பிரெட் பஜ்ஜி
தேவையான பொருட்கள் ;
12 பிரெட் துண்டுகள்( கட் செய்தது). , தேவைக்குபோண்டாமிக்ஸ் மாவு,ருசிக்குஉப்பு , தேவையான அளவு தண்ணீர் , பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை :
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிரெட்டை 2 துண்டுகளாக கட் செய்யவும்,
பௌலில் பஜ்ஜி மிக்ஸ் மாவு, தண்ணீர் உப்பு சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கவும்.
கரைத்த மாவில் பிரெட் துண்டை போட்டு நன்கு எல்லா பக்கமும், படும்படி,தோய்த்துக் கொள்ளவும்.
எண்ணெய் நன்கு சூடானதும், அடுப்பை சிறு தீயில் வைத்து, தோய்த்த பிரெட்
துண்டுகளை எண்ணெயில் போட்டு, நன்கு பொரிக்கவும்,
பொரித்ததை எண்ணெய் வடிய வைக்கும் கூடையில் எடுக்கவும்.
இப்போது, சுவையான, சுலபமான,பிரெட் பஜ்ஜி தயார்.குளிர் காலத்திற்கு ஏற்ற ஈவ்னிங் சிற்றுண்டி.
0
Leave a Reply