பீட்ரூட் சாதம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினமும் ஒவ்வொரு விதமான உணவு வகைகளை மதியம் சாப்பிடுவதற்காக கொடுத்தனுப்ப வேண்டும். தினமும் ஒரு காய்கறிகளை வைத்து எளிமையான உணவு வகையை குறைந்த நேரத்தில் மிகவும் சுவையாக செய்து முடிக்கலாம். காலையில் எழுந்தவுடன் சாதம், குழம்பு, பொரியல் என்று செய்வதற்கு சற்று நேரம் அதிகமாக செலவாகும். குக்கரில் EASY யா சாதத்தை எப்படி செய்ய வேண்டும்
தேவையான பொருட்கள்: பீட்ரூட் – 200 கிராம், பாஸ்மதி அரிசி – ஒன்றரை டம்ளர், சின்ன வெங்காயம் – 15, இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், ஏலக்காய் – 1, கிராம்பு – 1, பட்டை சிறிய துண்டு – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை: பாஸ்மதி அரிசியை இரண்டு முறை தண்ணீரில் கழுவி, மறுபடியும் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பீட்ரூட்டை தோல் சீவி தேங்காய் துருவல் பயன்படுத்தி துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அது போல பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து, அடுப்பின் மீது ஒரு குக்கரை வைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு அரை ஸ்பூன், சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பின் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்பு இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி அரிசியை மட்டும் இதில் சேர்க்க வேண்டும். அதன் பிறகு கொத்தமல்லி சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு குக்கரை மூடி விடவேண்டும். குக்கரில் பிரஷர் வந்ததும் விசில் போட வேண்டும். 2 விசில் வரும் வரை அப்படியே விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் சாதம் தயாராகிவிட்டது. இவ்வாறு பீட்ரூட் சாதத்தை நீங்களும் ஒருமுறை குக்கரில் செய்து பாருங்கள். மிகவும் அற்புதமாக இருக்கும்.
0
Leave a Reply