25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இன்றைய தினம்

Jan 24, 2023

தேசிய பெண் குழந்தைகள் தினம்

 தற்போதைய சமூகம் மாறத் தொடங்கி பெண் குழந்தையை சுமையாக கருதாமல், அவர்களை வீட்டில் இருக்கும் தேவதையாக கொண்டாட வேண்டும்.  . 2008 இல்  இத்தினம் உருவாக்கப்பட்டு பெண் குழந்தைகளுக்கு,சம வாய்ப்பு, உரிமை வழங்க வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் ஜன. 24ல் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, சுகாதாரம், சத்தான உணவு உள்ளிட்ட அனைத்தும், பாலின பாகுபாடின்றி. பெண் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. 

Jan 14, 2023

தைத் திருநாள்

தைமகள் பிறப்பில் ,  தங்கும் பொங்கல் தழைத்து ஓங்க , வீடுகள் தோறும் மகிழ்ச்சி பொங்க , குடும்பத்தில் ஒற்றுமை நிலவ ,  அமைதி மேலோங்க  ,மஞ்சள் கொத்தோடு , மாமரத்து  இலையோடு ,  இஞ்சித் தண்டோடு ,  எறும்பூறும் கரும்போடு , புதுப்பானை வாயெல்லாம் பால் பொங்க , எல்லாமும்  , எப்பொழுதும் பெற்று வாழ ,  இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்  . 

Dec 31, 2022

HAPPY NEW YEAR - 2023

ஆங்கிலப் புத்தாண்டு வருடம் 2023 பிறக்கிறது. நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள நாம் எப்பொழுதும் நம்முடைய மனதைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். 

Dec 17, 2022

ஆனந்தாஸ் திரு. M.V. பீமராஜா அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழா

ஆனந்தாஸ் திரு. M.V. பீமராஜா அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழா18.12.2022  அன்று காலை 9.35 மணி  ஆனந்தா கார்டன் திருமண மண்டபம், இராஜபாளையம்.

Dec 14, 2022

உதயநிதி ஸ்டாலின் பதவிப் பிரமாணம்

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்    உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 14) தமிழக அமைச்சராக.ஆளுநர் மாளிகை தர்பார்   அரங்கில் 9.30 மணியளவில் ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை,அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மூவரும் நிகழ்ச்சி அரங்கிற்கு ஒன்றாக வருகை தந்தனர். ‘உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்’ எனக் கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து, என்றும் பணியாற்றுவேன் என்றும் ட்விட்டரில் உதயநிதி பதிவிட்டுள்ளார்.உதயநிதி பதவியேற்பு நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் ,துர்கா ஸ்டாலின்,கிருத்திகா உதயநிதி,சபரீசன் உள்பட எம்.பிக்கள் கனிமொழி,தயாநிதிமாறன் ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு தி.முக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Dec 06, 2022

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா

அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் இந்த நிகழ்வை காணீலட்சோப லட்ச பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை.  அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். மாலையில் 2668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை 4 மணி அளவில் அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து "நமசிவாய" சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும் . திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர். 

Oct 03, 2022

சரஸ்வதி பூஜை

புராணங்கள் அடிப்படையில் மகிஷாசுரன் என்ற அசுரனிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மூன்று தேவியர்களும் ஒன்பது நாட்கள் தவமிருந்து இறுதியில் மூவரும் இணைந்து ஒரே தேவியாக உருவெடுத்து மகிஷாசுரன் என்ற அசுரனை அழித்து மகிஷாசுரமர்த்தினியாக காட்சியளித்தனர். இதனையே நவராத்திரி நமக்கு உணர்த்துகிறதுநவராத்திரியின் இறுதி நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையை இரவு நேரத்தில் பூஜித்து வழிபடுவதே சிறந்தது. இந்த 8 நாட்களும் விரதமிருந்து பூஜித்து வழிபடுவது இறுதி நாளாகிய சரஸ்வதி பூஜை அன்று நிறைவேறும் என்பது ஐதீகம்.இங்கு சரஸ்வதியின் அருகில் கல்வி மற்றும் இறை வழிபாடு சார்ந்த புத்தகங்களையும், விஸ்வகர்மாவின் பக்கத்தில் நமது தொழில் சார்ந்த கருவிகளையும் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்ய வேண்டும்.பின் சர்க்கரை பொங்கல், கடலை போன்ற நெய்வேத்யங்கள் சாத்தி இறைவனுக்கு தூப தீபம் காட்டி நமக்கு தெரிந்த மந்திரங்களை ஓதியும், கடவுள் பக்தி பாடல்களைப் பாடியும் மற்றும் 16 பேறுகளையும் வேண்டியும் இறைவனை தியானித்து அம்மன் அருளை  அனைவரும்  பெற   வாழ்த்துகிறோம். 

Sep 27, 2022

உலக சுற்றுலா தின விழா - 2022

ஆண்டுதோறும்  உலகம் முழுவதும் செப்டம்பர் 27 ஆம் நாள் உலக சுற்றுலா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உலக சுற்றுலா தினம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு உலக சுற்றுலா தினத்தை தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தினம் நடத்துவதற்கு அனுமதித்துள்ளது.   மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரையின்படி விருதுநகர் மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும்  விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி (தன்னாட்சி) வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து இவ்வாண்டு உலக சுற்றுலா தினம் 27-09-2022 - ல் கொண்டாடப்பட்டது.    இந்நிகழ்வில் உலக சுற்றுலா தின இவ்வாண்டின் கருப்பொருளான  “சுற்றுலா மறுசிந்தனை” என்ற தலைப்பில் விருதுநகர்; மாவட்டத்தில் அமைந்துள்ள வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி (தன்னாட்சி) வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை இணைந்து மாணவியர்களுக்கிடையே கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா நிகழ்ச்சி  27-09-2022 அன்று காலை 10.00 மணிக்கு  நடைபெற்றது.       மேலும், சுற்றுலா தொழிலில் “சுற்றுலா மறுசிந்தனை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரி புரவலர் கல்லூரி முதல்வர் சு.மா.மீனாராணி மற்றும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை முனைவர் செ.நாகஜோதி அவர்கள், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி (தன்னாட்சி)  திரு.ந.அன்பரசு, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர்(முகூபொ) அவர்கள், சிறப்பு பங்கேற்பாளர்கள் குயின்ஸ் திரு.R.தங்கபாண்டியன் ஹோட்டல் நிர்வாகி, அருப்புக்கோட்டை அவர்கள் மற்றும் திரு.R.ராஜாபவளம் நாராயணன் நிர்வாக இயக்குனர், Coral Travels wings,  விருதுநகர் அவர்கள், சிறப்புரை முனைவர்.எ.அப்சரா சலித்மேரி சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை அவர்கள் உட்பட இக்கல்லூரி மாணவியர்கள்  கலந்து  கொண்ட   கருத்தரங்கம் நடைபெற்றது.   உலக சுற்றுலா தினம் தொடர்பாக  மூலம் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு முதல்; மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு இன்று(27-09-2022) விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் மற்றும்  பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 

Sep 17, 2022

பிரதமர் மோடி பிறந்த நாள்

 பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர்17ஆம் தேதி(சனிக்கிழமை) பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கி,720 கிலோ மீன்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவு முடிவு செய்துள்ளது.சென்னையிலுள்ள அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையை கண்டறிந்து, பிரதமரின் பிறந்தநாளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்க முடிவு செய்துள்ளது என மாநில மீன்வளம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் எல்.முருகன் வியாழக்கிழமை (செப்டம்பர் 15) தெரிவித்தார்.  "ஒரு மோதிரத்திற்கு சுமார் 2-கிராம் தங்கம் சுமார் ரூ. 5,000 ஆகும்," என்றார்.அன்றைய தினம் குறிப்பிட்ட மருத்துவமனையில் 10-15 பிரசவங்கள் நடந்ததாக கட்சியின் உள்ளூர் பிரிவு மதிப்பிட்டுள்ளது."இது இலவசம் அல்ல". அன்று பிறந்த குழந்தைகளை வரவேற்பதன் மூலம் நமது பிரதமரின் பிறந்தநாளை நாங்கள் கொண்டாடுகிறோம்,'' என்றார்.ஆகஸ்ட்30 அன்று கட்சியின் தேசியத் தலைவர் அருண் சிங் அனுப்பிய மூன்று பக்க கடிதத்தின்படி, அனைத்து மாநிலங்களும் முந்தைய ஆண்டுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளைப் போலவே இந்த விழாவையும்‘சேவா பக்வாடா’ என்று குறிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் கீழ், இரத்த தானம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் உள்ளிட்ட செயல்பாடுகள் அடங்கும். கேக் வெட்டவோ, 'ஹவன்' நடத்தவோ கூடாது என, கட்சித் தலைமை கடுமையாக கேட்டுக் கொண்டது.720 கிலோ மீன்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியை தேர்வு செய்துள்ளோம். பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜ்னா(PMMSY) திட்டம் மீன் நுகர்வை ஊக்குவிக்கிறது, எனவே நாங்கள் அதை விநியோகிக்கிறோம். நிச்சயமாக, பிரதமர் சைவ உணவு உண்பவர் என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்று மீன்வளத்துறை அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு மோடிக்கு 72 வயதாகிறது என்பதால் அவர்கள் 720 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளனர்.பிரதமரின் பிறந்தநாளில் திட்டமிடப்பட்ட பிற நிகழ்வுகள்:பிரதமரின் பிறந்தநாள் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நாளாகவும் குறிக்கப்படும்.இதற்கிடையில், தேசிய தலைநகரில் இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் இரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனபிரதமர் மோடி நீண்ட நாட்கள் வாழ்ந்து, நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்'  என  ராஜபாளையம் TIMES வாழ்த்துகின்றது .“HAPPY BIRTHDAY MODIJI”

Sep 12, 2022

சங்கடஹர சதுர்த்தி

 வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும்,வணங்குவதற்கு எளியராகவும், இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும், சங்கடஹர சதுர்த்தி விரதம், கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம் "சங்கஷ்டம்"! என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள் வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம், இன்று கடைப்பிடிக்கப்படவிருக்கிறது. பெளர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம் மாலையும், இரவும்  விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News