சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி
தேவையான பொருட்கள் :
15 சிலைஸ் சக்கரை வள்ளி கிழங்கு, 1கப்கடலை மாவு,1/4 கப் அரிசி மாவு, 2 டீஸ்பூன் மிளகாய் தூள்,
1சிட்டிகை சமையல் சோடா,தேவைக்குஉப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை ;
முதலில் சக்கரை வள்ளி கிழங்கை அதன் தோல் சீவி நன்றாக கழுவி உருளை கிழங்கு, அல்லது வாழைக்காய் பஜ்ஜி போல் கனம் குறைத்து கட் செய்து வைத்துக்கவும். கடலைமாவை மிளகாய் தூள், சமையல் சோடா, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
ஸ்டவ்வில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீடியம் ஹீட்டில் வைத்து கிழங்கை பஜ்ஜி மாவில் தோயத்து சூடான எண்ணையில் வறுத்து எடுக்கவும்.
நன்கு வெந்து இரண்டு பக்கமும் திருப்பி, நன்கு மொறு மொறுப்பானதும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும். பிரெட் பஜ்ஜி போல் சிறு இனிப்பு சுவையில் மிக அருமையாக இருக்கும். இந்த சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி தேங்காய் தக்காளி சட்னியுடன் சேர்த்து சுவைக்கவும்.
0
Leave a Reply