25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சமையல்

Mar 08, 2024

கேப்பை இடியாப்பம்

 தேவையான பொருட்கள்- கேப்பை மாவு 1 கப், அரிசி மாவு 1கப்,எண்ணெய் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, தேங்காய் ஒரு மூடி துருவல் நாட்டுச் சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை தேவையான அளவுசெய்முறை- கேப்பை, அரிசி, மாவில் சுடுதண்ணீர் மற்றம் சிறிதளவு, எண்ணெய், தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். 10 நிமிடம் கழித்து பிழிந்து வேகவைக்கவும். வெந்தவுடன், தேங்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை போட்டு லேசாக கிளறினால் கேப்பை இடியாப்பம் ரெடி. காரமாக சாப்பிட விரும்பினால் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து, கேரட் துருவியது, பீன்ஸ், பட்டாணி, குடைமிளகாய் போட்டு வதக்கி, வெந்த கேப்பை இடியாப்பம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி சாப்பிடலாம்.

Mar 08, 2024

GREEN தோசை

தேவையான பொருட்கள்- புழுங்கல் அரிசி 2 கப், உளுந்து 1/4 கப், கடலை பருப்பு 1 டீஸ்பூன், துவரம்பருப்பு 1 டீஸ்பூன், வெந்தயம் 1/2 டீஸ்பூன், புதினா 1 கட்டு, மல்லிதழை 1 கட்டு, இஞ்சி 1 துண்டு, மிளகாய் 4, வெண்ணெய் 1/2 கப்செய்முறை -அரிசி, உளுந்து, துவரம்பருப்பு, கடலைபருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம், ஊற விடுங்கள், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், உப்பு சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். தோசைகல்லில் தோசை போடும்போது வெண்ணை ஊற்றி வார்த்து எடுத்து சாப்பிட்டால் சுவையில் நாக்கு மயங்கும்.அரிசிக்கு பதிலாக முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்தும் இதே முறையில் தோசை வார்க்கலாம்.

Mar 01, 2024

பப்பாளி மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:பப்பாளி 2 துண்டு, காய்ச்சிய பால் 1 டம்ளர் (ஆற வைத்தது)பேரீச்சம் பழம் 4செய்முறை:- பப்பாளியை தோல்சீவி விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும்.அதில் பால், பேரீச்சம்பழம் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி குடிக்கலாம்.பப்பாளி ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொண்டது. மலச்சிக்கலைப்போக்கும்.நோய்எதிர்ப்புசக்திகொடுக்கும்.அடிக்கடிசளிமற்றும்இருமல்உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறந்தது

Mar 01, 2024

ஐம்பழச் சாறு

தேவையான பொருட்கள்-கேரட்1, ஆப்பிள் ½பழம், தர்பூசணி 2 துண்டு,மாதுளை பாதி, அன்னாசிப்பழம் 1 துண்டு, சாத்துகுடி 1, இஞ்சி சிறிதளவு, தேன் அல்லது (உப்பு, மிளகு, புதினா) தேவையான அளவுசெய்முறை-கேரட்,அன்னாசி, சாத்துகுடி, ஆப்பிள், தர்பூசணி, மாதுளை, இஞ்சி எல்லாவற்றையும் தோல்சீவி மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி உப்பு, மிளகுத்தூள் அல்லது தேன் கலந்து பருகலாம்.வைட்டமின் பி அதிகம் கொண்டது. அதிகம் நார்ச்சத்து கொண்டது.

Mar 01, 2024

சப்போட்டா மசி

 தேவையான பொருட்கள்-சப்போட்டா 6, தயிர் ½ கப், சர்க்கரை3 டீஸ்பூன், உப்பு 1 சிட்டிகை, பேரீச்சம்பழம் 10,  செய்முறை:-சப்போட்டாவை தோல்சீவிக் கொள்ளவும். பேரீச்சம்பழத்தில் கொட்டை நீக்கி கொள்ளவும்.சப்போட்டா, தயிர், சர்க்கரை, உப்பு, பேரீச்சம்பழம் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பறிமாறவும்.இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் கொண்டது.

Mar 01, 2024

பைனாப்பிள் ,தேங்காய் பால் ஜுஸ்

தேவையான பொருட்கள்-பைனாப்பிள் ஜுஸ் 1கப், சாத்துக்குடி ஜூஸ் ½கப்,தேங்காய் பால் 1/2 கப்,சர்க்கரை தேவைக்கேற்பசெய்முறை-அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும், நுரை பொங்க ஜூஸ் சேர்த்து அடித்து பருகலாம்.மிக்ஸியில் போடும்போது எல்லா ஜூசும் ப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். அதிக நேரம் வெளியில் வைத்திருக்கக்கூடாது.இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவர். வைட்டமின் சி அதிகமுள்ள பானம். எலும்பு உறுதியாகும். குடல் நோய்களுக்கு நல்லது.

Mar 01, 2024

தர்பூசணி கூலண்ட்

தேவையான பொருட்கள்- தர்பூசணி (நறுக்கியது) 5 கப் புதினா 1/4 கப் ,உப்பு, மிளகு தூள், ஜல்ஜீரா 1/2 டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, சர்க்கரை 3 டேபிள் ஸ்பூன்செய்முறை-அனைத்தையும் நன்கு அரைத்து வடிகட்டி பருகலாம்.தர்ப்பூசணி உடலுக்கு குளிர்ச்சி தரும். இஞ்சி ஜீரண சக்தியை அதிகரிக்கும். நாவறட்சியைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் கொண்டது. 

Mar 01, 2024

இளநீர் ஜூஸ்

தேவையான பொருட்கள்:வழுக்கை இளநீர் -1 (இளநீரின் நீரும், சதைப்பகுதியும்)மாதுளை முத்து 1 கைப்பிடிபனங்கற்கண்டு (அ) வெள்ளை சர்க்கரை தேவையான அளவுசெய்முறை:அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பருகலாம்.வெய்யில் காலத்தில் அடிக்கடி பருகலாம். உடல் சூட்டைத் தணிக்கும். உடல் எடையைக் குறைக்கும். சிறுநீரகம் சரியாக இயங்க உதவும். உடலில் அமிலச் சத்து அதிகம் இருப்பவர்கள் இதை அதிகம் குடிக்கலாம். 

Feb 23, 2024

வெண்டைக்காய் பச்சடி

தேவையானவை: புளிக்காத புது தயிர் - ஒரு கப், வெண்டைக்காய் 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 2, உப்பு -தேவைக்கு. தாளிக்க-  கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் -தேவையான அளவு.செய்முறை: வெண்டைக்காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும் பொரித்து சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து கலந்து வையுங்கள். பரிமாறுவதற்கு சற்று முன்பு, பொரித்த வெண்டைக்காயைத் தயிர்க் கலவையில் சேர்த்து பரிமாறுங்கள். மிக ருசியான தயிர்பச்சடி இது.

Feb 23, 2024

தக்காளி - தேங்காய் பச்சடி

தேவையானவை: புளிக்காத தயிர் - ஒரு கப், தேங்காய் துருவல் அரை கப், தக்காளி (நல்ல சிகப்பு நிறம்)-2. பச்சை மிளகாய் - 2 இஞ்சி ஒரு சிறு துண்டு. உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்.செய்முறை:இஞ்சி, பச்சை மிளகாய். தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தயிருடன் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து சேருங்கள். விருப்பமுள்ளவர்கள், மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கோடைக்கு ஏற்ற குளுகுளு தயிர்பச்சடி இது. (தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தும் சேர்க்கலாம்).

1 2 ... 62 63 64 65 66 67 68 69 70 71

AD's



More News