உருளைக் கிழங்கு சாதம்
தேவையான பொருட்கள் :
சாதம்- 1 கப் , உருளைக்கிழங்கு - 2 பொடியாக நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, வெங்காயம் - 2 நறுக்கியது, நெய் - 2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்,மிளகாய் தூள் - அரை ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். அதோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, வேக வைத்த சோறை சேர்த்து நன்கு கிளற உருளைக் கிழங்கு சாதம் ரெடி..
0
Leave a Reply