தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவைக்கு. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அரை கப்,. பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு. சாம்பாருக்கு: துவரம்பருப்பு - அரை கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் 1. தக்காளி - 3, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு. உப்பு ருசிக்கேற்ப. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். வறுத்துப் பொடிக்க: தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம் - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.செய்முறை:-உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.துவரம்பருப்பை. மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும். தக்காளியையும் சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளி கரைந்து வதங்கியதும் புளித்தண்ணீரை சேருங்கள். அதில் உப்பு, பெருங் காயம். கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள்.பிறகு. துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றுங்கள். வறுத்துப் பொடித்த பொடியைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மல்லித்தழை சேருங்கள். உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் தெளித்து. சிறிது உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள்.சாம்பாரில் இருந்து கால்பகுதி அளவு எடுத்து, அதனுடன் அரை கப் கொதிக்கும் தண்ணீரை சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிற மானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊறியதும் எடுத்து. ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதே போல செய்யுங்கள். பரிமாறும்பொழுது. சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்..
தேவையான பொருட்கள்- குட மிளகாய் 1 சிறியது (நறுக்கியது) கோதுமை மாவு 3/4 கப், கடலை மாவு 3/4 கப், கான் பிளவர் சோள மாவு 1/4 கப், ராகி மாவு 1/4 கப், இஞ்சி 1/4 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது, சீரக தூள் 1/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் 1/4 டீஸ்பூன், மிளகு தூள் பெப்பர் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. கீரை3 கப், பாலக்கீரை, முருங்கைக் கீரை, பொடியாக நறுக்கி வதக்கவும் .எந்த வகை கீரை இருந்தாலும் போடலாம் அல்லது இரண்டு வகை கீரை இருந்தாலும் கலந்து செய்யலாம்.செய்முறை- முதலில் நான்கு விதமான மாவுகள் , கீரை, குடமிளகாய் இவற்றை ஒரு பாத்திரத்தில்போட்டுதேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைய வேண்டும்.பின் இஞ்சி சீரகத்தூள் கரம் மசாலா தூள், மிளகுத்தூள், உப்பு போட்டு கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து தோசை மாதிரி வார்த்தால் சத்தான கீரை அடை ரெடி.
தேவையான பொருட்கள் -துருவிய பீட்ரூட் 1/4 கப், பொடியாக நறுக்கிய பீன்ஸ் 5 எண்ணிக்கை, ஜவ்வரிசி 1 கப், தேங்காய் துருவல் 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், உருளை கிழங்கு 1/4 கப் வேக வைத்து நறுக்கியது. உப்பு சுவைக்கேற்ப.செய்முறை- ஜவ்வரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து ஒரு வெள்ளை துணியில் உலர்த்தவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து பின்னர் இத்துடன் பீன்ஸ், துருவிய பீட்ரூட் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். வதங்கியவுடன் வேகவைத்த வேர்க்கடலை, உருளைகிழங்கு மிளகாய்தூள், உப்பு சேர்த்து கிளறவும். இத்துடன் ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து ஒன்றாக கிளறி தேங்காய் பூ தூவி பரிமாறவும்.
தேவையான பொருட்கள் -மக்காச்சோள ரவை 250 கிராம், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி 1 கப், அனைத்தும் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி 1/4 கப், குடமிளகாய் 1/4 கப், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டேபிள் ஸ்பூன், புதினா நறுக்கியது 1/4 கப், வரமிளகாய் 5 எண்ணிக்கை.செய்முறை- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய் தாளித்து, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, புதினா, குடமிளகாய், போட்டு நன்றாக வதக்கவும். இத்துடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இத்துடன் உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் மக்காச்சோள ரவை சேர்த்து கட்டி வராமல் அடிபிடிக்காமல் கிளறி, கொத்தமல்லியை தூவி இறக்கவும். இந்த உப்புமாக சத்து நிறைந்தது. எளிதில் தயாரிக்கக் கூடியது.
தேவையான பொருட்கள்- கேப்பை மாவு 1 கப், அரிசி மாவு 1கப்,எண்ணெய் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, தேங்காய் ஒரு மூடி துருவல் நாட்டுச் சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை தேவையான அளவுசெய்முறை- கேப்பை, அரிசி, மாவில் சுடுதண்ணீர் மற்றம் சிறிதளவு, எண்ணெய், தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். 10 நிமிடம் கழித்து பிழிந்து வேகவைக்கவும். வெந்தவுடன், தேங்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை போட்டு லேசாக கிளறினால் கேப்பை இடியாப்பம் ரெடி. காரமாக சாப்பிட விரும்பினால் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து, கேரட் துருவியது, பீன்ஸ், பட்டாணி, குடைமிளகாய் போட்டு வதக்கி, வெந்த கேப்பை இடியாப்பம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்- புழுங்கல் அரிசி 2 கப், உளுந்து 1/4 கப், கடலை பருப்பு 1 டீஸ்பூன், துவரம்பருப்பு 1 டீஸ்பூன், வெந்தயம் 1/2 டீஸ்பூன், புதினா 1 கட்டு, மல்லிதழை 1 கட்டு, இஞ்சி 1 துண்டு, மிளகாய் 4, வெண்ணெய் 1/2 கப்செய்முறை -அரிசி, உளுந்து, துவரம்பருப்பு, கடலைபருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம், ஊற விடுங்கள், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், உப்பு சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். தோசைகல்லில் தோசை போடும்போது வெண்ணை ஊற்றி வார்த்து எடுத்து சாப்பிட்டால் சுவையில் நாக்கு மயங்கும்.அரிசிக்கு பதிலாக முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்தும் இதே முறையில் தோசை வார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:பப்பாளி 2 துண்டு, காய்ச்சிய பால் 1 டம்ளர் (ஆற வைத்தது)பேரீச்சம் பழம் 4செய்முறை:- பப்பாளியை தோல்சீவி விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும்.அதில் பால், பேரீச்சம்பழம் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி குடிக்கலாம்.பப்பாளி ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொண்டது. மலச்சிக்கலைப்போக்கும்.நோய்எதிர்ப்புசக்திகொடுக்கும்.அடிக்கடிசளிமற்றும்இருமல்உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறந்தது
தேவையான பொருட்கள்-கேரட்1, ஆப்பிள் ½பழம், தர்பூசணி 2 துண்டு,மாதுளை பாதி, அன்னாசிப்பழம் 1 துண்டு, சாத்துகுடி 1, இஞ்சி சிறிதளவு, தேன் அல்லது (உப்பு, மிளகு, புதினா) தேவையான அளவுசெய்முறை-கேரட்,அன்னாசி, சாத்துகுடி, ஆப்பிள், தர்பூசணி, மாதுளை, இஞ்சி எல்லாவற்றையும் தோல்சீவி மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி உப்பு, மிளகுத்தூள் அல்லது தேன் கலந்து பருகலாம்.வைட்டமின் பி அதிகம் கொண்டது. அதிகம் நார்ச்சத்து கொண்டது.
தேவையான பொருட்கள்-சப்போட்டா 6, தயிர் ½ கப், சர்க்கரை3 டீஸ்பூன், உப்பு 1 சிட்டிகை, பேரீச்சம்பழம் 10, செய்முறை:-சப்போட்டாவை தோல்சீவிக் கொள்ளவும். பேரீச்சம்பழத்தில் கொட்டை நீக்கி கொள்ளவும்.சப்போட்டா, தயிர், சர்க்கரை, உப்பு, பேரீச்சம்பழம் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பறிமாறவும்.இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் கொண்டது.
தேவையான பொருட்கள்-பைனாப்பிள் ஜுஸ் 1கப், சாத்துக்குடி ஜூஸ் ½கப்,தேங்காய் பால் 1/2 கப்,சர்க்கரை தேவைக்கேற்பசெய்முறை-அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும், நுரை பொங்க ஜூஸ் சேர்த்து அடித்து பருகலாம்.மிக்ஸியில் போடும்போது எல்லா ஜூசும் ப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். அதிக நேரம் வெளியில் வைத்திருக்கக்கூடாது.இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவர். வைட்டமின் சி அதிகமுள்ள பானம். எலும்பு உறுதியாகும். குடல் நோய்களுக்கு நல்லது.