்தாமல்யார் நம்மைவாழ்த்துவது?நம்மை நாம்அன்பு செய்யாமல்யார் நம்மைஅன்பு செய்வது?அங்கீகரிப்போம்பாராட்டுவோம்வாழ்த்துவோம்இன்று மட்டுமல்லஎந்நாளும் !நாளின் மலர்வும்நாளின் மகிழ்வும்நம்மோடு!     ----------   ROTARY PRESIDENT  ANANDHI

1 2 3 4 5 6 7 8 9 10 ... 15 16

AD's



More News