25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இன்றைய தினம்

Sep 10, 2022

இமானுவேல் சேகரன் நினைவு தினம்

விருதுநகர் மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு இமானுவேல் சேகரன் நினைவு தினமான 11.09.2022  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த செல்லும் வாகனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 உரிமஸ்தலங்கள் ஆகியவற்றில் உள்ள மதுக்கூடங்கள் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது. 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules,  1981-ன்படி 11.09.2022 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக  மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள்(F.L-1), F.L-2 kw;Wk; F.L-3,   மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules,  1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 09, 2022

இங்கிலாந்து மகாராணி எலிசெபத் மறைவு

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார். பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பங்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது இவருக்கு தற்போது 96 வயதாகிறது. ஸ்காட்லாந்து நாட்டில் தற்போது ஓய்வு எடுத்து வரும் இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தை, இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் நேற்று நேரில் சந்தித்தார் மறைந்த மன்னர் பிலிப்பின் மனைவியான ராணி எலிசெபத் 1926ம் ஆண்டு ஏப்ரல் 21- ந் தேதி லண்டனில் பிறந்தவர்..1952ம் ஆண்டு மன்னர்6ம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு அரியணை ஏறினார். அப்போது அவருக்கு வயது 25..தனது 21 வயதில் கிறீஸ் இளவரசர் பிலிப்பை அவர் மணந்து கொண்டார்.கடந்த 2021ம் ஆண்டு இளவரசர் பிலிப் மரணமடைந்தார். இளவரசரின் மரணம் ராணியை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது.1952ம் ஆண்டு மன்னர்6ம் ஜார்ஜ் மறைந்த பின் அரசு பதவிக்கு வந்தவர் எலிசபெத். எலிசபெத் பிரிட்டனை நீண்டகாலம் ஆண்ட இரண்டாவது மகாராணி என்ற பெருமைக்குரியவர்.வயது மூப்பு மற்றும் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சமீபகாலமாக ராணி எலிசெபத் தன்னுடைய அரச கடமைகளை பெரும்பாலும் தனது வாரிசுகளிடம் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sep 02, 2022

உலக தேங்காய் தினம்

 செப்டம்பர் 2ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது.2021ஆம் ஆண்டில் உலக அளவில் ஒட்டுமொத்த தேங்காய் உற்பத்தியில்34 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்தது. பெரும்பாலும் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.   தினசரி சமையல்,இந்தியர்களின் கலாசாரம், பழக்க வழக்கங்களிலும் முக்கிய இடம்பெற்றுள்ளது. உடலில் நீரிழப்பைத் தடுப்பதற்கு தேவையான  பொட்டாசியம், சோடியம் இரண்டையும் இளநீர் வழங்குகிறது. இளநீரில் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு தாதுக்கள் அடங்கியுள்ளன.தேங்காய் நீரில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் உடலில் நீரிழப்பைத் தடுத்து சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.தேங்காயில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் அமினோ அமிலங்கள் அதிகமாகவும், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமாணத்திற்கு உதவி, சர்க்கரை அளவை இயல்பு அளவில் வைத்திருக்கவும், இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுவதாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.தேங்காயைப் போன்று அதிலிருந்து எடுக்கப்படும்எண்ணெயும், ஆரோக்கியமான கொழுப்பு ஆதாரமாக இருக்கிறது. இது உதடுகள், தோல் மற்றும் தலைமுடிக்கு ஒரு சிறந்த ஈரமூட்டியாக (மாய்ஸ்ச்சரசைர்) விளங்குகிறது. இந்துக்கள் பூஜைக்கு முக்கியமாக தேங்காய் இல்லாமல் பூஜை நிறைவு அடையாது.  

Mar 11, 2022

சாந்தா பிறந்த தினம்

, சென்னை அடையாறில் குடிசையில்  12 படுக்கைகளுடன் துவக்கப்பட்ட மருத்துவமனையை, சர்வதேச புகழ் பெற்ற மருத்துவமனை ஆக்கியதில், சாந்தாவின் பணி மகத்தானது. புற்று நோயாளிகள் கவனிப்பு, ஆய்வு தடுப்பு கட்டுப்பாடு என  50 ஆண்டுகளுக்கும் மேலாக சுழன்றார். உலக சுகாதார அமைப்பின், சுகாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அவரின் சேவைக்காக மகசேசே பத்மஸ்ரீ, பத்ம விபூசன் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றுள்ளார். 2021 ஜனவரி 19-ல் 94வது வயதில் காலமானார். இவர் மருத்துவத்தில் 1949-ல் எம்.பி.பி.எஸ். 1952-ல் டி.ஜி.ஒ, 1954-ல் மகளிர் இந்திய சங்க புற்றுநோய் நிவாரண நிதியத்தால், நிறுவப்பட்ட புற்றுநோய் நிறுவனத்தில், சேர்ந்து அதன் நிர்வாக தலைவரானார். உலகின் உயரிய விருதான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் எஸ். சந்திரசேகர் ஆகியோரின் குடும்பத்தில் 1927 மார்ச் 11-ல் பிறந்தவர் வி.சாந்தா. இன்று வி.சாந்தா அவர்களின் பிறந்த தினம்  

Mar 07, 2022

சர்வதேச மகளிர் தினம்

மகளிர் தின வாழ்த்துக்கள் 1913 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி முதல் மகளிர் தினமாக உலகம் முழுவதும் கடைபிடித்து வருகிறது. ஆண்களை விட பெண்கள் மென்மையானவர்களாக இருந்தாலும் செயலில், பொறுமையில், வேலையில், இரக்கத்தில்,  மனவுறுதியிலும் ஆண்களை விட  உயரமான இடத்தில் பெண்கள் உள்ளனர்.அடுப்படியில் வேலை செய்யவும், கணவனுக்கு அடி பணிந்தும், குழந்தைகளை வளர்ப்பதும் தான் பெண்களின் வேலை. அவர்களின் மனதில் தோன்றும் ஆசைகள் எல்லாம், குழி தோண்டி புதைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது எல்லாமே மாறி ,பெண்களை மதிக்கும் சமுதாயமாக, உலகம் மாறிக் கொண்டு வருகிறது. வெளியில் வேலை செய்யும் வாய்ப்புகளும், கல்வி கற்கும் வாய்ப்புகளும், பொருளாதார சுதந்திரமும் பெண்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.பெண்களும்' ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல'. எல்லா துறைகளிலும் நுழைந்து சாதனை படைத்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டு சோர்வு அடையாமல் ,தனித்து நின்று போராடி ,ஜெயிக்கும் பெண்களாக பிரகாசிக்கின்றனர். பெண்கள் எப்போது தனக்காக வாழ ஆரம்பிக்கப் போகிறார்களோ' அப்பொழுது மிகப் பெரிய மாற்றம் வரும்.105-year-old Pappammal organic farmer from Coimbatore is celebrating her Padma Shri award  பெற்ற சாதனைப் பெண் 

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News