1951 செப். 23ல் காதுகேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச சைகை மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. சைகை மொழி என்பது தெரியப்படுத்தும் தகவலை சைகை மூலம் மற்றவருக்கு காட்சிப்படுத்துவது ஆகும். இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. உலகில் காது கேளாதவர்களாக 7 கோடி பேர் உள்ளனர். இதில் 80 சதவீதம்பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். இவர்களிடம் 300 விதமான சைகை மொழிகள்பயன்பாட்டில் உள்ளன.
மகாளயபட்ச அமாவாசை அன்று காகத்திற்கு மட்டும் ஏன் உணவளிக்க வேண்டும் என மஹாபெரியவரிடம் கேட்டார் ஒருவர்."தன் குரலையே பெயராகக் கொண்டது காகம். 'மியாவ்' என கத்தும் பூனையையும், 'கிக்கி' எனக் கத்தும் கிளியையும் நாம் அப்படி அழைப்பதில்லை. ஆனால் 'கா' எனக் கத்தும் இதை மட்டும் 'காகம்' என்றே அழைப்பது ஏன் தெரியுமா.? கா' என்றால் 'காப்பாற்று'. அதற்கு உணவிடும் போது, 'கா... கா...' என சத்தமிடுகிறோம். அதாவது முன்னோரை அழைத்து எங்களைக் காப்பாற்றுங்கள் என வேண்டுகிறோம். எங்கும் இருக்கும் பறவையான காகத்தை தேட வேண்டியதில்லை. அறிவும், அழகும் கொண்ட அப்பறவை அதிகாலையில் விழிப்பதோடு, நம்மையும் எழுப்புகிறது. அது ஒருபோதும் தனியாக உண்ணாது. உணவு கிடைத்தவுடன் மற்ற காகத்துடன் பகிர்ந்துண்ணும். சூரியன் மறைந்ததும் இருப்பிடத்திற்கு சென்று ஓய்வெடுக்கும். இரவில் (இரவு 7:00 மணிக்குப் பின்) உண்ணக் கூடாது என வேதம் அறிவுறுத்துகிறது. இதை நாம் கடைபிடிக்கிறோமா... இல்லையே... முன்னோரின் அறிவுரையை நமக்கு எடுத்துச் சொல்கிறது காகம்.நாம் உணவிடும் போது காகம் மகிழ்கிறது. அது உண்பதைக் கண்டு நாமும் மகிழ்கிறோம். இந்நிலையில் 'இருவருமே கடவுள்' என்கிறது அத்வைதம். இப்படி தத்துவத்தையும் காகம் நமக்கு உணர்த்துகிறது. அதற்கு உணவிடச் சொன்ன நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல.
புள்ளியியல் நிபுணர், சிவில் இன்ஜினியருமான கர்நாடகாவின் விஸ்வேஸ்வரய்யாபிறந்த நாள் (செப்., 15) தேசிய இன்ஜினியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1955ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மத்திய, மாநில அரசின்சில கல்வி நிறுவனங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாட்டில்அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதில் இன்ஜினியர்களின் பணி மகத்தானது.
கேரள மக்களின் தீபாவளி என போற்றப்படும் ஓணம் பண்டிகை ஆவணி மாத வளர்பிறையில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படும். மலையாள நண்பர்களுக்கு திருவோணம் நாளன்று ஓணம் வாழ்த்துக்கள்.
மாணவர்களுக்கு கல்வி, நற்பண்புகளை கற்றுத்தரும் ஆசிரியர் பணி கடவுளுக்கு இணையானது என போற்றப்படுகிறது. ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்த ராதா கிருஷ்ணன், ஆசிரியர் பணியில் ஈடுபாடு கொண்டவர். அவரது பிறந்த தினமான செப்.5, இந்தியாவில் தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு ஆகஸ்ட் 26ம் தேதியா? ஆகஸ்ட் 27ம் தேதியா?தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதர்த்தி வழிபாடு மட்டுமே சந்திர உதய்த்தை அடிப்படையாக வைத்து வழிபட வேண்டியதாகும். வளர்பிறை சதுர்த்தி வழிபாடு என்பது சதுர்த்தி திதியை அடிப்படையாக வைத்து செய்யப்படும் வழிபாடு ஆகும். அதனால் ஆகஸ்ட் 27ம் தேதி தான் சூரிய உதய நேரத்தில் சதுர்த்தி உள்ளது.ஆகஸ்ட் 26ம் தேதி பிற்பகலுக்கு பிறகே சதுர்த்தி திதி துவங்குகிறது. இதனால் ஆகஸ்ட் 27ம் தேதியை தான் விநாயகர் சதுர்த்தியாக கணக்கில் எடுத்துக் கொண்டு வழிபட வேண்டும்.ஆகஸ்ட் 27ம் தேதி காலை 11 மணி முதல் பகல் 01.40 வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினைசெய்யலாம். இதுவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கான சுபமுகூர்த்தநேரமாக குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவின் 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய 'சந்திரயான் 3' விண்கலத்தின் லேண்டர், 2023 ஆக. 23ல் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இப்பகுதியில் லேண்டரை இறக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா நிகழ்த்தியது. ஒட்டுமொத்தமாக அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பின் நிலவில் இச்சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடானது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக பிரதமர் மோடி இந்நாள் (ஆக.23) தேசிய விண்வெளி தினமாக கடைபிடிக்கப் படும் என 2023ல் அறிவித்தார்.
மனிதர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும் மலேரியா, டெங்கு உள்பட பல நோய்களுக்கு உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசுக்களே காரணம். 'பிளாஸ்மோடியம்' ஒட்டுண்ணி 'அனாபெலஸ்' பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இது ஒரு வரை கடிப்பதன் மூலம் தான் மலேரியா பரவுகிறது என்ற அறிவியல் உண்மையை பிரிட்டன் டாக்டர் ரொனால்டு ரோஸ் 1897 ஆக., 20ல் கண்டுபிடித்து, 1902ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நாள் உலக கொசு ஒழிப்பு தினமாக' கடைபிடிக்கப் படுகிறது.
மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தைபோற்றும் விதமாககொண்டாடப்படுவதே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகும்.இது மக்களுக்கு கலாச்சாரம்,ஒற்றுமை,தெய்வீக குணங்கள்ஆகியவற்றை கற்றுத்தரும் விதமாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, ரோகிணி அஷ்டமிஉள்ளிட்ட பலபெயர்களால் இந்தபண்டிகை உலகம்முழுவதிலும் உள்ளமக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
பல வண்ணங்கள், வடிவங்கள் உணர்வுகள், மொழிகள் ஆகியவை உள்ளன. எனினும், அனைத்து இந்தியர்கள் ஒன்று!சுதந்திர பூமியில் நாம் சுவாசிப்பதற்கு தங்கள் சுவாசங்களை இழந்த தியாகிகள் அனைவருக்கும் நன்றி செலுத்துவோம் இந்த நன்னாளில்.தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.