25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இன்றைய தினம்

Feb 25, 2025

இனிய மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்

 மகாசிவராத்திரி என்பது ஆழ்ந்த பக்தியின் நேரம், நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும் என்பது பலரின் நம்பிக்கை. போலேநாத் என்று அழைக்கப்படும் அவர், இரக்கமுள்ளவர், மகிழ்விப்பது எளிது., அவருடைய அருளைப் பெறலாம். இந்த புனிதமான இரவில், பக்தர்கள் விரதம், பிரார்த்தனை, மற்றும் அவரது நாமத்தை உச்சரித்து, அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காக அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். மகாசிவராத்திரி அன்று, சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற பக்தர்கள் ஒரு சில சடங்குகளைப் பின்பற்றுகிறார்கள். பலர் இந்த சடங்குகளை வீட்டில் செய்யும்போது, ​​மற்றவர்கள் நன்கு அறியப்பட்ட சிவன் கோவில்கள் அல்லது அருகிலுள்ள சிவன் கோவில்களுக்கு செல்ல விரும்புகிறார்கள். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து, அடிக்கடி கங்காஜலை தண்ணீரில் கலந்து விடுவார்கள். இந்த ஆண்டு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் இருந்து ஏராளமானோர் தண்ணீர் கொண்டு வந்துள்ளனர் பலர் சிவலிங்கத்திற்கு தண்ணீர், பால் மற்றும் பேல் பத்திரத்தை வழங்குவதற்காக சிவன் கோவில்களுக்கு வருகிறார்கள். பால், தயிர், நெய், தேன் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் புனித கலவையான பஞ்சாமிர்தத்துடன் சிவபெருமானை வழிபடும் ருத்ராபிஷேக் சடங்கிலும் சிலர் பங்கேற்கின்றனர். பக்தர்கள் குழுவாகவோ அல்லது மௌனமாகவோ ‘ஓம் நம சிவாய’ என்று ஜபிக்கிறார்கள், மேலும் பலர் மஹாமிருத்யுஞ்சய மந்திரம் அல்லது பிற சிவ மந்திரங்களையும் ஓதுகிறார்கள்.இன்று மஹாசிவராத்திரியில் விரதம் அனுஷ்டிப்பவர்கள் பிப்ரவரி 26ஆம் தேதி பிரம்ம முஹூர்த்தத்தின்போது அதைத் தொடங்கி பிப்ரவரி 27ஆம் தேதி பிரம்ம முஹூர்த்தத்திற்குப் பிறகுதான் அதை முறிப்பார்கள்.நீண்ட வருட காத்திருப்பு மற்றும் சாதனாவிற்குப் பிறகு சிவபெருமானும் பார்வதியும் சந்திக்கும் புனிதமான நாள் மஹாசிவராத்திரி என்று சிலர் நம்புகிறார்கள், ஆனால் மற்றவர்களுக்கு இது பிரியமான சிவன் தாண்டவத்தை நிகழ்த்தும் இரவு, இது பிரபஞ்ச உருவாக்கம், பாதுகாப்பு மற்றும் அழிவின் நடனமாகும். இந்த நாளில் சிவபெருமான் பூமியில் இறங்கி வருகிறார், குறிப்பாக அவருக்கு பிடித்தமான காசிக்கு வந்து மகிழ்ச்சியை பரப்புகிறார் என்றும் சிலர் நம்புகிறார்கள். இந்த நன்னாளில் விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். மேலும், இரவில் விழித்திருப்பது ஆன்மீக வளர்ச்சியின் வலுவான அடையாளமாகக் கருதப்படுகிறது. விரதம் இருப்பவர்கள் நச்சு நீக்கம் செய்வதற்கு மட்டுமல்ல, சிறப்பு சுத்திகரிப்பு அனுபவத்திற்காகவும் செய்கிறார்கள்.

Jan 25, 2025

குடியரசு தின வாழ்த்துக்கள்.

தமிழா தமிழா நாளை நம் நாளே தமிழா தமிழா நாடும் நம் நாடேஎன் வீடு தாய் தமிழ்நாடுஎன்று சொல்லடா என் நாமம்இந்தியன் என்றே என்றும் நில்லடாதாய் மீதான பாசம் போன்றதே தாய் நாட்டின் மீதான பாசமும்தாயை நேசிப்போம்தாய் நாட்டைமூச்சாய் சுவாசிப்போம்எத்தனை மதம்எத்தனை மொழிஇருந்தாலும் நாம்அனைவரும் பாரதத்தாயின் பிள்ளைகள் தான்வந்தே மாதரம்!

Jan 15, 2025

உழவர் திருநாள்

தினம் சோற்றில் கைவைக்க, சேற்றில் கால்வைக்கும் உழவர்களை, நன்றியுடன் நினைவு கூர்வோம் ! அவர் வாழ்வு வளம்பெற முயற்சி மேற்கொள்ளும் உறுதி கொண்டு, உழவர் நாளை கொண்டாடுவோம்.உலகில் உயர்ந்த சாதி என்று மாத்தட்டி சொல்லும், தகுதி படைத்த ஒரே சாதி, உழுது விதைத்து பசியாற்றும் விவசாய சாதிதான்.உழவும் உழவனும் இல்லை என்றால், உடலுக்கு உணர்வில்லை. உயிருக்கு உடலில்லை, இதை உணராதோர் மனிதனே இல்லை.

Jan 14, 2025

மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

விவசாயம் செய்யும் மனித குலத்திற்கு எல்லா வழிகளிலும் உதவும் பசு, கன்று, காளைகளுக்கு நன்றி சொல்லி வணங்குகிறோம்.

Jan 13, 2025

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொட்டிட்ட புதுப்பானையில் பொங்குகின்ற பொங்கல் போல தங்க மனம் கொண்ட தமிழர்களின் வாழ்விலும் தமிழ் நகை பொங்கட்டும் பொன்னான புதுப்பானையில் பொங்கி வரும் வெண்பரை போல் வெள்ளை மனம் கொண்ட வெள்ளந்தி தமிழர்களின் வாழ்வில் வெற்றிகள் குவியட்டும்.

Jan 09, 2025

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று பரமபத வாசல் திறப்பு வைபவம்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையான உலகப் புகழ்பெற்ற ஶ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தில் இன்று பரமபத வாசல் திறப்பு வைபவம்.

Dec 31, 2024

HAPPY  NEW YEAR – 2025 ,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்.மாற்றங்கள் மலரட்டும், இன்னிசை முழங்கட்டும்.எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்.புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள் .ஓயாத அலைகளைப் போல, இந்தப் புத்தாண்டில் சந்தோசமும், நிம்மதியும் ஓயாது பெருகட்டும்.இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு, உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் ,வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். உங்களுக்கும், உங்கள் அழகான குடும்பத்திற்கும், மிகவும் மகிழ்ச்சியானமற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025.

Dec 29, 2024

அனுமன் ஜெயந்தி.

மார்கழி மாதத்தில் அமாவாசை திதியும், மூலம் நட்சத்திரமும் இணையும் நாளில் அவதரித்தவர் அனுமன். இந்நாளே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. பக்தி, பணிவு, பலம் நமக்கு ஏற்பட, அவற்றின் அடையாளமான அனுமனை அனுமன் ஜெயந்தி நாளில் வழிபடுவது மிகவும் சிறப்பு. அனுமன் காயத்ரி மந்திரம்- ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ,வாயுபுத்திராயதீமஹி ,தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத்.

Dec 24, 2024

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் உங்களுக்கு புதிய தொடக்கங்களை, மகிழ்ச்சியான நினைவுகளை, மற்றும் அன்பான தருணங்களை கொண்டுவரட்டும்.

Dec 12, 2024

கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை அன்று விளக்கேற்றும் முறை.

திருக்கார்த்திகையன்று காலையில் குளித்ததும், 7:30 மணிக்குள் குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும். சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். அன்று மாலை வரை மனதிற்குள் அண்ணாமலைக்கு அரோகரா, நமசிவாய, சிவாயநம, சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். மாலை ஆறு மணிக்கு விளக்கேற்ற வேண்டும். திரியை வெறும் கைகளால் தூண்டக் கூடாது. ஏதாவது தீக்குச்சி, பூவின் காம்பு ஆகியவற்றை பயன்படுத்தி தான் திரியை தூண்ட வேண்டும். அல்லது விளக்கு தூண்டு திரியை பயன்படுத்தி விளக்கை தூண்ட வேண்டும்.திருக்கார்த்திகை அன்று விளக்கேற்றும் போது அகல் விளக்காக இருந்தாலும் வெறும் தரையில் வைக்கக் கூடாது. வாழை இலை, அரசு இலை,செம்பருத்தி இலை, வெற்றிலை என சுபிட்சத்தை தரும் ஏதாவது ஒரு இலை மீது வைத்து தான் ஏற்ற வேண்டும்.முதலில் வாசலில் கோலத்தின் மீது வைத்த விளக்கு,பிறகு நிலை வாசலில் வைத்த விளக்கை ஏற்ற வேண்டும். அங்கிருந்து ஒரு அகல் விளக்கை எடுத்து வந்து வீட்டின் பூஜைஅறையில் விளக்கேற்றி விட்டு, அதற்கு பிறகு தான் மற்ற இடங்களில் விளக்கேற்றவேண்டும்.விளக்கை மலையேற்றும் போது, தூண்டு திரியை பயன்படுத்தி திரியை பின்னோக்கி இழுத்து விளக்கை மலையேற்றலாம். அல்லது பூவை பயன்படுத்தி தீபத்தின் சுடரை அழுத்தி, மலையேற்றலாம்.வாயால் ஊதியோ, கையை வைத்து விசிறியோ விளக்கை குளிர வைக்க கூடாது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 15 16

AD's



More News