பூண்டு சாதம்
தேவையான பொருட்கள்:
சாதம்- 1 கப் , தோல் உரித்த பூண்டு - ஒரு கைப்பிடி, , தக்காளி-3, ப.மிளகாய் – 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – சிறிது, சீரகம் - அரை ஸ்பூன், கடுகு - அரை ஸ்பூன், நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் ஒரு கைப்பிடி தோல் உரித்த பூண்டு,ப.மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி-3, சிறிது புதினா சேர்த்து நன்கு வதக்கவும். சூடு ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்து, இன்னொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் கறிவேப்பிலை, அரைத்த பேஸ்ட்உப்பு, வேகவைத்த சோறு சேர்த்து கிளறி மேலாக கொத்தமல்லி தூவி, சிறிது நெய் ஊற்றி பரிமாறலாம். .பூண்டு சாதம் ரெடி. அப்பளத்தோடு சாப்பிடசுவையாக இருக்கும்.
0
Leave a Reply